Pulampal

Pulampal

Thursday, August 03, 2006

வழுவிப் போகின்ற நம் பண்பாடுகள்

- சஞ்சீவி சிவகுமார் -

ஓர் இனத்தினை ஆதாரப்படுத்துகின்ற காரணிகளில் மொழிஇ
பண்பாடுஇ கலைஇ கலாசாரப் பாரம்பரிய தனித்துவங்கள்
முக்கியமானவையாகும். அவை நிகழ்வுகளின் குறியீடுகளாக நின்று
நாகரீகத்தின் செழுமையைத் துலக்கமாய்க் காட்டுகின்றன.
தமிழரின் நாகரீகம் செழுமை மிக்கது: வலிமையானது. ஆயினும்
பண்பாட்டுக்காரணிகளைப் பக்குவப்படுத்தாமையும் அந்நிய
கலாசாரங்களையும் ஆர்;வலப்படுத்த வேண்டுமென்ற பரந்த நோக்கு
அல்லது அத்தகைய நோக்குடையவர்களாகத் தம்மை இனங்காட்டிக்
கொண்ட தன்மைஇ பிற நாகரீக ஈர்ப்பு என்பன காரணமாகவும் கால
ஓட்டத்தில் தமிழரின் நாகரீகமும் பண்பாடும் பல மாறுதல்களைப்
பெற்றுக் கொண்டன. குடியேற்றவாதத்தின் தாக்கத்தால் ஆங்கில
மொழி சர்வதேச மொழியாக ஏற்றம் பெற்றதுப்போல ஆங்கில
நாகரீகப்பாணிகளை பெரும்பான்மைக் கூறாகக் கொண்ட பல்தேச
கூட்டு நாகரீகம் என்று கூறக்கூடிய பொது நாகரீகப்பாங்கு உலகளாவி
வளர்ந்துக்காணப்படுவது தவிர்க்க முடியாதது. ஆயினும்
அடையாளங்களாகக் காணப்படுகின்ற ஒரு சில பண்பாடுகளையாவது
காப்பாற்ற வேண்டிய வரலாற்றுக்கடப்பாடு நம் ஒவ்வொருவருக்கும்
உண்டு.

தமிழரின் பண்பாடு சிதைவுபட்டுப் போனதற்கு நாம் ஒரு
வேற்றுக்காரணியையும் ஒப்புவிக்கலாம். இது காட்டமான
காரணியாகவும் கூடப்படுகின்றது. மரபு வழி வந்த சமூகச்சட்டங்கள்
விரிந்து கட்டிக்கொண்டு சாதீயம் பேசியதும் ஆணாதிக்க
வட்டத்துக்குள் விடுபட முடியாது நின்றமையுமான பிற்போக்கு
குணாம்சமே அது. சமய மேலாதிக்கத்தின் மீதும் பண்பாடுகளின்
மீதும் தமிழ் சமூகத்தின் ஒரு கூறு மக்கள் வெறுப்புற அது வழி
வகுத்தது. மரபுஇ இசைஇ நடனம் இ ஓவியம் முதலான கலைகள் உயர்
ஜாதியினர்க்கு உரித்தான கலைகள் என்ற உக்கிர நிலைப்பாடு
காரணமாக ஐரோப்பிய கலைப்பண்பாட்டு வடிவங்களின் மீதான
தாக்கமும் ஈடுபாடும் தமிழர்களிடையே ஆழமாகப் பரவியது.
இவ்வாறு தாழ்சாதியினரென்று ஒதுக்கப்பட்ட சமூகத்தினர்
கல்வியில் உயர்ந்து சமூக நிருமானத்தில் முக்கியம் பெறுகையில்
ஐரோப்பிய கலைமுறைமைகளின் வளர்ச்சி தமிழர்களிடம்
மேலோங்கியதுடன் தமிழர் பண்பாடுகளை இம்மக்கள் சார்ந்தது
அல்லது சாதீயம் பேசுவதென விலக்கியதும் நாஸ்திகத்தில் உறுதி
கொண்டதுமான நிகழ்வுகள் இடம் பிடித்ததை நாம் கண்டே ஆக
வேண்டும். உண்மையில் சமய அடிப்படைத்தனமும்
பிற்போக்குவாதமும் பண்பாட்டில் இருந்து வேறானவை. பண்பாடுகள்
நம் தனித்துவ இருப்புக்கும் நிலவுகைக்குமான அடையாளச்சின்னங்கள்
என்பதை நாம் ஆழ்ந்துணர வேண்டியது அவசியமாகும்.
இந்த வகையில் மாவிலை தோரண அலங்கரிப்பும் தமிழரின் நீண்ட
காலப்பண்பாடாகும். இப்போதெல்லாம் இது நிறமூட்டிய
பொலித்தீனுக்கு மாறி நம்மை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றது.
அலங்காரம் பண்பாட்டுக்கு மட்டுமன்றி அழகுக்குத்தான் என்ற
வாதமும் புதியன புகுதல் வழுவல்ல என்ற சமாதானமும் கூட இதற்கு
கூறப்படலாம். ஆனால் குருத்தோலையின் இளம் பச்சை நிறமும்
மனோரம்மிய அழகுடையது. குளிர்ச்சியான புறச்சூழலைத் தரும்
என்பதே இங்கு எனது கருத்து நிலை. ஆனால் நான் சொல்ல வந்ததுவோ
இக்கட்டுரையின் பிடிவாதமோ குருத்தோலை பொலித்தீன் என்ற
இந்த மாறுபாட்டிற்கு முரண்படுவது அல்ல. மாறாக பண்பாடு என்று
கருதிக்கொண்டு அல்லது சொல்லிக்கொண்டு குருத்தோலை தோரணம்
பின்னுபவர்கள் அதன் குறியீட்டை உணராது வழுவுவதே உளது
ஆதங்கமாகும்.

குருத்தோலையில் செய்யப்படும் பின்னல்முறை அங்கு நிகழ்வது மரண
வீடா அல்லது திருமண வீடா என்பதைக் குறியீடாகக் காட்டும்.
வெளி ஊரில் இருந்து வருபவர்களும் இரந்துண்போரும் ஒரே தெருவில்
இரு நிகழ்வுகள் நடந்தாலும் சரியான வீட்டை இனங்கண்டு கொள்ள
இப்பண்பாட்டு அலங்காரம் வழிவகுக்கிறது. ஆனால் இந்த
வேறுபாட்டை கூட கருதாது மனம் போன போக்கில் குருத்துக்கள்
பின்னப்படுவது பண்பாட்டை மறுக்கும் செயலாகும். இதை விட
பொலித்தீன் அலங்காரம் உத்தமமே.
அடுத்து மங்கல விளக்கேற்றுதல் சகல நிகழ்வுகளுக்கும் முன்னாகச்
செய்யப்படும் ஒரு நிகழ்வாகும். இது மேல் நோக்கியதாகச்
சுடர்களை ஏற்றுவதன் மூலம் நிகழ்வு முன்னோக்கியதாக அமைதல்
வேண்டும் என்ற உணர்வெழுச்சியைக் குறியீடாகக் கொண்டு

செய்யப்படுகின்றது. ஆனாலும் பல்வேறு நிகழ்வுகளில் ஒப்பனைக்கு
அதிதிகளைக் கௌரவப்படுத்தும் ஒரு சம்பிரதாயமாக மட்டும் மங்கல
விளக்கேற்றுதல் நடந்தேறி வருகின்றது. பல தட்டுக்களை கொண்ட
விளக்குகளாயின் முதலில் விளக்கேற்றுபவர் கீழ்
நிலைத்தட்டுக்களையே ஏற்றுதல் வேண்டும். இதன் மூலம்
மேல்நோக்கியதாக சுடர்கள் ஏற்றப்படுவது சாத்தியமாகும். ஆனால்
இந்த வரண்முறைக்கு மறுதலையாகவே பல்வேறு நிகழ்வுகளில் மங்கல
விளக்குகள் ஏற்றப்படுவதை அவதானிக்கலாம். இது எந்த பௌதீக
விளைவுகளையும் தராது என்பது யதார்த்த சிந்தனைக்கு சரி
என்றாலும் சம்பிரதாயம் எனபதற்காக பின்பற்றும் மரபினை
தவறுகளோடு செய்கிறோம் என்பது உறுத்தும் நிகழ்வே.
புpறந்த தின வைபவங்களில் ஒளிரும் மெழுகுதிரியை ஊதி அணைத்து
கேக் வெட்டுகிறோம். இப்படி தீபத்தை அணைத்து மங்கல நிகழ்வை
ஆரம்பிக்கும் மரபு தமிழர்களிடம் உண்டா? என்பது இங்கு பாரம்
மிக்க வினாவாகவே எழுகிறது. இதற்கு மாறாக தீபத்தை ஏற்றி அந்த
மங்கல ஒளியில் கேக் வெட்டலாமே என்னும் கருத்தும் சிலரிடம்
உண்டு.

பேணத்தகுந்த பண்டை மரபு முறைகள் குறித்தும் எதிர் காலத்தில்
அவற்றை நிலை நிறுத்துவது பற்றியும் பல்துறைகளிலும் சேகரிப்பு
ஊக்கம் முளைத்துள்ளது. இது பண்பாட்டு பேணலுக்கு பொருந்துவதாகும்.
இந்த கருத்து நிலைகளிலிருந்து பண்பாட்டை நோக்கும் போது
பண்பாடுகள் குறித்து மாறுபட்ட இரண்டு கருத்துருவாக்கங்கள்
உருவாகலாம். அதாவது பண்டை தொட்டு பேணப்படும் மரபுரிமைகள்தான்
பண்பாடா? அல்லது பண்படுத்துவதன் மூலம் காலங்காலமாக
மாற்றப்பட்டு நிலைநிறுத்தப்படும் சமூக நிலைப்பாடுகள்தான்
பண்பாடா? என்பனவே இவைகளாகும்.
பண்பாடுகள குறித்து நிலவுகின்ற பலத்தரப்பட்ட
வரைவிலக்கணங்களுத்கும் கருத்துக்களுக்கும் மத்தியில் சில
வேளைகளில் பண்பாட்டையும் நாகரீகத்தையும் கலாசாரத்தையும் ஒரே
விடயமாகப் பொதுமைப்படுத்தி கருதுவோரும் உளர். ஆழமாகப்
பார்க்கும்போது பண்பாடு அகம் சார்ந்த வெளிப்பாடு (உதாரணம்
அன்னதானம் செய்தலஇ; கனம் பண்ணுதல்) ஆகவும் நாகரீகம் புறம்
சார்ந்த வெளிப்பாடு (உதாரணம் ஆடைஇ; அணிகலம்) ஆகவும்
கலாசாரம் என்பது குறித்த சமூகத்தின் கலைகளும் ஆசாரங்களும்
பற்றி கருதுவதாகவும் அமையலாம். ஆயினும் இவை மூன்றும் ஒன்றுடன்
ஒன்று நெருங்கிய தொடர்பு கொண்டு திகழ்வதையும் காண முடியும்.
உதாரணமாகத் திருமணத்தின் பின்னர் தமிழ்ப்பெண்கள் கணவனை
நினைவுறுத்துவதாகக் குங்குமம் வைத்தல் என்ற மரபு அகமும் புறமும்
சார்ந்தது. ஆதலால் பண்பாடாகவும் நாகரீகமாகவும்
கொள்ளக்கூடியது. இவ்வாறு நிறையவே எடுத்துக்காட்டலாம்.
தாலிஇ குங்குமம் முதலான விடயங்களை ஆணாதிக்க மேலான்மையின்
சின்னமாகப் புறக்கணிப்பவர்களை பெண் நிலைச் சிந்தனையின்
எழுச்சியுடன் காண முடிகின்றது. உண்மையில் அனேகமாகப் பண்பாட்டு
விழுமியக்கோட்பாடுகள் இ ஆதிக்கத்திலிருந்த சிறுபான்மையினரான
உயர் ஜாதி மக்களாலும் ஆண்நிலை வக்கிர சிந்தனையாளர்களாலும்
பெரும்பான்மையான மீதி மக்களின் மீது திணிக்கப்பட்டது எனும்
குற்றச்சாட்டையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகவுள்ளது.
இந்நிலையில் பேராசிரியர்; மத்திய+ ஆர்னல்ட் கருதுவது போல
மென்மேலும் திருந்தி வரும் திருத்த நிலையே பண்பாடு என்று
கொண்டால் சாதியம் இ பெண்ணியம் மற்றும் சமயக்கருத்துக்களை
நிறுத்துப்பார்த்தல் முதலான கருத்து நலன்களில் திருத்தி
நிலைப்பெற்ற மாற்றப்( சமூக நலன் குறித்த முன்னேற்றம்)
போக்குக்கு தமிழர் பண்பாடும் இன்று வழி திறந்துள்ளதைக்
காணலாம். இந்த திருந்திய அறிவு நிலையில் (iவெநடடநஉவரயட
னநஎநடழிஅநவெ) கூர்மையான தம் சாதிய எதிர்ப்பைக்காட்ட
மங்கல பொருட்களுக்கு பதிலாக ஈர்க்குத்துடைப்பம் இபாதணி முதலான
பொருட்களை வைத்து விழாவை ஆரம்பித்த நிகழ்வு ஒன்றும்
அண்மையில் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்தது. இந்த
பண்பாட்டு முரண்படுகை பார்ப்பணியர் மனதிலும் பார்ப்பணியர்
மேலாண்மையை ஆதரிப்போரிடையிலும் மங்கல பண்பாட்டு பொருட்கள்
உயர்சாதியினர்க்கே உரிய குறியீட்டுக்கூறுகள் என்ற முனைப்பை
ஏற்படுத்துமே தவிர வேறு எதையும் ஏற்படுத்தாது என்றே எனக்கு
தோன்றுகிறது.

பண்பாடு பற்றிய ஸ்பென்ஸரின் கொள்கையின்படி வேறுபட்ட பல
நிலைப் பண்பாடுகள ஒருவழிப்போக்கான வளர்ச்சியின் பல
கட்டங்களே என்பதையும் ஒவ்வொறு காலகட்டத்தின் பண்பாட்டு
நிலைஇ பழைமை வரலாறு என்பவற்றின் விளைவு எனவும் அறிய முடியும்.

இங்குத்தான் பண்பாட்டு வளர்ச்சிகள் வேறுஇ வழுவல்கள் வேறு
என்பதை நாம் உணர வேண்டியுள்ளது. இறுக்கமான
சமூகக்கட்டுமானங்களும் சமூகப்பொருளாதார மாற்றங்களுமே பண்பாட்டு
மீறல்களுக்கு இட்டுச்செல்கின்றன.
உள்நாட்டு யுத்தங்கள் காரணமாகப் பொருளாதார வீழ்ச்சி
ஏற்படும்போது பயங்கரவாதம் தோற்றமாகின்றது. பெண்ணிலைவாதம்
ஆணாதிக்கத்தை உடைத்தபோது லெஸ்பியம் அடையாளம்
இடப்பட்டது.(மரபணு ரீதியில் 4-10 சதவீதக்; குடித்தொகையினர்
இயற்கையிலேயே பிறள்பாலுணர்வு உள்ளவர்களாக இருப்பதும்
கண்டறியப்பட்டுள்ளது. இது மதிக்கப்பட வேண்டும் என்பதையும் உணர
வேண்டும்). இவ்வாறான கால வழுவல்களையும் பண்பாட்டு
வழுவல்களுக்குள் ஆராயலாம்.

சில கட்டுமானங்களுக்குள் நின்று அதன் புறநிலைக் குறித்தும்
கருதிக்கொண்டு ஆராயாதவரை பண்பாடு பற்றிய ஆய்வுகள் மாயமான்
போல் வழுவி வழுவிப்போவது தவிர்க்க முடியாததாகி விடும்.
பண்பாடு கொள்கின்ற தேவை கருதிய மாற்றங்களை
ஏற்றுக்கொள்வதுடன் அதனை நிலைநிறுத்தி பேண வேண்டியது
தலையாயதாகும்.

0 Comments:

Post a Comment

<< Home

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.