Pulampal

Pulampal

Tuesday, March 18, 2008

எது அவமானம்?

சரிநிகர் 123 இல் "கோணேஸ்வரிகள்" என்று தலைப்பிட்டு கலா ஒரு கவிதை எழுதியிருந்தார். இக்கவிதையைத் தொட்டு பல விமர்சனங்களை சரிநிகர் எதிர்கொண்டு சிலவற்றை வெளியிட்டு இருந்தனர். ஆணாதிக்கம் இனவாதத்துடன் இணையும் போது ஒரு தமிழ்ப் பெண் சந்திக்கும் இனவாத ஆணாதிக்கத்தை மிக அருமையாக துல்லியமாக படம் பிடித்து கலா காட்டியிருந்தார். இதன் மூலம் யதார்த்த சமூகத்தின் இயலாமைக்கு சவால் விட்டுள்ளார். அதே நேரம், இனவாதம் சிங்களப் பெண் மீதான இராணுவ, ஆணாதிக்க வன்முறையை ஒத்தி வைத்துள்ளதை அழகாகச் சுட்டிக் காட்டுவதன் மூலம் இலங்கை அரசியலை சரியாக, மிக நேர்த்தியாக சுட்டிக் காட்டுகின்றது இக்கவிதை.

ஆனால் பெண்ணியல் அமைப்பாளர்கள், ஜனநாயகவாதிகள், பெண்கள் பத்திரிகையாளர்கள் எனக் கொஞ்சப் பேர் இதை எதிர்த்து அழுது வடிந்துள்ளனர்.

தமது வர்க்க கட்டமைப்புக்கு இசைவாக ஆணாதிக்க நிலையில் நின்றும், இனவாதக் கட்டமைப்பின் மீது நின்றும் நடந்த ஆணாதிக்க வன்முறையை மூடிமறைக்கும் போது அல்லது மௌனமாகி கைவிடும் போது, ஒரு பெண்ணின் மீதான கொடுமையை சரியாக சுட்டும் போது எதிர்த்துப் புலம்பியுள்ளனர். நாம் முதலில் கலாவின் அக்கவிதையைப் பார்ப்போம்.

கோணேஸ்வரிகள்...!

நேற்றைய அவளுடைய சாவு - எனக்கு
வேதனையைத் தரவில்லை.
மரத்துப் போய்விட்ட உணர்வுகளுக்குள்
அதிர்ந்து போதல் எப்படி நிகழும்.
அன்பான என் தமிழிச்சிகளே,
இத்தீவின் சமாதானத்திற்காய்
நீங்கள் என்ன செய்தீர்கள்!?
ஆகவே: வாருங்கள்
உடைகளைக் கழற்றி
உங்களை நிர்வாணப்படுத்திக் கொள்ளுங்கள்

என் அம்மாவே உன்னையும் தான்.
சமாதானத்திற்காய் போரிடும்
புத்தரின் வழிவந்தவர்களுக்காய்
உங்கள் யோனிகளைத் திறவுங்கள்.

பாவம்
அவர்களின் வக்கிரங்களை
எங்கு கொட்டுதல் இயலும்.
வீரர்களே! வாருங்கள்
உங்கள் வக்கிரங்களை தீர்த்துக் கொள்ளுங்கள்.
என் பின்னால்
என் பள்ளித் தங்கையும் உள்ளாள்.
தீர்ந்ததா எல்லாம்
அவளோடு நின்றுவிடாதீர்!

எங்கள் யோனிகளின் ஊடே
நாளைய சந்ததி தளிர்விடக்கூடும்.

ஆகவே

வெடிவைத்தே சிதறடியுங்கள்
ஒவ்வொரு துண்டுகளையும் கூட்டி அள்ளி
புதையுங்கள்
இனிமேல் எம்மினம் தளிர்விடமுடியாதபடி.

சிங்கள சகோதரிகளே!
உங்கள் யோனிகளுக்கு
இப்போது வேலையில்லை.


கோணேஸ்வரி 17.05.1997 அன்று பத்து பொலிசாரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, பெண்குறியில் கிரனைட் வைத்து கொல்லப்பட்ட மட்டக்களப்பு 11ம் கொலனியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய்.

காலம் காலமாக நடக்கும் இனவாதச் சாவுகள் பழக்கப்படுத்தப்பட்ட நிலையில் அவை அதிரவைப்பதில்லை. உணர்வுகள் மரத்துப் போகின்றன. சமாதானத்திற்காகப் போராட முடியாத அரசியல் குரோதத்தில் முடங்கிப் போகும் போது, நீங்கள் நிர்வாணமாக ( உடல் மற்றும் இனவாத அடிப்படை எப்படியாயினும் ) இருப்பது தான் உங்கள் நிலை. ஏனெனின் சமாதானம் என்பது தேசங்களின் சுயநிர்ணய உரிமையில் ஏற்படுகின்றது. அந்த தேச சுயநிர்ணய உரிமையை, அது சார்ந்த சமாதானத்தை நிலைநாட்டக் கூடிய அரசியல் வர்க்கப் போராட்டமே. அதற்காக என்ன செய்துள்ளீர்கள்; என்பதே இதன் சாரம். புத்தரின் பேரால் புத்தரைத் திரித்தே சமாதானம் பேசுகின்றனர் (இங்கு புத்தரை அல்ல) யுத்தவாதிகள். சமாதானத்துக்காக போர் புரியும் இனவாதிகளின் சமாதான ஆணாதிக்க வக்கிரத்தை தீர்க்க யோனியை அரசியல் அற்ற நிதர்சனமானதென்றாலும், சமூகம் ஆணாதிக்கத்தில் யோனியைத் திறந்து தான் வைத்திருக்கிறது யதார்த்தத்தில். ஏனெனின் யோனி மீது இனவாதம் தனது இனவாத ஆணாதிக்கத்தால் பெண்ணின் கற்பு உரிமையை குதறும் போது, மௌனம் சாதிக்கும் இனவாத பெண்ணியத்தின் முன் யோனி, அரசியல் அற்ற நிதர்சனமான பிம்பம் தான். அதே நேரம் இயல்பான ஆணாதிக்க சமூக கண்ணோட்டத்தில், பெண்ணை யோனி வழியாக காண்பதும், பண்பாடு கலாச்சார வேர்களை யோனி வழியாக திணிக்கும் போது, இயல்பான சமூக ஆணாதிக்கம் யோனியை நிர்வாணமாக காண்கின்றது, ஆராய்கின்றது.

ஆணாதிக்க இன வக்கிர அடையாளத்தையும், இதற்கு எதிரான எழுச்சியையும் சிதைக்க யோனியின் உள்வைத்து வெடிக்க வைக்கும் கைக்குண்டு. இதுவே பொதுவான ஆணாதிக்க கற்பு நிலையும் கூட. யோனிக்குள் தேடும் கற்பு இனவாதத்துக்கு எதிராக போராடுபவர்களின் இன்றைய பொதுக் கண்ணோட்டமாகும். இதை எதிராக காட்டி மறுக்கும் சிலரின் கண்ணோட்டத்தில் பெண்ணின் கற்புரிமையை, அதாவது யோனியில் திறந்து பொது விபச்சாரம் செய்வதாகும். இப்படிப் பல. பிறக்கும் குழந்தை தனது பிறப்புக்கு பழிதீர்க்கவும், ஆணாதிக்கத்தை ஒழித்துக்கட்டவும், சமாதானத்தை நிறுவும் வழியை அடைக்க, போராடாது இருக்க, குழந்தை பிறக்கும் வழியிலேயே (யோனியில்) வைக்கும் குண்டுகள். பெண்ணின் உறுப்பு மீது இந்தச் சமாதானவாதிகளின் கருணை நாளை சிங்களப் பெண்கள் மீது பாயத் தயாராக உள்ளது. இது தான் கவிதை யின் அடிப்படை.

ஆணாதிக்க அதிகார இனவாதிகள் மட்டும் தான் இதற்கு எதிராக ஊளையிடுவார்கள். பண்பாடு என்பர். பெண்மை என்பார்கள். ஆபாசம் என்பார்கள். ஏனெனில் ஆணாதிக்க ஒழுக்கம் இவையல்லவா? இதை எதிர்த்துப் போராட அழைப்புவிடுகிறார் கவிதை மூலம். இதை சமாதானத்துக்காகவா செய்தீர்கள்? எனக் கேட்க இது இனவாதக் காய்ச்சலை உண்டாக்கிறது. அருவருப்பு உணர்ச்சியை தருகிறது என்கிறார் பெண்ணிலைவாதி செல்வி திருச்சந்திரன். நாகரீகம் தாண்டிய கவிதையாம். ஆணாதிக்க உலகமயமாதல் உலகைச் சார்ந்த நாகரீகத்தை கோரும் செல்வி திருச்சந்திரன்.

யோனி, நிர்வாணம் என எழுதுவது அவமானம் என்கின்றனர். உயிரியல் படிக்கும் ஆண், பெண், மருத்துவம் படிக்கும் ஆண், பெண், இதை யதார்த்தமாய் கேட்கின்றனர். சொல்லுகின்றனர். அருவருப்பாக அல்ல. பாலியல் கல்வியின் அவசியத்தை பார்ப்பனிய இந்து மதம் இப்படித்தான் எதிர்க்கின்றது. ஆனால் ஆணாதிக்க சமூகம் பெண்ணைப் பொத்தியதைப் போல், இதைப் பொத்தி மூடி மறைத்து அநாகரீகம் எனக் கூறுவதன் மூலம,; அந்தப் பெண்ணின் யோனி கற்பழிப்புக்குட்பட்டதையும், அதை குண்டுவைத்து தகர்த்த வக்கிரத்தையும் மூடி மறைத்து நியாயப்படுத்துகின்றனர். இதை சமாதானத்துக்கான யுத்தம் மீது செய்வதை மறைத்து, யுத்தத்தை சமாதானத்தின் பேரில் பாதுகாக்க முனைகின்றனர். இதன் மூலம் இனவாத ஆணாதிக்கத்தையும், இயல்பான யதார்த்த ஆணாதிக்கத்தையும் தமது வர்க்க நலனில் இருந்து பாதுகாக்கின்றனர்

நன்றி: தமிழ் அரங்கம்

Labels: ,

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, August 10, 2006

பெண்ணியவாதிகள் சொன்னவை சொல்லாதவை

- வெங்கட் சாமிநாதன்

சமீபத்தில் "அணங்கு' என்னும் ஒரு பெண்ணிய இலக்கிய அமைப்பு நடத்திய கருத்தரங்கம் சென்றிருந்தேன். கொஞ்சம் சிரமத்துடன்தான் சென்றேன். எளிதாக அடைய முடியாத ஓர் இடத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். குற்றம் சொல்வதற்கில்லை. கிடைத்த இடத்தில்தான் ஏற்பாடு செய்ய முடியும்.

பெண்ணியம், கட்டாயம் வரலாற்று நியாயங்களையும் சமூக நியாயங்களையும் தன்னுள் கொண்டுள்ளதுதான். சமூகம், ஆண் மேலாதிக்கம் கொண்ட சமுகம்தான். இப்பெண்ணிய விழிப்புணர்வும், எதிர்ப்பும் எழுவது இயல்புதான். இவ்வெதிர்ப்புணர்வின் வெளிப்பாடுகள் சில, ஆரம்ப உற்சாக மிகுதியினாலும் உணர்ச்சி மேலீட்டினாலும் திடுக்கிட வைக்கும் அளவுக்கு நிதானமிழந்து எல்லைகளை மீறுவதாகத் தோன்றும். 'உள்ளாடைகளை எரிப்போம்' என்ற கோஷம் பெண்ணிய வீராப்பின் அடையாள மாயிற்று ஒரு கட்டத்தில், பல இடங்களில். தன் இயல்பான பெண்மையே, ஆண் மேலாதிக்கம் கட்டமைத்துள்ள சதிகாரச் சட்டத்தின் விளைவு என்று சொன்னால் அதை என்னவென்று சொல்வது? பூக்கள் அழகாகவும் மிருதுவாகவும் வண்ணக் கவர்ச்சியோடும் இருப்பது என்ன சதித்திட்டத்தின் விளைவு? இப்படியான கோணலான விகார வாதங்கள் வைக்கப்பட்டன. பெண் தன் பெண்மையைக் குற்ற உணர்வோடு பார்த்தால், ஆண், ஒரு சமாதானத் தீர்வாக தன் ஆண்மையை இழந்துவிடத் தீர்மானித்தால், அதைத் தடம் மாறிவிட்ட இயக்கம் என்றுதான் சொல்லவேண்டும். அலைமோதýல், உயர எழும் அலை அடங்கி சம நிலை அடைய வேண்டும். எந்தக் கூட்டு இயக்கத்திலும் அவரவரது மன விகாரங்கள், இயக்கத்தின் லேபிளைத் தன் மீது ஒட்டிக்கொண்டு தன் விகாரத்திற்கு நியாயம் தேடிக்கொள்ளும். கூட்டத்தின் எல்லை மீறல், எப்போதும் பாஸிஸ குணங்களை மேற்கொள்ளும்.

அம்மையார் ஒருவரின் மன விகாரம், எல்லை மீறிய போது, அந்த அம்மையார் புலம்பிக் கொண்டிருந்தாராம். "எந்தப் பெண்ணிய எழுத்தாளர் எனக்கு உதவியாகக் குரல் கொடுத்தார்? நான் தனித்து விடப்பட்டேன்?' என்று. ஒரு தனிப்பட்ட அம்மையாரின் மன விகாரம் எப்படி பெண்ணியப் பொதுக்குரலாகும்? அடுத்து இன்னும் ஒரு பெண் கவிஞரின் கவிதைகள் கடுமையாக, என் கருத்தில், நியாயமற்று விமர்சிக்கப்பட்ட போது அந்தப் பெண்கவிஞருக்குத் தன் கவிதைகளில் இருந்த நம்பிக்கையை விட தன் பெண்ணிய கட்சி லேபிளிலும், தன் கோபக் கனýலும், வசைகளிலும் அதிக நம்பிக்கை கொண்டவராகக் காணப்பட்டார். விமர்சகர், பாவம், ஆடிப்போய்விட்டார். பெண் பாவம் பொல்லாது என்ற சமூகப் பார்வை உண்டே! பெண்ணியம் என்ன கருத்துக்கொண்டி ருந்தாலும் இது சாதகமான சமூகப் பார்வை ஆயிற்றே. ஆனாலும், ஒரு கொடூரமான ஆணாதிக்க அராஜக சிந்தனை இங்கு அரசியýலும் எழுத்தாளர் சமூகத்திலும் நிலவுகிறது. யங்ள்ற்ங்க் ண்ய்ற்ங்ழ்ங்ள்ற்ள் என்பார்கள். தன் பதவி, தன் புகழ், தன் நலன், தன் உரிமை எனத் தான் கற்பித்துக்கொண்டுள்ளது ஆபத்தில் உள்ளது என்றாலோ, அவற்றை இழக்கும் விளிம்பிற்குத் துரத்தப்பட்டாலோ, ஆணாதிக்க மனம் ஒரு மிருகத்தனமான கோரத்தை ஸ்வீகரித்துக்கொள்கிறது.

பெண் கவிஞர்கள் சிலர், இன்றைய சமூக மதிப்புகளின் மொழி வெளிப்பாட்டு எல்லைகளை மீறத் தொடங்கியுள்ளார்கள். அது சரியா, தவறா என்பது கருத்துப் பரிமாற்றத்திற்குத் தளம் அமைத்து விவாதிக்கப்பட வேண்டியது. அதை விட்டு, 'இவர்கள் என் எதிரில் வரட்டும். காலை வெட்டு கிறேன்; கையை வெட்டுகிறேன்' என்று சொல்வதற்கோ, "இவர்களை எல்லாம் மௌண்ட் ரோடில் வைத்துக் கொளுத்த வேண்டும்' என்று சீறுவதற்கோ கவிதையே எழுதாது கவிப்பேரரசு களாக ஆனவர்களுக்கோ, ஓடிப்போய் கல்யாணம் கட்டிக்கலாமா, தாýகட்டி பிள்ளை பெற்றுக் கொள்ளலாமா என்று வீட்டுக்கு வீடு சந்துபொந்துகள் எல்லாம் சிறுவர்கள் தெரிந்தோ தெரியாமலோ குதூகýத்துக் கொம்மாளமிடக் காரணமாக இருந்தவர்களுக்கோ இத்தகைய பாஸிஸக் குரல் எழுப்ப அருகதை இல்லை. பெண் கவிஞர்களாவது, தன் வாழ்நிலையின் வதைபடýல் உணர்ச்சி கொப்பளிக்க, நிதானமிழந்தவர்கள் என்றுதான் அதிகம் குற்றம் சாட்டலாம். ஆனால் வெட்டவும் எரிக்கவும் கிளம்புகிறவர்கள் குரல், கவிஞர் குரல் அல்ல. அவர்கள் பணத்தாசையில், பேர் ஆசையில் கட்டளைக்குப் பாட்டெழுதிய அவலம் அடைந்தவர்கள். அடைந்தவர்கள் அல்ல, ஆசையுடன் அவல நிலையில் வீழ்ந்து, அச்சகதியில் புரளும் சந்தோஷம் கொள்பவர்கள்.

பெண் கவிஞர்களின் மொழி எல்லை, சமூக மதிப்பு மீறல்களைக் குறைசொல்ல, தண்டனை கொடுக்க இவர்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது.

தகுதி இருப்பதாக இவர்கள் எண்ணிக் கொண்டால் இவர்கள் தம் பலவீனத்தைத்தான் தம்பட்டமடித்துக்கொள்கிறார்கள். அத்தோடு தம் மிருகத்தன வெளிப் பாட்டையும்தான் காட்டிக் கொள்கிறார்கள்.

ஆக, நான் அணங்கு கருத்தரங்கு சென்றது, பெண் கவிஞர்கள் பலரும் பெண்ணியவாதிகளும் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வந்த எழுத்தாள பிரமுகர்களும், இம் மொழி வெளிப்பாடு பற்றி என்ன நியாயங்கள் சொல்கிறார்கள்? அவர்கள் கருத்துநிலை என்ன என்று அறியத்தான். சற்று தாமதமாகச் சென்றேன். இடம் கண்டுபிடிக்கும் தடுமாற்றத்தில் இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் தான் நான் சென்னையைப் பரிச்சயப்படுத்திக் கொள்கிறேன்.

கருத்தரங்கில் நிறைந்திருந்தது, ஆண்கள் கூட்டம். நான் கேட்கப் பேசியவர்கள் எல்லோரும் ஆண்கள். ஆணாதிக்கத்தின் கொடூரங்கள் பற்றி விளாசித் தள்ளினார்கள். இவ்வாறு பெண்களின் பரிதவிப்பிற்ச்ôகக் கண்ணீர் விட்டவர்களில் சிலர், அவரவர் வீட்டில் கோலோச்சும் பெண்ணரசிகளின் கட்டுப்பாட்டில் அடங்கி ஒடுங்கி வாய்பொத்தி இருப்பவர்கள். ஆக இதுவும் ஒரு பொய்யான அரசியல் கோஷ மேடையாக்கப்பட்டுவிட்டது என்றுதான் தோன்றிற்று. ஏழைகளுக்காகக் கண்ணீர் விடும், ஆயிரங்கோடி சொத்துள்ள தலைவர்களை நாம் தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில் காண்பதில்லையா? அதே சமயம் தன் முரட்டுக் கணவனின் காட்டுக் கத்தலைக் கண்டு பயந்து வாயடைத்துப் போகும் பெண்ணியவாதிகளையும் கண்டிருக்கிறேன். புடவைக் கடைக்குப் போகக் கூட கணவனின் அனுமதி பெற்றே போவார்கள். இவ்வள வுக்கும், கணவனை விட திறமையும் புத்திக் கூர்மையும் மிகுந்தவர், பெண்ணியவாதி. ஒரு சமயம், 'செருப்புப் பிஞ்சிடும், ஆமாம் தெரியுமா?' என்ற கூச்சல் கேட்டு (அந்நிய மொழியினர் கூடியிருந்த கூட்டத்தில்) திரும்பிப் பார்த்தால் அந்தக் கணவர் கண்சிவக்க, பெண்ணியவாதி அடங்கி மௌனம் காத்தார்.

""நான் பெண்ணியவாதி அல்ல'' என்று தனக்கே ஆன தீர்மானத்துடன் பலமுறை சொல்ýயிருக்கிறார், தன் பேட்டிகளில் அவருடைய ""மந்திரி சபையில் உள்ள ஒரே ஆண்'' என்னும் பெயர் பெற்றவர் இந்திரா காந்தி. பெண்ணியம் எனப் பேசாது தன் ஆளுமையின் வீரத்தையும் பலத்தையும் நிரூபித்தவர். எனக்கு ஒரு நிகழ்ச்சி சொல்லப்பட்டது, பத்திரிகை நிருபர்களால். விமான விபத்தில் சஞ்சய் காந்தி உயிரிழந்த போது, துக்கம் விசாரிக்கச் சென்றவர்களில் தமிழக அரசியல் தலைவரும் ஒருவர். இந்திரா காந்திமுன் தொண்டை அடைக்க, குரல் விக்கித்துப்போக, அழுகை தொனிக்க, ஏதோ சொல்ல, இந்திரா காந்தி "ரட்ஹற்'ள் ற்ட்ண்ள்? ஸ்ரீர்ய்ற்ழ்ர்ப் ஹ்ர்ன்ழ்ள்ங்ப்ச் " என்று கடிந்து கொண்டாராம். இந்த இடத்தில் இந்த சமாச்சாரம் பýக்காது என்று அந்த அரசியல் தலைவர் தெரிந்து அமைதியானாராம். இவர் கண்ணீர் புகழ் பெற்றவர். அலங்கார நடையில் இரங்கல் செய்தி தருபவர்.

ஆக, ஆண்மை, பெண்மை என ஏதும்- வரம்புகளை குணங்களுக்கு, நம் வெளிப்பாடுகளுக்கு செயல்களுக்குக் கட்டிவிடமுடியாது. வீரத்துடன் மனதிடத்துடன் அஞ்சாமையுடன், பெண்மையும் உடன் வாழ முடியும். வீராவேசப் பேச்சுகளுமாக கண்ணீருமாக, ஆண்மையும் பவனிவரும்.

ஆபாசம், எல்லை மீறல், என்ப தெல்லாம் கூட இப்படி வரம்புகளுக்குட் படாதவைதான். காலம், சமூக மதிப்புகள் என வரம்புகள் உள்ளன.

வெள்ளிவீதியார், ஒளவையார் என இரண்டு பேரிடம் பேச்சாளர்கள் அடிக்கடி தஞ்சம் அடைந்தனர். இதில் எல்லாம் ஏதும் அர்த்தம் இல்லை. இன்று 2004 இல் எந்த 13 வயதுச் சிறுமியாவது ஆண்டாளைப் போல் கவிதை எழுதினால், எந்தத் தமிழ்த் தந்தை, பெரியாழ்வாராக ஆகி, ஆசீர்வதித்து மகிழ்வார் எனத் தெரியாது. அவ்வளவு தூரம் போகவேண்டாம். 16 ஆம் நூற்றாண்டு கிருஷ்ண தேவராயர், தன் இரண்டு ராணிகளுடன் தான் கட்டிய கோவிýல், தெய்வத்தை வணங்கி நிற்கும் சிற்பம் உண்டு. ஒரு சாம்ராஜியத்தின் சக்கரவர்த்தி இடுப்பில், முழங்காலுக்கு மேல் தொங்கும் ஆடையுடன் கைகூப்பி நிற்கிறார். இரண்டு ராணிகளுக்கும் அதே கதைதான். திரண்டு பொங்கி எழும் மார்புகள். சக்கரவர்த்திக்கோ, அவரது ராணிகளுக்கோ, ஏதும் மறுப்பு இருக்க வில்லை. அரசவையின் மற்றோருக்கும் மக்களுக்கும் ஏதும் மறுப்பு இருக்க வில்லை. இது சகஜமாக ஏற்றுக்கொள்ளப் பட்டது. சங்க காலத்திýருந்து, சுமார் ஆயிரம் ஆண்டுகாலம் இத்தகைய சுதந்திரமான வெளிப்பாட்டிற்குத் தடை ஏதும் இருந்ததில்லை. ஒரு சினிமா நடிகைக்குக் கோயில் எழுப்பியதாகப் படித்தேன். அதில் அந்த நடிகை எத்தகைய தோற்றம் தந்திருப்பார்? ஆண்டாள் மாதிரி அவர் பேசவும் மாட்டார். அவரது சிலை, கிருஷ்ண தேவராயரின் பட்ட மகிஷி போன்ற தோற்றமும் கொண்டிருந்திராது.

பழைய விவகாரம் போகட்டும். அறுபதுகளில் ஓர் சமயம், ஹிந்தியின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான கிருஷ்ணா úஸôப்தி, ஒரு சர்ச்சைக்குரிய கதையை (யாரோ(ன்)கே யார்) எழுதியிருந்தார். அதில் ஆபாசம் என்று கருதப்பட்ட வார்த்தைப் பிரயோகங்கள் நிறைய இருந்தன. பிராபல்யம் பெறும் ஆசையில் எழுதப்பட்டதல்ல என்பதும், கிருஷ்ணா úஸôப்தி, தரமான எழுத்தாளர் என்பதும் சர்ச்சைக்கே இடமில்லாது ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயங்கள். தமிழ் எழுத்தாளர் மாதிரி அவ்வளவு மோசமில்லை. கிருஷ்ணா úஸôப்தியை தம்மிடையே வைத்துக் கொண்டே அவர் முன்னிலையிலேயே ஒரு கருத்தரங்கம் நடந்தது. இரு தரப்பிலும் வாதங்கள் நடந்தன. பண்பாடற்றவை என்றும், சகஜமாக மக்களிடையே படித்தவர்களிடையே கூட புழங்கும் வார்த்தைகள்தான் என்றும் வாதமிடப்பட்டாலும் ஒரு வேடிக்கையான விஷயம், அவர்களில் யாரும், எழுத்தாளர் கிருஷ்ணா úஸôப்தியையும் சேர்த்து ''அந்த மாதிரியான வார்த்தைகள்'' என்றுதான் குறிப்பிட்டார்களே அல்லாது ''அந்த மாதிரி வார்த்தைகள்'' என்ன என்பதை யாரும் உச்சரிக்க வில்லை. உச்சரிப்பது அவர்களுக்கே அவ்வார்த்தைகளை எழுதிய கிருஷ்ணா úஸôப்திக்கே கூட நாகரிக மற்றதாக-பண்பாடற்றதாகத்தான் பட்டிருக்கிறது.

இங்கே கூட சம்பந்தப்பட்ட கவிஞர்கள் யோனி என்ற, புழக்கத்தில் இல்லாத, தமிழ் அல்லாத வார்த்தையைத்தான் வýந்து எழுதியிருக்கிறார்களே தவிர அதற்கான தமிழ் வார்த்தையை, ஒரு தரப்பட்ட சமூகத்தில் மாத்திரமே புழக்கத்தில் உள்ள வசையான, ஆனால், எல்லாத் தமிழரும் அறிந்த வார்த்தையைப் பயன்ப டுத்தவில்லை. தெரிந்தே பலத்த யோசனையின் பிறகே என்பதில் எனக்குச் சந்தேக மில்லை. தம் வாழ்நாளில் ஒரு முறை கூட அந்தக் கவிஞர்கள் அத்தமிழ் வார்த்தையை உச்சரித்திருக்க மாட்டார்கள் என்பது எனது சர்வ நிச்சய மான யூகம். அவர்கள் இக்கூற்றை மறுத்தால் நான் ஏதும் சொல்வதற்கு இல்லை.

ஆக, படிப்போரை, ஆண்களை, சமூகத்தை இவ்வாறு எழுதித் திடுக்கிட்டு ஆடவைத்து விடவேண்டும் என்று நினைத்துச் செய்த காரியத்தில் அவ்வாறு திடுக்கிட வைக்கும் வார்த்தையைப் பயன்படுத்துவதில் அவர்களுக்கே தயக்கம் நிறைய இருந்திருக்கிறது. திடுக்கிட வைப்பது சொல்லப்பட்ட கருத்துதானே. இதுகாறும் திடுக்கிட வைத்த கருத்துகளைச் சொல்ý ஸ்தம்பிக்க வைத்த இக்கவிதாயினிகள், அந்த வார்த்தைகள் இல்லாமலேயே சொல்ý விட முடிகிறபோது, இப்போது ஏன் அந்த வார்த்தைகளை உபயோகப்படுத்தியே ஆக வேண்டும் என்று வீம்பு பிடித்து, பின் தயங்கித் தடுமாறி, யோசித்து, யாரும் புழங்காத சம்ஸ்கிருத வார்த்தையில் தஞ்சம் புகுந்து ஏதோ கத்தி சுழற்றி விட்டதாகப் பூரித்துப் போகவேண்டும்?

ஸ்ருதி என்னும் பத்திரிகையில் அநேகம் வருடங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சி. அரியக்குடி ராமானுஜ அய்யங்காருடன் பேட்டியோ அல்லது, அவருடனான சம்பாஷணையை நினைவுறுத்தியோ எழுதப்பட்டிருந்தது. ஆண்டாளின் திருப்பாவையை ஸ்வரப்படுத்த எடுத்துக்கொண்டவர், பல பாடல் களைத் தொடவில்லையாம் 'அதெல்லாம் வேண்டாம்னா? என்னென்னெல்லாமோ எழுதியிருக்கு. கஷ்டமா இருக்கு' என்றார், அரியக்குடி. ஆண்டாளுக்கும் பெரியாழ்வாருக்கும் இல்லாத தயக்கம், அவருக்கு. இடையில் 13 நூற்றாண்டு காலம் கழிந்துள்ளதே. அப்போது அவரிடம் ஒரு கேள்வி: "ஜெயதேவரின் அஷ்டபதிக்கு செய்திருக்கிறீரே ஸ்வாமீ' அதிலேயும்கூட அப்படி என்னென்னவெல்லாமோ எழுதியிருக்குமே?' என்று. அது சரி. ஆனா அதெல்லாம் ஸமஸ்கிருதத்திலேன்னா இருக்கு. ரொம்பப் பேருக்கு அது என்னன்னே புரியாது இல்லையா? அதனால் பாதகமில்லை. திருப்பாவை தமிழ்லேன்னா, இருக்கு?' என்றாராம், அரியக்குடி.

அரியக்குடி மாதிரி ஒரு பழங்கால ஆசாரசீலருக்கு இருந்த பண்பாட்டுத் தயக்கங்கள், நமது இன்றைய பெண்ணிய வீராங்கனைகளான கவிதாயினிகளுக்கும் இருந்துள்ளது விநோதம் தானே! அவர் புரட்சி செய்யத் தயங்கியவர். இவர்கள் புரட்சி பண்ணப் புறப்பட்டவர்கள். இருவருக்கும் ஒரே மாதிரி சிந்தனை! செயல்பாடு!!

ஆக, நான் எந்த விளக்கங்கள் கிடைக்கும் என்ற ஆர்வத் தோடு சென்றேனோ, அந்த விளக்கங்களுக்குக் கருத்தரங்கில் இடமிருக்கவில்லை.

ஆனால் ஒரு நாவன்மையும் தங்கு தடையற்ற சொல் பிரவாகமும், மூச்சிரைக் காத ஆரோக்கியமும் கொண்ட அஜிதா என்ற பேச்சாளர், தம் அரசியல் களப்பங்கை ஆற்றி னார். பெண்களின் வதைபடும் வாழ்க்கையைவிட அவர் பேச்சில் முக்கிய இடம் பெற்றது பார்ப் பனியரும் மனுஸ்மிருதியும். வரலாற்றுத் தொகுப்பாக ஆதி காலத்தைத் தொட்ட அவர், இஸ்லாம், கிறித்துவம், பார்ப்பனியம், மனுஸ்மிருதி என்று ஆரம்பித்து அடுத்த நிமிடம், அடுத்த வாக்கியத்தில் இஸ்லாத்தையும் கிறித்துவத்தையும் அங்கேயே விட்டு விட்டு பின்னிரண்டையும் கடைசிவரை அவர் சாடிய சாடல், திராவிட இயக்கங்கள் அத்தனைக்கும் மகிழ்ச்சி தரும். மிக வன்மையான அயராத பேச்சாளர், எதைத் தாக்கவேண்டும் என்று தீர்மானித்துக்கொள்கிறாரோ அதற்கேற்றவாறே, தன் வாதங்களைச் சýத்தெடுத்துக்கொள்வார். வக்கீல். நிறைய வாதத்திறமை. தனக்குச் சாதகமான டர்ண்ய்ற்ள் - ஐ மாத்திரம் பொறுக்கி எடுத்து அதை ஊதிப் பெருக்கி பூதாகாரமாகச் சித்திரிப்பதில் வல்லவர்.

மனுஸ்மிருதி கல்வெட்டாகிப் போன, பழஞ் சுவடியாகிப் போன ஆவணம். யாரும், ஈயத்தைக் காய்ச்சிக் கொட்டுவது கிடையாது தண்டனையாக. மலம் கரைத்து ஒரு தýத் வாயில் ஊற்றியதாக பத்திரிகைச் செய்தி உண்டு. எந்தப் பார்ப்பனர் இதைச் செய்தது? இல்லையெனில் செய்தது யார் என்று அஜிதா விசாரித்துச் சொன்னால் நலமாக இருக்கும். ஆனால், கடவுள் கட்டளை, என்று முல்லாக்கள் சொல்ý தம் விருப்பத்திற்கும் ஆண் மேலாதிக்கத்தின் அடக்குமுறைக்கு மான கருவியாகப் பயன்படுத்தும் ஷரியத் இன்னும் உயிருள்ள -உயிரூட்டப்படும் சட்ட விதி. திருடினவன் கை வெட்டப்படும். கற்பழிக்கப்பட்டவள், வழி தவறியவள் நடுத்தெருவில் நிற்க வைக்கப்பட்டு ஊர்க்காரர்கள் வேடிக்கை பார்க்கக் கற்கள் எறிந்து கொல்லப்படுவாள். கற்பழிக்கப்பட்ட பெண், தான் குற்றமற்றவள் என்று நிரூபிக்க நான்கு சாட்சிகள் தேவை, ஆண்களுக்கு அது தேவை இல்லை. மூன்று முறை 'தலாக் தலாக்' என்று சொன்னாலே போதும். ûஸயத் ஹாபுதீன் பயமுறுத்தினால், ராஜீவ் காந்தி அரசியல் சட்டத்தையே திருத்தி உதவுவார். அஜிதா வேண்டி னால் நைஜீரியாவிýருந்து பாகிஸ்தான் வரை முஸ்ýம் அரசு நாடுகளின் நடப்புச் செய்திகளை நான் தரமுடியும். அஜிதா பத்திரிகை படிப்பவரென்றால், சுற்றி நடப்பவற்றைக் கவனிப்பவரென் றால் தமிழ்நாட்டில் அரசோச்சுவது பார்ப்பனீயம் அல்ல. அவர்கள் அல்லாத-மேல் ஜாதிக்காரர்களும் அல்லாத, இடைநிலைப்பட்ட சாதியினரிýருந்து கடைநிலையில் உள்ளவர் வரை உள்ள நூற்றுக் கணக்கான சாதியினர் அத்தனை பேரும் இன்றுவரையும் இனி என்றும் தவறாது கடைப்பிடிக்கும் அந்தந்தச் சாதீயம் தான், அதன் வன்முறைதான், அந்தந்தச் சாதீய ஆண்களாலும், அவர்களுக்கு மேல்படியிýருக்கும் சாதியின் ஆண்களாலும் வதைபடும் பெண்களிடம் கேளுங்கள். அவர்கள் கொடுமைக்காளாவது எந்தச் சாதீயம், எந்த ஆணாதிக்க மேலாண்மை என்று. இன்று வரை கடந்த 20 ஆண்டுகளாகப் பெருகிவரும் தýத் எழுத்துகள் (படைப்பிலக்கியங்களைச் சொல் கிறேன். தýத் சித்தாந்திகளின் கொள்கைப் பிரகடனங்களைச் சொல்ல வில்லை.) என்ன சாட்சியம் கூறு கின்றன, தெரியுமா? அவை உண்மை யின் பதிவுகள். இதய வýயின் உடல் வýயின் பதிவுகள். திராவிட இயக்க எழுத்துகள் போல கதை சொல்ல வந்த கொள்கைப் பிரகடனங்கள் அல்ல. கடைசியாக ஒன்று சொல்லத் தோன்றுகிறது. சிறு வயதிýருந்து அரசியல் கட்சிக் கூட்டங்களை நான் பார்த்துக் கேட்டு வருகிறேன். திராவிட இயக்கப் பேச்சாளர்கள் (இதில் தலைவர், தொண்டர் வித்தியாசங்கள் கிடையாது) பெண்களை ஆபாசமாகக் கிண்டலாக, பாýயல் உபமானங்களோடு ஆபாச அங்க வர்ணனைகளோடு, கூட்டத்தினரைக் களிப்பூட்ட தம் பேச்சுக்களில் மசாலாவாக தம் ஆபாச வர்ணனைகளைப் பரவலாகத் தெளித்து திராவிட இயக்கப் பேச்சுகளை 'அ' முத்திரை குத்தப்பட்ட சினிமாவாக ஆக்கியது யார்? இது தொடக்கம். இது திராவிட இயக்கப் பேச்சாளர்களின் கைங்கர்யம் . இன்று இது எல்லாக் கட்சிகளையும் பிடித்துள்ள நோய். தமிழ்நாட்டின் பண்பாட்டுச் சீரழிவிற்கு யார் முழுமுதற்காரணம் என்று நினைக்கிறீர்கள்? தனக்கு எதிர்க்கட்சியில் உள்ள பெண்களை எவ்வளவு கேவலமாக ஆபாசமாக வர்ணிப்பார்கள் தெரியுமா? இதற்குத் திராவிட இயக்கத் தலைமைகள்தான் வழிகாட்டி. அன்று காங்கிரஸில் இருந்த அனந்தநாயகி, இவர்களது ஆபாக மேடைப் பேச்சுகளால் எவ்வளவு கேவலப்படுத்தப் பட்டார்! இன்று இவர்கள் ஆபாச வர்ணனைக்கு ஆளாவது, ஜெயலýதா. பெண்கள் எதிரணியினர் என்றாலே இவர்களுக்கு உற்சாகம் அலைமோதும். விழுப்புரம் மாநாடு பற்றிக் கேட்டதுண்டா, அஜிதா அவர்களே! அல்லது இப்போது நடக்கும் தேர்தல் கூட்டங்களை? இளங்கோவன் பேச்சுகளைத்தான் கேளுங் களேன். அவரும் சளைத்தவரில்லை.


பெண்ணியம் இதற்கு என்ன சொல்கிறது? இல்லாத இடத்தில் இருட்டில் தேடிக்கொண்டே இருக்கலாம். 70 வருடங்களாகப் பேசியாயிற்று. இன்னமும் பேசிக்கொண்டே இருக்கலாம். எதிரணியில் பெண்கள் இல்லாமலா போய் விடுவார்கள்.

சமூகமே ஆபாசமாக நிறைந்திருக்கிறது. பெண்களை இரையாக்கிக் களிப்பதில் என்ன உற்சாகம் இந்த சக்திகளுக்கு! செய்வதையெல்லாம் செய்து விட்டு வசனம் பேசலாம். ""மாற்றான் வீட்டுத் தோட்டத்து மல்ýகை'' என்றும் ""நாங்கள் கற்றது கடமை கண்ணியம் கட்டுப்பாடு'' என்றும்.

பெண்களை, தனக்குச் சமதையே இல்லாத, தன் திளைப்பிற்கும் சுகத்திற்குமேயான கருவிபோல, ஆபாசமாகப் பேசிக் களிப்பது, அரசியல் தலைமைகள் மட்டுமல்ல. வியாபாரமே குறியான சினிமாக்களும்தான். அதற்குக் கலை என்று பெயரும் கொடுத்து, பணத்தையும் பிராபல்யத்தையும் தந்துவிட்டால், இதற்குப் பெண்களும் தயார்தான். தானும் ஒரு ஸ்டார் ஆகி, தானும் அதிகாரம் செலுத்தும் நிலை வரை இப்பெண்கள் சினிமாவில், தானே வýந்தோ அல்லது நிர்பந்தத்திற்கு ஆட்பட்டோ, படும் அவல வாழ்க்கை சொல்லத் தரமன்று. இவர்களை ஆட்டுவிப்பவர்களிடம் இவ்வாட்டங்களைக் கண்டு களித்துக் கள்ளுண்ட மயக்கத்தில் மிதக்கும் சினிமா ரசிகர்களிடமும் காணப் படுவது ஆணாதிக் கத்தின் இரு பரிமாணங்கள் தாம்.

இவையெல்லாம் பற்றிய கவலை அணங்கு கருத்தரங்கில் காணப் படவில்லை.

கடைசியாக ஒன்றைப் பற்றிச் சுருக்க மாகவாவது சொல்லா விட்டால் நியாயம் செய்ததாகாது. அன்றைய இரு அமர்வுகளுக்கு இடையில் பிரீதம் சக்கரவர்த்தி, தனிநபராக நிகழ்த்திய கண்ணாடி நாடகம் இதுவும் "புகழ்பெற்ற' நவீன நாடகச் சமாச்சாரமோ என்று பயந்திருந்தேன். நல்ல வேளையாக இல்லை. தனியொரு நடிகராக சுமார் 45 நிமிடநேரம். அலட்டாமல், குரல் உயர்த்தாமல், பெண்கள் நிலையையும் ஒரு தலைமுறைக்கு இடையில் பெண்கள் பெற்றுள்ள விழிப்புணர்வையும் அமைதியாக, அதே சமயம் நிறைந்த அழுத்தத்துடன் வெளிப்படுத்தினார். யாருடைய கவனமும் வேறு எங்கும் அலைபாயவில்லை. வேண்டுவது ஒரு காý மேடை. ஒரு நடிகர். அங்கு நாடகம் பிறந்துவிடும் என்பதை அன்று பிரீதம் நிரூபித்தார். அவரதுதான் அன்று வெளிப்பட்ட பெண்ணியக் குரல். மற்றவையெல்லாம் விஷயத்தைத் தொடாத அவரவர்க்குப் பிடித்த கோஷங்கள். வாழ்த்தவேண்டும் என்று தோன்றிற்று. பிரீதமை வாழ்த்தினேன்.

http://tamil.sify.com/amudhasurabi/may04/fullstory.php?id=13469564

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

பெண்களின் புனிதம் உடைக்கப்பட வேண்டும்!

- மேகலா -

தமிழிலக்கிய உலகில் கருத்தரங்குகளுக்கு முக்கிய இடமொன்று உண்டு. தனிமனித விமர்சனம், அர்த்தமற்ற வாக்குவாதம், சுவாரஸ்யமற்ற ஆழமில்லாத பேச்சு.... இவற்றை தவிர்த்துப் பார்த்தால் நிறைய கருத்தரங்குகள், அர்த்தம் பொதிந்ததாக இருப்பது தெரியும். அப்படி ஒரு ஆரோக்யமான கருத்தரங்கை மாலதிமைத்ரியும், க்ருஷாங்கினியும் இணைந்து, "அணங்கு' இலக்கிய அமைப்பின் சார்பாக சமீபத்தில் சென்னையில் நடத்தினார்கள். "இலக்கிய மரபும் பெண்ணும்' என்ற அந்தக் கருத்தரங்கை இரண்டு அமர்வுகளாகப் பிரித்திருந்தார்கள்.

முதல் அமர்வுக்குத் தலைமை தாங்கினார் எழுத்தாளர் பிரபஞ்சன். "உலக பெண் படைப்பின் குரல்' என்ற தலைப்பில் பேச வந்த சா.தேவதாஸ், வர்ஜினியா வுல்ஃபின் கவிதையோடு ஆரம்பித்தார்.

""பெண் என்ற வகையில் எனக்குத் தேசமில்லை;
பெண் என்ற வகையில் எனக்குத் தேசம்
தேவையில்லை; பெண் என்ற வகையில்
இந்த உலகமே எனது தேசமாகும்.''

""பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த "அமாண்ட்ýன் அரோரி லூஸி டூபின்', "ஜார்ஜ் ஸôண்ட்' என்கிற ஆண் பெயரில்தான் எழுதினார். அவரது நாவல்கள் அமெரிக்காவில் விவ-காரம் மிக்கவையாக, அபாயகரமானவை-யாக, தேசத்துரோக-மானவையாகக் கருதப்பட்டன. அவரது சவ அடக்கத்தின்போது அஞ்சý உரை நிகழ்த்த வேண்டிய டூமாஸ் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. ஹ்யூகோ கலந்து கொள்ளாமல் சிறுகுறிப்பை மட்டும் அனுப்பியிருந்தார். அதேபோல் இங்கிலாந்தைச் சார்ந்த "இவான்ஸ் மரி-யேன்'கூட "ஜார்ஜ் எýயட்' என்ற ஆண் பெயரில்தான் எழுதினார்.'' சா.தேவதாஸ் உலக பெண் படைப்பாளிகளான சில்வியா பிளாத், ஆன்செக்ஸ்டன், விர்ஜினியா வுல்ஃப், ஜெர்மேன் கிரீர், ஈவ் என்ஸ்லெர், அட்ரியேன் ரிச்... ஆகியோரின் நிலைபற்றி அழகாகச் சொன்னார். அதில் ஆன் செக்ஸ்டனைப் பற்றி அவர் குறிப்பிட்டது நம்மை அதிர வைத்தது. ""செக்ஸ்டன் ஏழு கவிதைத் தொகுதிகள் எழுதியவர். பைத்தியமாகி தற்கொலை செய்து கொண்டார்.''

"இந்திய பெண் படைப்பில் அகத்தின் மொழி' என்ற தலைப்பில் பேசிய அரங்க மல்ýகா, அம்ருதா ப்ரீதம், மகாஸ்வேதாதேவி, மாதவிக்குட்டி, கமலாதாஸ்... என்று பல படைப்-பாளிகளை ஆய்வுக்குட்படுத்தி-யிருந்தார். ""கமலதாஸ் கவிதைகளை பெண்ணின் அக வெளியை உணர்ந்து கொள்ளும் ஒரு ஆவண-மாக எடுத்துக் கொள்ளலாம்'' என்றவர் தற்போதைய தமிழ்க் கவிஞர்கள் மாலதி மைத்ரி, க்ருஷாங்கினி, சுகிர்தராணி ஆகி-யோரைப் பற்றியும் குறிப்பிட்டார். ""சுருக்கமாக சொல்ல வேண்டு-மென்றால் இதுவரை இருந்த பெண்களின் புனிதம் உடைக்கப்பட வேண்டும். மெüனம் கலைக்கப்-பட வேண்டும். இதுதான் இன்றைய சூழýல் பெண்களின் அகம் சார்ந்த தேவை'' என்றார் அரங்கமல்ýகா.

பர்வீன் சுல்தானா, "தமிழ் சினிமா பெண்மீது நிகழ்த்தும் காட்சி மற்றும் கருத்தியல் வன்முறை' என்ற தலைப்பில் உரையாற்றினார். ""சமூகத்தைப் பொறுத்தவரை தமிழ்சினிமா தவிர்க்க முடியாத ஊடகம். தமிழ் சினிமா பல்வேறு தளங்களில் வன்முறையை நிகழ்த்துகிறது'' என்று ஆரம்பித்து தமிழ் சினிமாவை ஒரு பிடி பிடித்தார். வசனம், வார்த்தை வன்முறை, இரட்டை அர்த்த வசனங்கள்.... எல்லாவற்றிற்கும் அருமையான உதாரணங்களைச் சொன்னார். தாý செண்டிமென்ட் தமிழ் சினிமாவைப் படுத்தும்பாடு, அந்தக் காலத்து நாகராணி, இந்தக் காலத்து நீலாம்பரி (படையப்பா) என பெண் வக்கிரமாக சித்தரிக்கப்படுவது, பாடல்வரிகள் அரசாங்கத்தின் தணிக்கை விதிகளை மீறி வெளிவருவது, பாடல்களில் பெண்கள் வாகனங்களுக்கு ஒப்பிடப்படுவது...... என்று அனல் பறந்தது பேச்சு.... ""தமிழ் சினிமா மூன்று மணி நேரமும் சில ரூபாய்களும் அல்ல'' என்றார் பர்வீன்.

""சங்கப் பாடல்களில் பெண்பாற் கவிகளின் அகம்'' என்ற தலைப்பில் பேசினார் பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன். ""ஆண்பாற் புலவர்களைவிட பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கை குறைவு'' என்றவர் உ.வே.சாமிநாதய்யர் 50 பேர் என்றும், ஒளவை நடராஜன் 41 பேர் என்றும், பேராசிரியர் ந.சஞ்சீவி 36 பேர் என்றும் குறிப்பிட்டிருப்பதைச் சொன்னார். ""சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பாடல்களிýருந்து அக்காலத்துப் பெண்களின் காதல், வீரம், பெரும்பாலும் பொருளாதாரத்தைத் தேடும் உரிமையின்மை, பெண்ணுக்கான இடம் பெரும்பாலும் வீடாக இருந்த, பரத்தையிடம் சென்று வரும் கணவரை முகமலர்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம், காதலன் வேறொரு பெண்ணோடு போய்விடாமýருக்க காதý செய்யும் முயற்சிகள், கைம்மைத் துயரம், உடன்-கட்டை ஏறுதல்.... எனப் பல்வேறு சமூக நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள முடிகிறது'' என்றார் அவர். "கண்ணாடி' என்ற நாடகத்தை நிகழ்த்தினார் ப்ரீதம் சக்கரவர்த்தி. கண்ணாடி முன் நின்று ஒரு பெண் தன்னை அலங்கரித்துக் கொண்டே, சில அந்தரங்-கமான விஷயங்களை கண்ணாடியிடம் சொல்கிறாள். அவள் ஒரு நடிகை. இதுதான் கதை. ப்ரீதம் சக்கரவர்த்தி பிரமாதமாக நடித்தார். ஏற்ற இறக்கங்களுடன், நெகிழ்ச்சியாய், உணர்ச்சி கொப்பளிக்க அவர் பேசிய விதம் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டு விட்டது.

இரண்டாம் அமர்வில், "நவீன பெண் கவிதையியýன் அகம் புறம்' என்ற தலைப்பில் பேச வந்த ந.முருகேச பாண்டியன், ""ஒரு பெண் இப்படி எல்லாம் எழுதலாமா? பெண் இப்படியான வார்த்தைகளைப் பயன்படுத்தலாமா? என்பது ஆரோக்ய-மற்ற போக்கு. திருவாசகத்தில் மாணிக்க வாசகர் கொங்கைகளைப் பற்றியே ஒரு பாடல் எழுதியிருக்கிறார். பட்டினத்தார் ஆபாசமாக எழுதினார். தற்போதைய பெண் கவிஞர்கள் பெண் என்பவள் தெய்வம், தாய், சக்தி என்ற பிம்பங்களை உடைத்து எறிகிறார்கள். இந்தக் கவிதைகளை கவிஞர் பிரம்மராஜன், "சானிடரி நாப்கின் கவிதைகள்' என்று சொல்கிறார். இது அயோக்கியத்தனம். மரபுவழிப்பட்ட கருத்தியலை தள்ளி வச்சுட்டுதான் இந்தக் கவிதைகளை பாக்கணும். இக்கவிதைகளை மாறுபட்ட பார்வை என்றுதான் நான் பார்க்கிறேன். இக்கவிதைகள் 2,000 வருட தமிழ்ச் சமூகத்தில் சில அதிர்வுகளை உண்டாக்கும்'' என்றார். இரண்டாம் அமர்விற்கு தலைமையேற்ற வழக்கறிஞர் அருள்மொழி, ""ஒரு பிரச்சனையின் அழுத்தம் என்பது நமக்குப் புரிந்ததை புரிந்த விதத்தில் சொல்வதுதான். அப்போதுதான் பிரச்சனையின் வý புரியும். அதனால்தான் பெண் கவிஞர்கள் இப்படியெல்லாம் எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டி-ருக்கிறது'' என்றார்.

""ஒரு விபத்து செய்தி பேப்பரில் வந்திருந்தது. "36 பெண்கள் உட்பட 4 பேர் மரணம்' இந்தச் செய்தி எப்படி சரியா இருக்கும்? பஸ்ஸ÷ல ஒரு பொண்ணு தூங்கினா "எப்படி தூங்குறா பாரு! உருப்படுமா?'ன்னு சொல்வாங்க. ஒரு பொண்ணு சாப்பிட்டா, "என்ன தீனி திங்கிறா பாரு! வெüங்குமா?'ன்னு சொல்வாங்க. அது மாதிரிதான் தற்போது பெண் கவிஞர்கள் மீது நடக்குற தாக்கு தலும்'' என்றார் அருள்மொழி.

"பெண்களின் மீதான கலாச்சார கண்காணிப்பும், பெண் படைப்பு மீதான ஒடுக்கு முறையும்' என்ற தலைப்பில் பேசிய பா.செயப்பிரகாசத்தின் உரை விரிவான, ஆழமான உரை. சிற்றிதழ்களில் எழுதுகிற பெண்களை புஷ்பா தங்கதுரையுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடிய சூழ்நிலை இருக்கிறது. இவைகளைத் தகர்ப்பது எப்படி? அதற்காகத்தான் இந்த "அணங்கு' அமைப்பு'' என்று குறிப்பிட்டவர், ""நமக்கான வெளியீட்டகம் தேவை. பெண்களுக்கான இதழ் ஒன்றையும் துவங்க வேண்டும்'' என்றார்.

வழக்கறிஞர் அஜிதா, "பெண்ணுடல் மீதான சமூக வன்முறை' என்ற தலைப்பில் பேசினார். ""பெண்கள் மீதான வன்முறை அதிகமாகிக் கொண்டே போகிறது. 2,000லிஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் வரதட்சணைக் கொடுமைக்கு ஆளான பெண்கள் 7,000 பேர்'' என்றவர் குர்லிஆன், பைபிள், ரிக் வேதம் ஆகியவற்றில் பெண்ணைப் பற்றிய மோசமான பிம்பம் உருவேற்றப் பட்டிருப்பதையும் குறிப்பிட்டார்.

"பெண் படைப்பு மற்றும் உடல் மீதான வெகுசன ஊடகங்களின் கருத்துருவாக்கம்' என்ற தலைப்பில் சுரேஷ் பாலும், (பெண்ணுடல் மீதான விசாரணையும் பாýயல் ஊடாட்டமும்' என்ற தலைப்பில் அமரந்தாவும் பேசினார்கள். காலையிýருந்து மாலை வரை நடந்தது கருத்தரங்கம். கணிசமான பார்வையாளர்கள். தற்போது தமிழில் சில பெண்கவிஞர்கள் பாýயல் பிரச்சனைகளை அதன் அழுத்தத்துடன் எழுதுகிறார்கள். அது சரிதான், என்பதே கருத்தரங்கின் அடிநாதமாக இருந்தது. அது சரியா? தவறா? என்று தீர்மானிக்க இது போன்ற கருத்தரங்குகள் திரும்பத்திரும்ப நடத்தப்பட வேண்டும். அந்தக் கருத்தரங்குகளில் இரு தரப்பினரும் ஆரோக்கியமான, தனிமனித தாக்குதலற்ற விவாதங்களை முன் வைக்க வேண்டும். விடை கிடைக்கும்.

http://tamil.sify.com/pennaenee/fullstory.php?id=13470464

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

மலரினும் மெல்லியது காமம்

- மதுரபாரதி -

காமம் தவறல்ல. பால் கவர்ச்சி என்பது இயற்கையின் செயல் - அற்புதச் செயல். அதன் சக்திதான் எவ்வளவு! 'காதல் முட்டாளை புத்திசாலியாக்குகிறது, புத்திசாலியை முட்டாளாக்குகிறது' என்றார் ஓர் அறிஞர். தினத்தந்தியில் சில கார்ட்டூன்களுக்குக் கீழே எழுதுவார்கள் "இதற்கு வசனம் தேவையில்லை" என்று. இதற்கும் அப்படித்தான். உங்கள் அனுபவமே போதும் புரிந்துகொள்ள.

மலரினும் மெல்லிது காமம், சிலர் அதன் செவ்வி தலைப்படு வார்

(குறள்: 1289; புணர்ச்சிவிதும்பல்)

என்றான் வள்ளுவன். அது மல்யுத்தமல்ல. கஜுராஹோ நிலைகளை எல்லாம் முயற்சி செய்வதல்ல. தெருவில் போவோர் வருவோர் எல்லாம் தன்னைப் பார்த்து மயங்குவதாகக் கற்பித்துக் கொள்ளுவதல்ல. எதெல்லாம் இல்லை என்று சொல்லலாமே அல்லாது, இதுதான் என்று சொல்வது மிகக் கடினம். அதனால்தான் அது 'மலரினும் மெல்லிது'. அதனால்தான் அதன் 'செவ்வி'யை 'சிலர்'தான் அறிவார்கள். எல்லோருக்கும் தெரிந்துவிடாது, வசப்பட்டுவிடாது.

செவ்வி என்றால் என்ன? அழகு, காலம், பருவம், தகுதி, ஏற்ற சமயம், காட்சி, புதுமை, வாசனை என்று இத்தனை பொருள்கள் உள்ளன அந்த செவ்வி என்ற வார்த்தைக்கு. சற்றே யோசித்துப் பார்த்தால் காதலுக்கு எல்லாமே பொருந்தும்! இதில் ஏதாவது சரிப்படாவிட்டாலும், அவ்விருவரிடையே நிகழ்வது விலங்குப் புணர்ச்சியாகவும், விலைப் புணர்ச்சியாகவும், வன்புணர்ச்சியாகவும், பொருந்தாப் புணர்ச்சியாகவும் முடிந்துவிடுமே அன்றி இருதரப்பிலும் அனுபவித்து, ஒவ்வொரு மயிர்க்காலிலும் உணர்ந்து, இருவரும் மற்றவரின் முழுத் துய்ப்புக்கு முயன்று, ஈடுகொடுத்து, மற்றவருக்கு ஆட்பட்டு, ஆட்படுத்திய 'செவ்வி' கொண்ட இன்ப நுகர்வாக இருக்காது.

செவ்வி என்றால் அழகு. காமத்தின் செவ்வியென்பது காமம் கொண்டவரின் அழகின்பாற்பட்டது. எவ்வளவுதான் மறுத்தாலும், உடல் காமத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது. அப்படியானால் எல்லாப் பெண்களும் ஐஸ்வரியா ராயாகவும் எல்லா ஆண்களும் மாதவனாகவும் இருக்கவேண்டுமா? அதுதான் இல்லை. ஒருவர் மற்றவரிடம் தன்னைக் கவரும் அம்சங்கள் இருப்பதைக் காணவேண்டும். மகாபாரதத்தில் 'யட்சப் பிரச்னம்' கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு பொய்கைக்குச் சென்று குடிநீர் கொண்டு வர பஞ்சபாண்டவர்கள் ஒவ்வொருவராகப்
போகின்றனர். தருமரைத் தவிர மற்ற நால்வரும் போய், ஒருவரும் திரும்பவில்லை. இறுதியாக தருமர் போகிறார். ஒரு யட்சன் அந்தப் பொய்கைக்குக் காவல் இருக்கிறான். தண்ணீர் எடுக்க முயலும் தருமரிடம் அவன் சொல்கிறான்:

"என் கேள்விகளுக்குச் சரியான பதில் சொன்னால் உன் சகோதரர்களை உயிர்ப்பிக்கிறேன். இல்லாவிட்டால் அவர்களைப் போல நீயும் உயிர்விட வேண்டியதுதான்" என்கிறான். தருமரும் "சரி, கேள்" என்கிறார். யட்சன் கேட்ட கேள்விகளுள் ஒன்று "உலகிலேயே மிக அழகானவள் யார்?" என்பது. அதற்கு
தருமனின் விடை "காதலனின் கண்களில் காதலி" என்பது. மெய்தான், எத்தனை உலக அழகிகள் இருந்தால் என்ன, தன் காதலியின் (மணமானவர்கள் மனைவி என்று படிக்கவும்) அழகுக்கு முன்னே அவர்கள் எம்மாத்திரம்! இருவரும் மற்றவரின் ஏதோவொன்றை வியந்து, விரும்பி, மயங்கித் தன்வயமிழக்காவிட்டால் அக்காதல் ஆழமற்றதாகிவிடும். இன்பம் துய்த்த மறுகணமே கொல்லும் 'கறுப்பு விதவை' (Black widow) என்னும் சிலந்தியின் செயலைப் போன்ற, தன்னலத்தையே அடிப்படையாகக் கொண்டதாகிவிடும்.

தகுதி என்ற சொல் மிக முக்கியமானது. சாதாரணமாகப் பொருளாதாரம், ஜாதி, அந்தஸ்து, உத்தியோகம், திறமை, செல்வாக்கு என்றெல்லாம் பொருள் கொண்டுவிடுவர். இவை உயர உயர அவர்கள் இன்னொரு பாலாருக்கு அதிகக் கவர்ச்சியாகத் தோன்றுவர். உதாரணமாக ஒரு சிறந்த ஓவியனை, சிறந்த
நாட்டியத் தாரகையை விதப்பான (admiring) காமக்கண்ணோடு பார்ப்பவர் பலர் இருப்பார். ஆனால் அத்தகைய காமம் நீடிப்பதில்லை. இத்தகைய தகுதிகளை உடையவர்களும் தம்மால் யாரையும் எளிதில் அடைய முடியும் என்று கணக்குப் போடுவர். இது சில இடங்களில் பலித்தாலும், பல இடங்களில் பொய்க்கும்.

எனவே தமிழ்ச் சான்றோர் கருத்துப்படி ஒரு பெண்ணைக் காமத்தோடு தீண்டத் தகுதி உடையவன் அவளை மணந்தவன் ஒருவனே. இந்த வரையறை ஆண்களுக்கும் பொருந்தும் என்று கொண்டுவந்தவன் மகாகவி பாரதி,

கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அ·து பொதுவில் வைப்போம்

(பெண்கள் விடுதலைக் கும்மி)

என்று கூறியதன் மூலம். இப்போது பரவலாக ஒருவரை ஒருவர் அலுவலகத்திலும் இதர சூழ்நிலைகளிலும் தீண்டுதல் சகஜமாகிவிட்டது. இதைத் தவறு என்று சொல்லும் கட்டுப்பெட்டி அல்ல நான். ஆனால் காமத்தின் செவ்வி துய்க்கக் கணவன் - மனைவி உறவு என்னும் தகுதி இல்லையென்றால் அது இறுதியில் நன்மையில்
முடியாது. தகாத உறவுகளுக்கான பெரிய விலையை மனிதகுலம் செலுத்தத் தொடங்கிவிட்டது என்று சொல்வதோடு நின்று, மிச்சத்தை உங்கள் உய்த்துணர்வுக்கு விடுகிறேன்.

செவ்வி என்பதற்கு பருவம், காலம், ஏற்ற சமயம் என்ற பொருள்களும் உள்ளன. இவற்றைப் புரிந்துகொள்வது கடினமல்ல என்பதால் நான் இங்கு விவரிக்கவில்லை. காட்சி என்றும் ஒரு பொருள் உள்ளது. இதை வெறும் கண்ணால் பார்ப்பது என்பதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. 'தரிசனம்' என்று கொள்ளவேண்டும். இந்தக்
காதல் தன்னுள்ளே தோற்றுவிக்கும் காட்சி என்ன, தன் வாழ்வை இது எப்படி அடியோடு புரட்டிப் போட்டுவிடும், அதன் உச்சத்தில் தான் முன்பு எப்போதும் உணராத உயரத்தைத் தொடுவோம் -- இவைதான் தரிசனம். இந்தக் கேள்விகளில் கிடைக்கும் விடை எதுவேனும் மனிதனை விலங்கு நிலைக்கு இறக்குவதானால் அவன் காமத்தின் செவ்வி தலைப்பட்ட சிலருள் இல்லை.

செவ்வி என்றால் புதுமை. அவசரமாக ஓடிப்போய் ஒவ்வொரு முறையும் புதிதாய் ஒவ்வொருவரோடு உடலுறவு கொள்வது (one night stand) என்பதாக எண்ணிவிட வேண்டாம். நாம் யாரைக் காதலிக்கிறோமோ அவரே ஒவ்வொரு நாளும் புதியவராக, புதுப்புதுச்சுவை தருகிறவராக இருக்கிறாரா? இது அந்த ஆணிடமோ, பெண்ணிடமோ இருக்கும் உள்ளார்ந்த குணமாக அல்லாது, நமது அன்பு மிகுதியாலே அவரிடம் 'காணும்' புதுமையாகக் கூட இருக்கலாம்.

'செட்னா' என்று href=" http://www.gps.caltech.edu/~mbrown/sedna/ " புதுக்கோளைக் கண்டறிந்திருக்கின்றனர். பத்தாவது கோள் என்று சொல்கின்றனர். சரி, இவர்கள் கண்டுபிடிக்கும் வரை அந்தக் கோள் இல்லாமலா போயிருந்தது? இல்லையே! ஆனால் தெரிந்துகொண்டவுடன் 'அட, இவ்வளவு நாளா அது இருந்திருக்குது, நமக்குத் தெரியாமல் போயிடுச்சே' என்று தோன்றுவதில்லையா! அதுபோலத்தான் காதலியின் முயக்கமும். ஒவ்வொருமுறையும் அவளுடைய புதிய பரிமாணத்தை, சுவையைக் கண்டதும் நாம் நம்முடைய அறியாமையைத் தான் வைதுகொள்ள வேண்டியதாயிருக்கிறது. அதைத்தான் வள்ளுவர் கூறினார்:

அறிதொறும் அறியாமை கண்டற்றால் காமம்
செறிதொறும் சேயிழை மாட்டு

(குறள்: 110; புணர்ச்சி மகிழ்தல்)

[ஒன்றைப் புதிதாகக் கற்கின்ற ஒவ்வொரு முறையும் நம்முடைய அறிவுக்குறைவு வெளிப்படுவதுபோல, அழகிய நகைகளை அணிந்த இவளிடம் ஒவ்வொரு கூடலிலும் புதிதாய் ஒன்றைக் காண்பதும் நிகழ்கிறது].

ஆக, காமசுகம் என்பதில் செவ்வி என்பதற்கு இணையான அழகு, காட்சி, புதுமை ஆகியவை எவ்வளவு முக்கியம் என்பதையும், அது எப்படிச் சிலருக்கே வாய்க்கும் என்பதையும் கொஞ்சம் நுணுகிப் பார்த்தோம்.

மீண்டும் ஆரம்பத்தில் பார்த்த குறள் சொன்னபடி 'மலரினும் மெல்லி'தாகிய காமத்தின் 'செவ்வி தலைப்படும்' சிலரில் நீங்களும் ஒருவரா? யோசித்து விடை கூறுங்கள். அவசரமில்லை.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

பெண் மொழி

நருங்கின உறவினர் குறித்த துயரச் செய்தியைக் கேட்டதும், பால் குடித்துக்கொண்டிருந்த தன் கைக் குழந்தையை வாரியெடுத்துக் கொண்டு புறப்பட்டாள், அந்தப் பெண். பேருந்தில் ஏக நெரிசல். அது நிறுத்தத்தில் சில நிமிடங்களே நிற்கும் என்பதால் இறங்க வேண்டிய இடம் வந்ததும் அவசர அவசரமாகக் க¦ழிறங்கினாள். தன்னை மறந்து உறவினர் வ¦ட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்துகொண்டிருந்த அவளை சாலையோரமாக நின்றுகொண்டிருந்த விடலைப் பையன்கள் வெறித்துப் பார்த்தார்கள். சிலர் பச்சையாக உறவுக்கு அழைத்தார்கள். சில ஆண்கள் ஓரக் கண்ணால் பார்த்து விட்டு கண்டும் காணாதது போலிருந்தார்கள். சிலர் தலையில் அடித்துக்கொண்டார்கள். ஒரே ஒரு கிழவி மட்டும், "ஏய், மூடிக்கிட்டுப் போ!" என்றாள். குனிந்து பார்த்தாள் அந்தப் பெண். குழந்தை பால் குடித்துக்கொண்டிருந்ததால் அவள் ரவிக்கை திறந்து கிடந்தது. அப்போதுதான் நினைவு வந்தவளாவாக "ஐயோ! என் குழந்தை!" என்று அலறிக்கொண்டு பஸ்ஸை நோக்கி ஓடினாள் அவள்.

பெண்களின் மார்பகங்களைப் பார்க்கும் போது ஆண்களுக்குக் கட்டில் ஞாபகம் வருகிறது. பெண்களுக்கோ குழந்தை ஞாபகம் வருகிறது என்று சொல்ல முற்படும் இந்தக் கதையை எப்போதோ படித்திருக்கிறேன். ஆனால் அது இப்போது அடிக்கடி ஞாபகம் வருகிறது.

ஓராண்டுக்கு மேலாகப் பெண் மொழி என்பதைப் பிரப்சினையாக வரித்துக்கொண்டு தமிழ்நாட்டில் உள்ள இதழ்கள் கட்சி கட்டிக்கொண்டு சாமியாடிக் கொண்டிருக்கின்றன. ஒரு பெண் கவிஞர் முலைகள் என்று தன் கவிதைத் தொகுப்புக்கு பெயர் சூட்டி வெளியிட்டார். அப்போது ஆரம்பித்தது இந்த சர்ச்சை. உறுப்புக்களைப் பற்றியும் உடல் உறவைக் குறித்தும் பெண்கள் எழுதுவதை விமர்சிக்கும் ஆண் எழுத்தாளர்களைப் பற்றி இன்னொரு பெண் கவிஞர் வெளியிட்ட கருத்துக்கள் இந்தச் சர்ச்சையை கொழுந்துவிட்டு எரியச் செய்திருக்கிறது. உடல்மொழி/ பெண்மொழி என்று இந்த சர்ச்சை இந்தியா டுடே, தினமணி, குங்குமம், கணையாழி, அமுதசுரபி, குமுதம் குடும்பத்தை சேர்ந்த த¦ராநதி, தலித் முரசு, மனுஷி என நோக்கிலும், தரத்திலும், வேறுபட்டு நிற்கும் பல பத்திரிகைகளில் இந்த சர்ச்சை இடம் பெற்று வருகிறது.

காலங்காலமாக ஆண்கள் பெண்களது அங்கங்களைப் பற்றி எழுதி வந்திருக்கிறார்கள். நாங்கள் எழுதுவதில் என்ன தவறு என்று பெண்நிலைவாதிகள் வாதிடுகிறார்கள். இது மதவாத வலதுசாரிகள் வற்புறுத்துகிற கட்டுப்பெட்டித்தனத்திற்கு எதிரானது என்ற எண்ணத்தில் இடதுசாரிகள் இந்தக் குரல்களை ஆதரித்து மேடைகளில் பேசி வருகிறார்கள். இப்படியெல்லாம் எழுதக் கூடாது என்று சொல்வது ஒருவகைத் தணிக்கை, கருத்து சுதந்திரத்திற்கு எதிரான மனோபாவம் என்று கருதுகிறவர்கள் இந்தப் போக்கை அதிகாரத்திற்கு எதிரான ஒரு குரலாகப் பார்க்கிறார்கள். இதனால் பெண்நிலைவாதிகள், இடதுசாரிகள், முற்போக்காளர்கள் (திமீனீவீஸீவீsts, லிமீயீtவீsts, லிவீதீமீக்ஷீணீறீs) இவர்கள் இந்த விஷயத்தில் ஒரு அணியில் நிற்கிறார்கள்.

பெண்கள் தங்கள் உடலுறுப்புக்களைப் பற்றி எழுதுவது தமிழுக்குப் புதிதல்ல. எரிக்கா ஜங் ஆங்கிலத்தில் இது போன்று எழுதுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆண்டாள் எழுதியிருக்கிறாள். பெண்கள் தங்கள் உடலைப் பார்க்கும் பார்வைக்கும் ஆண்கள் பெண்களின் உடலைப் பார்க்கும் பார்வைக்கும் வேறுபாடு உண்டு என்பதால் இதைக் குறித்து இத்தனை உணர்ச்சித் த¦விரமான சர்ச்சை தேவை இல்லை.

இந்தப் பிரச்சினைக்கு வேறு சில பரிமாணங்கள் இருக்கின்றன என்பதை சக பெண் படைப்பாளிகள், சிந்தனையாளர்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். பெண்ணை உடல் ர¦தியாக மட்டுமே பார்ப்பது, அவளது அங்க லாவண்யங்களைக் கொண்டே அவளை அளவிடுவது என்ற கருத்தியல் தமிழ் சமூகத்தில் ஆழ வேரோடிக் கிடக்கிறது. உத்தியோகம் புருஷ லட்சணம், பெண்ணுக்கு அழகு உடல் என்ற பார்வை இங்கு அங்க¦கரிக்கப்பட்டதாக இருந்திருக்கிறது. இதன் காரணமாக பெண்ணுக்குக் கல்வி மறுக்கப்பப்பட்டதும், கல்வி இரண்டாம் பட்சமாக்கப்பட்டதும் உண்டு. சிறு வயதிலிருந்தே பெண் தனது தோற்றத்தில் கவனம் செலுத்துமாறு பெற்றோர்களாலேயே வற்புறுத்தப்பட்டதும் உண்டு. அழகு குறைவான பெண்ணை, அவள் படிப்பில் கெட்டிக்காரியாக இருந்தாலும், குறைத்து மதிப்பிட்டதுண்டு. இது போன்ற பெண்ணின் உடலை முன்னிறுத்திய கருத்தாக்கம் ஏற்படுத்திய சமூகக் கேடுகள் ஏராளம். வரதட்சிணை, சிசுக் கொலை, விபசாரம், பலதார மணம், ஆணாதிக்கம் போன்ற பல த¦மைகள் இந்தக் கருத்தாக்கத்தில் வேர் கொண்டு நிற்கின்றன.

இந்த நிலையை மாற்றுவதற்கு கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாகப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. பெண் என்பவளும் ஆணைப் போன்றவள்தான். அவளுக்கும் அறிவுண்டு, மனமுண்டு, சிந்தனைத் திறன் உண்டு என்ற கருத்தை நிலைநிறுத்தத் தேவைப்பட்ட முயற்சிகள் கொஞ்ச நஞ்சமல்ல. மகாகவி பாரதி தொடங்கி ஆக்கபூர்வமான இலக்கியங்கள் பெண்களை உடல் ர¦தியாக மட்டும் அணுகும் மனோபாவத்தை மாற்ற முயன்று வருகின்றன. பெரியார் போன்ற சமூக சிந்தனையாளர்கள் இந்த லட்சியத்தை நோக்கித் தமிழர்களை இட்டுச் செல்லத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார்கள்.

இந்த இடைவிடாத முயற்சிகள் வ¦ண் போய்விடவில்லை. ந¦ண்ட போராட்டத்திற்குப் பிறகு சம¦பகாலமாகத்தான் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் தங்கள் அறிவாற்றல், கல்வி போன்ற தகுதிகளின் அடிப்படையில் பதவியும் அதிகாரமும் பெறத் துவங்கி இருப்பதைப் பார்க்கிறோம். பெண்களுக்கு கல்வி மறுக்கும் மனிதர்களை விந்தை மனிதர்களாகப் பார்க்கும் பார்வை ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. இருந்தும் இவையெல்லாம் இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது. ஒரு துவக்கமாகவே இருக்கிறது. இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்பது மட்டுமல்ல, இந்த மனோபாவத்தை பேணிப் பாதுகாத்து செழிக்க செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. இது வெறும் மனோபாவமாக முடிந்து போகாமல் ஒரு கலாசாரமாகத் தழைக்கச் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது.

இப்படிச் சொல்வதற்குக் காரணமுண்டு. இன்று சரியோ, தவறோ, இந்தியா தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என்ற பொருளாதார கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருப்பதன் காரணமாக விரைவாகத் தனியார்மயமாகி வருகிறது. தனியார்மயப் பொருளாதாரம் லாபம் ஈட்டுவதை முதன்மையாகக் கொண்டது. அதன் பொருட்டு கன்ஸ்யூமரிஸ்ட் கலாசாரத்தை அது உயர்த்திப் பிடிக்கும். கன்ஸ்யூமரிஸ்ட் கலாசாரத்தில் பெண்கள் ஒரு நுகர்பொருளாகவே, உடல் சார்ந்தே பார்க்கப்பட்டு வருகிறார்கள்.

தமிழ் வெகுஜன ஊடகங்களும் பெண்களை உடல் ர¦தியாகப் பார்க்கும் மனோபாவத்தைத் த¦விரப்படுத்தி வருகின்றன. கறுப்பாக இருக்கும் பெண் தந்தைக்கு சுமையாகி விட்டதாக தொலைக்காட்சி விளம்பரங்கள் சத்தியம் செய்கின்றன. சாதனை செய்பவனாக அர்ஜுன்தான் இருக்கிறான். ஆர்த்தி அல்ல. அவனுக்குத் தேவையான பாலை பார்த்து வாங்குகிற 'புத்திசாலித்தனம்' மட்டும்தான் அவனது அம்மாவிற்கு. கிரிக்கெட் வர்ணணைக்குக் கூட அழகான பெண்தான் வேண்டும் என்ற நிலையைத் தொலைக்காட்சிகள் உருவாக்கிவிட்டன. கிரிக்கெட் வர்ணனைக்கு 'அழகான' மந்த்ரா பேடிதான் வர வேண்டும், கிரிக்கெட் பற்றி நன்கு அறிந்த முன்னாள் கிரிக்கெட் காப்டன் சுமதி அய்யர்அல்ல. சினிமாவைப் பற்றிப் பேச்சே வேண்டாம். நடிக்கத் தெரிந்த கறுப்பு நிற சாவித்திரிகளும், சரிதாக்களும் காணாமல் போய்விட்டார்கள். ஆன்ம¦கம் என்ற பெயரில் மதவாதம் தலைதூக்குகிற காலம் இது. பெண்களை ஓர் இரண்டாந்தர பிரஜையாகவே எல்லா மதங்களும் கருதி வந்திருக்கின்றன.

பொருளாதாரம், ஊடகங்கள், மதங்கள் இவை ஒரு சமூகத்தின் விழுமியங்களில் (ஸ்ணீறீuமீ sஹ்stமீனீs)ஆழமான தாக்குதல்களை ஏற்படுத்தக் கூடியவை. அதன் மூலம் ஒரு சமூகத்தின் போக்கை மாற்றக் கூடியவை. அவை விரும்பத்தாகாத போக்குகளை உருவாக்குமானால் அவற்றை அரசியல், இலக்கியம், அறிவியல் மனோபாவம் இவற்றின் துணைகொண்டுதான் அதற்கு எதிரான மாற்று விழுமியங்களை உருவாக்க முடியும்.

இப்படி ஒரு மாற்றுக் கலாசாரத்தை உருவாக்க வேண்டிய கடமை இலக்கியத்திற்கு இருப்பதை மறந்து, பெண்களே தங்கள் உடலை முன்னிறுத்தி எழுதத் தலைப்படுவார்களேயானால் அது பெண்ணை உடல் ர¦தியாக அணுகுகிற மனோபாவத்திற்கு ஊக்கம் கொடுப்பதாக ஆகிவிடும். அந்த மனோபாவத்தைப் பெண்களே அங்க¦கரிப்பதாகிவிடும். ஏற்கனவே தாக்குதலுக்கு உள்ளாகி வரும் முற்போக்கான சிந்தனைப் போக்குகள் மேலும் நலிவடையும். இதற்குப் பெண்களே காரணமாக இருந்துவிடலாமா?

விழுமியங்களைக் காப்பது, குடும்பத்தில் ஆகட்டும், சமூகத்தில் ஆகட்டும், பெண்களின் பொறுப்பு என்று காலங்காலமாக போதிக்கப்பட்டு வந்திருக்கிறது. அதே புளித்துப் போன வாதத்தை ந¦ங்களும் சொல்ல வேண்டாம் என்று பெண்கள் ச¦ற வேண்டாம். விழுமியங்களை உருவாக்குவதிலும், பேணுவதிலும், நிலை பெறச் செய்வதிலும் ஆண்களுக்கும் சரி பங்கு உண்டு என்பதை நான் மறுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் இலக்கியம் என்பதுதான் முக்கியம் அதை எழுதியவர் ஆணா பெண்ணா என்பதல்ல என்பதுதான் என்னுடைய பார்வை. உடலை பிரதானப்படுத்தி எழுதும் புஷ்பா தங்கதுரையின் எழுத்துக்கள் எவ்வளவு கண்டிக்கத்தக்கவையோ அதே அளவு கண்டிக்கத்தக்கவைதான் சிற்றிதழ் பெண் கவிஞர்களின் 'ஆபாச' எழுத்துக்களும். இரண்டிற்கும் நோக்ககங்கள் வேறாக இருக்கலாம். ஆனால் விளைவுகள் ஒன்றாகத்தான் இருக்கும்.

நன்றி-பெண்ணேநீ

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, August 03, 2006

உள்வீட்டில் எல்லாமே உள்ளபடி....உள்ளபடி....

- சாந்தி ரமேஷ் வவுனியன் -

நெற்றிப்பொட்டு விட்டெறிந்து
நெடுங்காலம் ஆயிற்று.
கட்டிவந்த கூறைப்பட்டு
கழற்றி வைத்து ண்டாச்சு.
கழுத்திருந்த தாலி கழற்றிக்
கனகாலம் போயிற்று.

கனத்திருந்த அட்டியலும் ,
கைநிறைத்த பொன்வளையல் ,
காதுக்குத் தினமொன்றாய்
கனம் தந்த குண்டலங்கள் ,
எல்லாம் விட்டாச்சு...
கடவுளின் பெயராலே
பெண்கள் கலங்குவது பொறுத்திடாது
கடவுளையும் வணங்குவதை
கடவுளாணை மறந்தாச்சு.

அடிமைகளை எழுப்பி வைக்கப்
புதுமையாய் எழுந்தாச்சு.
எல்லாம்.....எல்லாம்....
எடுத்தெறிந்து பலகாலம்....
எண்ணிக்கை மறந்தாச்சு....
எண்ணமதில் தீமூண்டு
எழுதியவை ஏராளம்.

திண்ணமுடன் தைரியமாய்
சொன்னவைகள் ஏராளம்....
“பாவரசன் பாரதியின்
வரிகளுக்கு உரியவராய்
வலம் வந்த புதுமையின்
பொய்சொன்ன வாய்மொழிகள்
மெய்யென்றுணர்ந்து
மேன்னைமிகு தகுதியெல்லாம்
கொடுத்து வைத்தோம் !

கழுத்தில் கனமான தங்கக்கடை,
கையிலும் வளையலாய்,
மின்னியொழி பாய்சியபடி....
அவிழ்த்து வைத்ததாய்
சத்தியம் செய்த சேலையும்,
மறந்து போன நெற்றிப்பொட்டும்,
கா அதுவும் அழகுதான்.

புதுமைசெய்யப் புறப்பட்ட
புதுமையரின் வாரிசொன்றின்
திருமணத்தில் வேண்டாமென்று
சொன்னவைகள் ,
அடிமையென இருந்தவைகள்....
காணக்கண்கோடி போதுமா ?

தம்பிள்ளை மணவாழ்வில்
இணைந்து விட,
சைவத்தார் முறைப்படி
பொன்னுருக்கி , தாலிசெய்து ,
வேட்டி தலைப்பாகையுடன் கூறைகட்டி ,
மணவறையில் வந்தமர்ந்து
அக்கினி சாட்சி வைத்து
இல்லாத அருந்ததியை
இருந்த இடமிருந்து நோக்கி ,
இருமருங்கும் தாரைவார்த்துத்
தம்பதியர் பெற்றோராய்....
புதுமை செய்யும் பெற்றோராய்....

மற்றோர்க்கு உபதேசம்
பெற்றவர்க்குக் கடைப்பிடிக்க
முடியாத வெளிவேசம்.
திரும்பவும் திரும்பவும்
ஊருக்கு மட்டும் உபதேசம் !
உள்வீட்டில் எல்லாமே
உள்ளபடி....உள்ளபடி....
என்ன செய்ய இந்தச்சாபம்
எங்களுக்குத் தீராதோ ???
சொன்னவரின் வாய்களிதைச்
செவிவைத்துக் கேளாதோ ????

rameshsanthi@hotmail.com
20.03.04

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

கருத்துக்களும் கண்டனங்களும் - எழுநா

31.10.02

எழுநாவில் வெளியாகி இருந்த ஊடகங்களின் நாயகர்கள் யார் என்ற பகுதி தொடர்பாகவே அண்மைய நாட்களில் எழுநாவிற்கு கடிதங்கள் வந்திருந்தன. வந்திருந்த அத்தனை கடிதங்களும் கண்டனக்கடிதங்களாக இருந்தமையை தெரிவிக்கவேண்டியுள்ளது.

தனிப்பட்ட தங்களது காழ்ப்புணர்ச்சிகளை தீர்ப்பதற்கு எழுநாவை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என உரிமையோடு தங்கள் கருத்துக்களை பலரும் எழுதிருந்தார்கள

உறவுகளுக்கு வணக்கம். நடந்து முடிந்த மானுடத்தின் தமிழக் கூடல் 2002 குறித்து எழுத வேண்டும் என்று நினைத்திருந்த போது அது தவிர்ந்த இன்னுமொரு சர்ச்சைக்குரிய விடயம் குறித்து எழுத வேண்டி யேற்பட்டுள்ளது. எழுநாவில் வெளியாகி இருந்த ஊடகங்களின் நாயகர்கள் யார் என்ற பகுதி தொடர்பாகவே அண்மைய நாட்களில் எழுநாவிற்கு கடிதங்கள் வந்திருந்தன. வந்திருந்த அத்தனை கடிதங்களும் கண்டனக் கடிதங்களாக இருந்தமையை தெரிவிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக ஒரு கடிதத்தில் தனிப்பட்ட வகையில் ஒலிபரப்பாளர்கள் இலக்காக்கக்கப் பட்டுள்ளதன் மூலம் தனது தனிப்பட்ட இயலாமையை அல்லது
ஆதங்கத்தை வெளிப்படுத்த கட்டுரையாளர் முனைகிறாரா என்ற சந்தேகம் தவிர்க்க முடியாதபடி எழுகிறது. ஏனெனில் புலம் பெயர்ந்ததே சுயநலத்தின் உச்சம். அவ்வாறான நிலையில் கூட
இவ்வாறு பணியாற்றுதல் என்பது சாதகமாக உள்வாங்கப்பட வேண்டுமே தவிர, புலம்பெயர்ந்த ஒருவரே ஒவ்வொரு ஒலிபரப்பாளரிலும் தான் கொண்டுள்ள கருத்தை விடுதலையைக் காரணம் காட்டி மற்றவர்கள் மீது திணிப்பதற்கு நீங்கள் இடமளிக்கக் கூடாது. என தெரிவிக்கப் பட்டுள்ளது. இன்னும் தனிப்பட்ட தங்களது காழ்ப்புணர்ச்சிகளை தீர்ப்பதற்கு எழுநாவை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என உரிமையோடு தங்கள் கருத்துக்களை எழுதிருந்தார்கள். இதே வேளை பரபரப்பிற்காக இவ்வாறான விடயங்களை வெளியிடுதலை தவிர்க்க வேண்டும் எனவும் சிலர் கூறியிருந்தார்கள். ஆயினும் அக்கட்டுரை வெறும் பரபரப்பிற்காக
வெளியிடப் படவில்லை என்பதனை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கின்றோம். இந்நிலையில் அக்கட்டுரையில் குறிப்பிட்ட விடயங்களின் மெய் பொய் நிலைகளை தாயகத்திலிருக்கும்
எழுநா அறிந்து கொள்ள வாய்ப்பில்லாத சூழலில் இக்கட்டுரையினை வெளியிட்டிருக்கக் கூடாது எனவும் கடிதங்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அக்கருத்தினில் இருக்கும் நியாயத்தன்மையை எழுநா ஏற்றுக் கொள்கின்றது. ஆயினும் அக் கட்டுரையினை ஒரு முடிந்த
முடிவுக் கருத்தாக எழுநா வெளியிடவில்லை. அவ்வாறான ஒரு கருத்து முன் வைக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்த மறுப்புக்களையும் மாற்றுக் கருத்தினையும் நாம் எதிர்பார்த்தோம். குறிப்பாக குறித்த ஒரு வானொலி குறித்து தாயகனின் கருத்துக்களை மறுதலித்து அனேகரின் கருத்துக்கள் வந்தடைந்தன. ஐ.பி.சி வானொலி எவ்வளவோ கஷ்டத்துக்கு மத்தியில் சேவையாற்றுகிறது. அவ்வானொலி ஒன்றுதான் உலகில் உள்ள தமிழ் வானொலிகளில் உருப்படியாக செய்கிறது. அதனையும் தாக்கி எழுதியிருக்கிறீர்கள் என ஒரு வாசக நண்பர் எழுதியிருந்தார். அத்துடன் இப்பத்தியை எழுதியவரின் உண்மையான பெயரினை அறியத் தந்து அக்கட்டுரையினை வெளியிட்டிருக்கலாம் எனவும் சிலர் தெரிவித்திருந்தார்கள். இக் கருத்தினை அக் கட்டுரையினை எழுதியவரின் சிந்தனைக்கே விட்டு விடுகின்றோம். கருத்துக்களை, கண்டனங்களை எழுதியவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து
அக்கட்டுரையினை எழுநா நீக்கியிருக்கின்றது. உங்கள் கருத்துக்கள் கண்டனங்களாக இருந்த போதும் உடனுக்குடன் எம்மை வந்தடையும் போது, நீங்கள் எம்மோடு இணைந்திருக்கின்றீர்கள்
என்பதறிந்து எழுநா மகிழ்வடைகின்றது. மீண்டும் சந்திப்போம்.
நி.கெனடி


உங்கள் கருத்துக்கள்.

இ.கரன்
அவுஸ்திரேலியா

உங்களுடைய தளத்தில் 'ஊடகங்களின் நாயகர்கள் யார்?" என்கிற கட்டுரை வாசித்தேன். உங்களுடைய தளம் இப்பொழுது வளர்ந்து வரும் தளம். ஏன் இப்படி பிற ஊடகங்களை தாக்கி கட்டுரையினை வெளியிடுகிறீர்கள். வெளியிட்டீர்கள் எழுதியவரின் பெயரை
ஏன் வெளியிடவில்லை? ஐ.பி.சி வானொலி எவ்வளவோ கஷ்டத்துக்கு மத்தியில் சேவையாற்றுகிறது. அவ்வானொலி ஒன்றுதான் உலகில் உள்ள தமிழ் வானொலிகளில் உருப்படியாக
செய்கிறது. அதனையும் தாக்கி எழுதியிருக்கிறீர்கள். தயவு செய்து இப்படியான கட்டுரைகளை வெளியிடுவதாயின் ஒரு தடவைக்கு இரு தடவை சிந்தித்து அல்லது எழுதியவரின் உண்மையான பெயரினை போட்டு வெளியிடுங்கள்.உங்களுடைய தளத்தினை சிறந்த தளமாக கொண்டு வர முயற்சி செய்யுங்கள். அதனை விட்டுவிட்டு பரபரப்புக்காக இப்படியான கட்டுரைகளை வெளியிட்டால் பின்னர் தளத்தினை மக்கள் வெறுக்கவே செய்வார்கள்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

ஊடகங்களின் நாயகர்கள் யார்?

- ஐரோப்பாவிலிருந்து தாயகன் -


இவ் ஈட்டி குறிப்பிட்ட சில நபர்களின் பெயர்களை சுட்டிக் காட்டி வருகின்றது. இப்பத்தியாளர் தனிப்பட்ட ரீதியில் யாரையும் தாக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவராயினும் அவரது உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தும் போது இவ்வாறு பெயர்கள் சுட்டிக்காட்டப்படுவது தவிர்க்க வியலாதது என்பதனை எழுநா ஏற்றுக் கொள்கின்றது. எனினும் இவ் ஈட்டி தொடர்பில் உங்கள் மறுப்புக்கள், மாற்றுக் கருத்துக்கள் ஏதுமிருப்பின் எழுதுங்கள்.
தற்போது ஐரோப்பாவிலும் சரி இலங்கையில் அதாவது கொழும்புத் தமிழ் ஊடகங்களிலும் சரி நாயகர்களாக விளங்குபவர்கள் ஊடகங்களின் அறிவிப்பாளர்களே. தென்னிந்திய சினிமா நட்சத்திரங்கள் எமக்குள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அளவுக்கு அறிவிப்பாளர்கள் எம்மவர் மனங்களின் கனவு நாயகனாக , கனவு நாயகியாக மாறியுள்ளார்கள். ஒரு வகையில் மகிழ்ச்சிக்குரிய விடயமே. எனினும் இந்த நாயகர்களினதும் , நாயகிகளினதும் திறமையால் இந்தநிலையை அடைந்திருந்தால் பாராட்டலாம் , வரவேற்கலாம். ஆனால் இவர்கள் எப்படி இந்தளவுக்கு வளர்ந்தார்கள் என்று பார்த்தால், அனேகமாக பந்தம்தான் இத்தனை உயர்ச்சிக்குக் காரணமாகிறது. அல்லது ஐரோப்பா வந்தவுடன் பெரிய புழுகு மூட்டையை அவிழ்த்து விடுவார்கள். அது யாதெனில் "நான் றேடியோ சிலோனில் வேலை செய்தேன் , சக்தி ரீவியில் வேலைசெய்தேன் , அல்லது சக்தி றேடியோவில் வேலை செய்தேன், அல்லது போனால் சூரியனில் வேலை செய்தேன் என்று மூட்டையை அவிழ்க்க எங்களது ஊடகங்களும் ஓடிப்போய் புழுகு கூட்டத்தின் காலே கதியென்று விழுந்து விடுவார்கள். பின்னர் வானலைகளில் வந்து தங்கள் புகழ்பாடநேயர்களெல்லாம் அப்படியே கரைந்து விடுவார்கள். இப்படித்தான் தேசிய வானொலி ஐபீசி ஆரம்பமான பொழுது எஸ்.கே.ராஜன் என்ற அறிவிப்பாளர் ஒருவர் வந்து புழுகியிருக்கிறார் தான் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியதாக. ஆனால் ராஜன் கூறிய காலப்பகுதியில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய ஒருவரும் அங்கு பணி புரிந்துள்ளார். ஆனால் அவரும் ராஜனைக் காட்டிக் கொடுக்கவில்லை. பின்னர் ஒரு பிரச்சனை வந்தபோது உண்மையாகவே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணிபுரிந்து ஐபீசியில் பணிபுரிந்தவரால் ராஜனின் பொய் வெளிவந்தது. ஆனால் அது அப்படியே மூடி மறைக்கப் பட்டு விட்டது. எஸ்.கே.ராஜன் என்கின்ற அறிவிப்பாளர் யாழ் மணிக்குரல் சேவையில் கடமையாற்றியவர் என்பது பலருக்குத் தெரிந்த விடயம். எஸ்.கே.ராஜனுக்கு நேயர்களுடன் கதைக்கத் தெரியாது , நிகழ்ச்சியை நேயர்களுக்கு ஏற்ப வழங்கத் தெரியாது என்பது பலரது கருத்து. அது ராஜனுக்குத் தெரியுமோ தெரியாது. அவரது நிகழ்ச்சிகளைக் கேட்போருக்கு அது புரியும். தனக்குப் பிடித்த நேயர்களென்றால் ராஜன் அவர்களைத் தூக்கிப் பிடிப்பார். தனக்குப் பிடிக்காத அல்லது , தனது நிகழ்ச்சிகளில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டிய ஒருவர் அவரது நிகழ்ச்சியில் வந்தாலோ அவர்களை மதிக்க மாட்டார். ஒரு இரவு ஐபீசியில் நீங்களும் பாடலாம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். நீங்களும் பாடலாம் நிகழ்ச்சி JAFFNA ஸ்ரோர் ஆதரவில் நடந்து கொண்டிருந்தது. நீங்களும் பாடலாம் என்பதன் பொருள் நீயும் பாடலாம் , நானும் பாடலாம் , யாரும் பாலடாம் என்றே யாவரும் கருதுவர். ஆனால் அந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றிய பலர் ராஜன் எதிர் பார்த்த சுருதிச் சுத்தமோ , குரல் இனிமையோ கொண்டிருக்கவில்லை. அப்படியான சிலரை உடனடியாக ராஜன் நிறுத்தி பாடுபவர்கள் மட்டும் வாருங்கள் நான் பாடுபவர்களை மட்டும்தான் அழைக்கிறேன் என்றார். இந்த வார்த்தைகள் அந்த நேயர்களை எந்தளவுக்கு மனவேதனைப் படுத்தியிருக்கும் என்பதை ராஜன் நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால் இதில் வேதனை என்னவென்றால் அந்த நிழக்ச்சியில் பாட வந்து ராஜனிடம் அடி விழும் வார்த்தைகளை வாங்கிய நேயர்கள் வேலை தவிர்ந்து மற்ற நேரமெல்லாம் இந்த ஊடகங்களே தங்களது உலகம் என வாழும் அறியாமை மனிதர்கள். பாவம் அவர்கள். அதுவும் இந்தநாடுகளில் வேலைவேலையென ஓடிவிட்டு கிடைக்கும் நேரத்தை இனிமையாக்க நினைப்போருக்கு இந்த ஊடக நாயகர்கள் கொடுக்கும் இனிமை இதுதான். சிலவேளை இக்கட்டுரையை ராஜன் வாசிக்க நேர்ந்தால் யாரிவர் என்னை இப்படி எழுதியது எனக் கொதிப்பார். தயவு செய்து ராஜன் இதனை வாசிக்க நேர்ந்தால் உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள். இன்னுமொரு சம்பவம் ஒரு விளம்பரத்தில் நீங்கள் விரும்பும் அனைத்து சினிமாப்பாடல் சிடிக்களையும் இங்கு பெற்றுக் கொள்ளலாம் வரிசையில் அரிசி , பருப்பு என எல்லாம் சொல்லப் பட்டது ஆனால் அந்த விளம்பரத்துக்காகப் போடப் பட்ட பாடல் விடுதலைப்பாடல். விடுதலைப் பாடலுக்குத் தொடர்பேயில்லாத ஒரு விளம்பரத்துக்கு ஏன் விடுதலைப் பாடல் போட்டீர்கள் அதற்குப் பொருத்தமான வேறுபாடலைப் போட்டிருக்கலாம் என நேயர் ஒருவரால் சொல்லப்பட்ட போது அந்த நேயரை ராஜன் அவமானப்படுத்திப் பேசியது மட்டுமல்ல , உங்களுக் கெல்லாம் கனக்கத் தெரியுமா ? நாங்கள் எத்தனை இடங்களைத் தாண்டி வந்தனாங்களெண்டு தெரியுமா ? என்றெல்லாம் தனது அருமை பெருமைகளை யெல்லாம் சொல்லி அந்த நேயரை வானொலியின் பக்கமே போகாது செய்தவர். விமர்சனங்கள்தான் இலக்கியவாதியை , கலைஞனை வளர்ப்பது. ஆனால் விமர்சனங்கள் தங்களது தகுதிக்கு தேவையில்லை யென்று தான்தோன்றித் தனமாக எழுந்துள்ள இப்படியான கலைஞர்களிடம் இருப்பது திறமையா ? தலைக்கனமா ? துள்ளிற மாடு பொதிசுமக்கும் எனும் பழமொழிதான் ஞாபகத்துக்கு வருகிறது.

அதே ஊடகத்திலிருந்து இன்னொருவர் கலா புவனேந்திரன். இவரை ஆரம்பத்தில் ஐபீசியில் அனேகமான அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சிக்குப் பொருத்தமில்லையென்று தள்ளி வைத்திருக்க எப்படியோ நிகழ்ச்சியொன்றில் கால்வைத்தார். அதன் பின்னர் செய்தி வாசிப்புக்கும் வந்து. தற்போது பலநிகழ்ச்சிகளின் நாயகியாகயும் அனேகமாக செய்தியும் அவரிடமே. செய்தி வாசிப்பதற்கு சிலரால்தான் முடியும். சுத்தமாக சொல்லை உச்சரித்து , நிகழ்ச்சிக்கு பாவங்கள் காட்டுவது போலன்றி , உணர்வுக் கொட்டலாகவோ இன்றி இருக்க வேண்டும். நேயர்களுக்கு செய்தி சென்றடைய வேண்டுமேயன்றி செய்தி வாசிப்பாளரிடம் நேயர் லயித்து விடக் கூடாது. ஆனால் கலாபுவனேந்திரனின் செய்தி வாசிப்பு தாயகம் வரையும் போகிறது. உச்சரிப்புகள் அதிகம் விழுங்கப் பட்டு , சொற்பிழைகள் , உணர்ச்சி பாவ வெளிப்பாடுகளே செய்தியில் வருகிறது. அனைத்துலக ஒலிபரப்பு என்பதை கலாவின் உச்சரிப்பில் அணைத்துளக ஒளிபரப்பு என்றுதான் வருகிறது. கலாவிடம் திறமை இருக்கிறது. நாடகத்துக்கு ஏற்ற திறமையிருக்கிறது. ஆனால் செய்திக்கோ நல்லதொரு நிகழ்ச்சிக்கோவுரிய எந்தத் திறமையும் இல்லை. அக்கினி என்றதொரு பெண்ணிய நிகழ்ச்சியை நடாத்துகிறார். அக்கினி என்பதை அக்ணி என்றுதான் வருடக் கணக்காக உச்சரித்து வருகிறார். இந்தப் பெண்ணியத்தில் கலாவுக்கு உரிய விழிப்பு எத்தனையளவு தெளிவென்று பார்த்தால் பூச்சியமே விடையாகிறது. இப்படித்தான் ஒருதரம் நிகழ்ச்சியில் புலவர் சிவநாதன் என்பவரிடம் கலா பெண்ணியம் தொடர்பாக செவ்வியொன்று எடுத்துப் போட்டது. ஆனால் அந்தப்புலமைவாதி பச்சையாக பெண்ணியவாதிகளையே தனது திறமை மூலம் கொச்சையாயும் , பச்சையாயும் சொல்ல அதைக் கலா அப்படியே வானலையில் போட்டுவிட பலரிடமிருந்து சர்ச்சை கிழம்பி கலாவைப் பலர் கேள்வி கேட்க கலா அவர்களுக்குச் சொன்ன பதில் புலவரெண்டு ஏதோ நல்லது சொல்லுதெண்டு போட்டுட்டன் அந்தாள் பச்சையாப் பேசியிருக்கெண்டு எனக்கு விளங்கேல்லை என்று சொன்னது. ஒரு நிகழ்ச்சியைச் செய்ய வரும்போது அந்த நிகழ்ச்சியில் வருகின்ற குறை நிறைகள் , தரம் எல்லாவற்றையும் தானே புரிந்து வைத்து அதற்கேற்பவே தனது நிகழ்ச்சியைத் தரவேண்டும். அதுதான் அந்த நிகழ்ச்சியையும் , அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளரையும் முன்னேற்றும். தனக்கெடாச் சிங்களம் தன்பிடரிக்குச் சேதமாம்'' புரியுமா கலாவுக்கு ? இது காலாவுக்கு மட்டுமல்ல அனைத்து ஊடகங்களில் இருக்கும் அனைத்து அறிவிப்பாளருக்கும்தான்.

காலையில் தேடிவரும் தென்றலென்றதொரு நிகழ்ச்சி ஐபீசியில் வருகிறது. அதில் நேயர்களின் பெயரில் அறிவிப்பாளரின் தேர்வில் பாடல் கேட்பது. காலையில் தொலைபேசியெடுத்து நேயர்கள் தங்களது பெயர்களைச் சொல்ல பாடல் ஒலிபரப்பாகும். இந்த நிகழ்ச்சியை அனேகமாக ஒலிபரப்பும் பராபிரபா செய்யும் கு------த்தனம் ஒன்று அடிக்கடி பலரை ஆத்திரமடையவும் அதேசமயம் அனுதாபப் படவும் வைக்கிறது. யாரேனும் தெரிந்தவர்களின் அல்லது அவரது நண்பர்களின் நண்பர்களின் தொலைபேசியிலக்கத்தை எடுத்து காலையில் எழுப்பி வைத்து அறுப்பது. சிலர் இரவு வேலைக்குப் போய்விட்டு வந்து படுத்திருப்பார்கள் , சிலர் அப்போதுதான் வேலைக்குப் புறப்படுவோராக இருக்கும் தான் யாரென்பதைச் சொல்லாமல் ஏதோ வேண்டிய ஒருவர் போலக் கதைப்பர். தேவையில்லா அரட்டையாக , வம்பாக இருக்கும். சிலர் தமக்கு வேண்டியவர் என நினைத்து தனிப்படக்கதைக்க வேண்டிய விடயங்களைக் கூடக் கதைத்து விடுவார்கள். இறுதியில்தான் ஐபீசியில் இருந்து கதைக்கிறேன் பராபிரபா என்று சொன்னவுடன் தொலைபேசித் தொடர்பில் நிற்பவர் திகைத்துப் போவார். இது தேவையா ? இப்படி ஏன் கு-----த்தனம் செய்ய வேண்டும் ? தனது திறமையையை வெளிக் காட்டுவதாக நினைத்து தனது நல்ல திறன்களையே முட்டாள்த் தனமாக்குவதேன்?

அடுத்து சிலர் தாயகம் தாயகம் என்று வானலையில் வந்து நின்று முழங்குவார்கள். அண்மையில் ஒரு நிகழ்ச்சி கேட்கநேர்ந்தது. அதுவும் ஐபீசியில்தான் நிகழ்ச்சியின் பெயர் நினைவில் இல்லை. கௌசி ரவிசங்கரும் , எஸ்.கே.ராஜனும் செய்தார்கள். புலம்பெயர்ந்த யாருக்குமே தாயகப்பற்றோ கடமையுணர்வோ இல்லையென்பது போலவும் புலம்பெயர்ந்தோர் எல்லாம் சுயநலவாதிகள் என்பது போலவும் இருவரும் கதைத்துக் கொண்டார்கள் வானலையில். தெரியாமல்தான் கேட்கிறோம் இந்தக் கௌசியும் , ராஜனும் நாட்டுக்காக தங்களது பணத்தில் அதாவது தங்களது உழைப்பில் எத்தனை சதத்தைக் கொடுத்திருக்கிறார்கள்? தாயகத்துக்குப் போய்வந்தவுடனும் இவர்கள்தான் தலைவரின் ஆணையின் பேரில் அனுப்பப் பட்டிருப்பது போன்றதொரு நினைவும் , தாங்களே தேசபக்தி மிகுந்தவர்கள் என்ற திமிரும் இவர்களுக்குள் ஏனோ வந்து விடுகிறது !?! ராஜனின் திமிர்க்குணம் அதாவது நேயர்களை தமக்குப் பிடித்தவர்களைத் தூக்கி வைத்து வணங்குவது கௌசி ரவிசங்கருக்கும் தொற்றியுள்ளது. இந்தத் தொற்று நோய் கௌசியிடம்இருக்கும் திறமையை அழித்து விடும்.

இன்னொருவர் சந்திரா ரவீந்திரன். இவரது சகோதரர்கள் இருவர் மாவீhர்கள். அதனையே சொல்லிச் சொல்லி தன்னையும் தனது குடும்பத்தையும் ஐபீசிக்குள் வெற்றிக்கொடி நாட்டியுள்ள அறிவிப்பாளர். இவர் ஒரு எழுத்தாளர். அந்தக் காரணத்தைக் காட்டியே இரவி அருணாசலத்தால் ஐபீசிக்குள் அறிமுகப் படுத்தப் பட்டவர். இவரிடம் திறமையிருக்கிறது. ஆனால் அதை நல்ல விதமாகப் பயன்படுத்தத் தெரியாது தத்தளிக்கிறார். இவரது நிகழ்ச்சி ஐபீசி நேயர்களுக்கு என்றுதான் சொல்லப் படுகிறது. ஆனால் இவர் செய்யும் அத்தனை நிகழ்ச்சிகளும் இவரது அக்கா சந்திரவதனா , அத்தான் செல்வகுமாரன் , அண்ணன் தீட்சண்யன் , சந்திரா ரவீந்திரனுக்காகவுமே நடாத்தப் படுகிறது. இவரது நிகழ்ச்சியில் மூனாவைத்தவிர ஒருவரும் நாடகம் எழுத முடியாது. ஏனென்றால் மற்றவர்கள் யாரிடமும் நாடகம் எழுதும் திறமையில்லை யென்பது இவரது கருத்து. தான் ஒரு எழுத்தாளர் தனக்குத்தான் இலக்கியமே சேவகம் செய்கிறது என்ற கோட்பாடு கொண்ட அறிவிப்பாளர். இவரை போற்றிப் பாடினால் தன்னுடன் சேர்ப்பார். அதாவது அவர்களது சுயவிளம்பரம் செய்ய முன் வருவோரை மட்டுமே நண்பர்க ளாக்குவார்கள். மற்றவர் எல்லோரும் தேசத்துரோகிகள். நாகரீகமாக கதைக்க எழுதத் தெரியாதவர்கள். இந்தச் சந்திரா ரவீந்திரன் தாயகத்துக்கே திரும்ப மாட்டேன் என்கிற லட்சியத்துடன் லண்டனே சொர்க்கம் என வாழுபவர். ஏசி இல்லாமல் காறில் ஏறமாட்டாதவர். இவர்கள்தான் தேசத்தை நேசிக்கும் அறிவிப்பாளர்கள். மாவீரர்கள் எங்கள் மண்ணின் சொத்து மாவீரர் குடும்பங்கள் போற்றப்பட வேண்டியவர்கள். மதிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் அந்தத் தியாகங்களைச் சொல்லியே தங்களது பெயரை நிலை நாட்டுபவர்களை எப்படி மதிக்க முடியும் ? போற்ற முடியும் ? அந்தப் புனிதமானவர்களே இந்தப் புல்லுருவிகளை மன்னிக்க மாட்டார்கள்.

கே.வி.நந்தன். இவர்பாணி இன்னொருபாணி. இங்குள்ள எல்லா ஊடகத்துப் புத்திஜீவிகளை ஏப்பம் விட்ட சாதுரியன். பஞ்சாயத்து என்றதொரு நிகழ்ச்சி இவரது சீதனம். பஞ்சாயத்தில் விவாதத்துக்கு எடுக்கப்படும் தலைப்புகள் நந்தனின் தலையில் என்ன இருக்கிறது என்பதைச் சிந்திக்க வைக்கும். அத்தனை பிற்போக்குத்தனமான விவாதங்களும் , கருத்துக்களும். இன்று புலம்பெயர் நாடுகளில் பெண்கள் ஓரளவு தம்மைப்பற்றிச் சிந்திப்பவர்களாக , பெண்ணியச் சிந்தனையுள்ளவர்களா , உலகைப் பார்ப்பவர்களாக வளர்ந்துள்ளார்கள். ஆனால் நந்தனின் விவாதத் தலைப்புகள் அத்தனையும் கே.பாக்கியராஜ் அவர்களின் பிற்போக்குத்தனம் மிகுந்துள்ளது. தேவையா பஞ்சாயத்து ? இங்குள்ள எத்தனையோ பிரச்சனைகளுக்கு யதார்த்தமான தீர்வுகள் தேவைப்படும் இக்காலத்தில் பஞ்சாயத்து என்று சொல்லி ஆண் பெண் மோதலை வளர்த்துவிடும் சாதுரியம் ஏனோ ? நான்தான் நான்தானென்று அரட்டையரங்கு செய்து திரிந்த விசுவுக்கு அண்மையில் நடந்தது அறிவோம்தானே. நந்தனுக்கும் அதுதான் கதியோ தெரியாது. தனது திறமையை நல்ல விடயங்களுக்காகப் பயன்படுத்தினால் நந்தனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. பந்தம் பிடித்து ஊடகத்தினுள் நுளையும் ஆட்களால் உண்மையான திறமையாளர்கள், நேர்மையாக ஊடகத்தின் பலத்தை உணர்ந்து , ஒரு ஊடகவியலாளனுக்குரிய கடமையைச் செய்ய வரும் நல்லவர்கள், ஊடக உள்வீட்டுச் சதியால் எப்படியும் வெளியேற்றப் பட்டு விடுவார்கள் , அல்லது குறிப்பிட்ட நபர்மீது ஏதாவது குற்றத்தையாவது சுமத்தி வெளியேற்றி விடுவார்கள். தற்போது ஓரு ஊடகத்தில் நிலைப்பதானால் ஒன்றில் அந்த நிர்வாகம் சொல்லும் எல்லாவற்றுக்கும் ஆமாப் போட்டுக் கொண்டிருக்க வேண்டும் , இல்லது நிர்வாக உரிமையாளருக்கு வேண்டியவராக , இல்லது நிர்வாகிக்கு பிரியமான அறிவிப்பாளருக்கு வால் பிடித்தால் மட்டுமே நிலைக்க முடியும்.

இப்படித்தான் ஊடக உள்வீட்டுச் சதிசெய்து ஐபீசியில் பல திறமையானவர்களை வெளியேற்றி வீணான பழிக்கும் பலரை உள்ளாக்கிய இரவி அருணாசலம் இன்று ஆடி , அடங்கி , ஒடுங்கிப் போயிருக்கிறார். எந்தச்சதி எப்படியிருப்பினும் காலம் இந்தத் துரோகத்தனங்களை தண்டித்தே தீரும்.தமிழ் அலையென்றொரு கூட்டம் குகநாதனின் தலைமையில் பெரும் எடுப்பில் மக்களின் பணத்தைத் தனது வானொலிக்காகவும் தொலைக் காட்சிக்காகவும் கொட்டுவித்துக் கூத்தாடுகிறது.

முன்பொரு காலம் குகநாதன்தான் ஐரோப்பியத் தமிழர்களின் தலைவர் பிரபாகரனாய் இருந்தவர். இவரது தமிழ் அலையில் ஏ.எஸ்.ராஜா என்றொரு நாயகன் அந்த நாயகனது மச்சான் புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த கப்டன்.லோலோ. அந்தவீரனின் பெயரைச்சொல்லித் தனது பெயரை பிரபலமாக்கியவர். கே.எஸ்.ராஜா தானே என்றதொரு இறுமாப்பு இவருக்கு. விளம்பரம் ஒரு கடை விளம்பரமென்றால் தொடர்புத் தொலைபேசியிலக்கம் சொல்லுவார் உதாரணத்துக்கு ஆச்சிதுணையென்றால் கல்லோ ஆச்சிதுணை என்றே சொல்வார். விளம்பரத்தைக் கேட்போருக்கு ராஜாவின் அறியாமை தெளிவாகப்புலப்படும். ராஜாவுக்கென்று ஒரு மகளீர் கூட்டமே உண்டு. நண்பனொருவன் சொன்னான் எங்கடை பெண்களுக்கு ஏ.எஸ்.ராஜாவெண்டா ------------------------------ அந்த அளவுக்கு வளியும் ஒரு கூட்டம். ராஜாண்ணா என்றால் பலருக்கு உயிரே உருகும். தமிழ் அலைக்குள் ஒரு தர்சன். இவரது தம்பியார் போராளியாம். அவரது பெயர் தர்சனாம். அந்தப்பெயரைத் தனதாக்கி ஊடகத்துக்குள் வந்தவர். நல்ல குரல் வளம் உண்டு. விவாத நிகழ்ச்சிகளை நடாத்த தகுதியாக சாதுரியம் வெட்டிப்பேசும் திறம் எல்லாம் இருக்கிறது. தன்னைவிட்டால் யாருமே இல்லையென்ற தலைக்கனம் அதிகம். இதனால் பலநேயர்களை இழந்துள்ளார்.

குகநாதன் சனத்தை ஏமாற்றி பணத்தை வாங்கி ஊடகம் என்ற பெயரில் அழிக்கிறார். இதற்கு உடந்தையாக எங்களது சனமும் சிலதுகள் வட்டிக்கும் காசெடுத்துக் குடுத்து குநநாதண்ணாவே கோவில் என்று வாழ்கிறது. இப்போ ரீவியும் தொடங்கி தமிழன்ரை பணத்தை வெள்ளையனுக்குத் தாரை வார்க்கிறார். ரீபீசியென்றொரு கூட்டம் கொஞ்சக்காலம் எங்களையெல்லாம் ஆட்டிப்படைத்தது. மேற்சொன்னவர்களையெல்லாம் மிஞ்சும் விதமாக வன்னியுடன் நேரடித்தொடர்பு , தலைவருடன் நேரடிப்பேச்சு , அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனுடன் தொடர்பு , புலிகளின் குரலுடன் நேரடித்தொடர்பு என்றெல்லாம் பூச்சாண்டி காட்டி பெரும் முழக்கமிட்டது. ராம்ராஜ் ஜெயக்குமார் தலைமையில். ரீபீசி என்றால் புலிகள் புலிகள் என்றால் ரீபீசி என்று இருந்ததும். பிரச்சாரம் செய்ததும் ஒருகாலம். பின்னர் ரீபீசிக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்பதை தமிழ்ச்செல்வன் அவர்கள் அறிக்கையொன்றின் மூலம் தெரியப்படுத்திய பின்னர். அடங்கிப்போன ரீபீசி. ஆடி , அடங்கி , ஒடுங்கி அஸ்ராவிற்குப் பலலட்சம் பவுண்ஸ்களை தாரைவார்த்ததும் மறக்க முடியாது. இப்போது ஈருயிர் ஓருடலாக இருந்த ராம்ராஜ் , ஜெயக்குமார் எப்படிப்பிரிந்தார்கள் யூபீசியாகவும் , ஈரீபீசியாகவும் ?புலிகளுக்குத்தான் ஆதரவாகவும் அதனை ராம்ராஜ் எதிர்த்ததால் பிரிந்துபோனதாகவும் ஜெயக்குமாரும் , ஜெயக்குமார் தமக்குத் துரோகம் செய்து விட்டதால்தான் தாம் பிரிந்து விட்டதாகவும் ராம்ராஜ்ஜ}ம் சொல்லிக்கொண்டு இரண்டு பிரிவாக இரண்டு ஊடகம் ஆரம்பமாகி யிருக்கிறது. ஆனால்ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதாக இருவரும் ஏமாளிகளாகி விட்டார்கள் என்பது நிதர்சனம்.


தமிழீழத்தை நேசிப்பதுபோலவும் , தமிழின விடுதலையை நேசிப்பதுபோலவும் சொல்லிக்கொண்டு தமிழர்களை விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். இவரது போலியைப் பலர் கிழித்தும் இன்னும் திமிர் தீராது ஆடுகிறார்.இவரது யூபீசியில் தற்போது புதியதொரு அறிவிப்பாளர் புகுந்துள்ளார். சிவாந்தி என்கின்ற அறிவிப்பாளர். சிவாந்தியை ஐபீசி வளர்த்துவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அந்து நன்றியையும் மறந்து இன்று ராம்ராஜ்ஜின் விசுவாசியாகியுள்ளார். ஐபீசியில் இருந்தபோது ஐபீசியின் தரத்தை அழித்துக் கொண்டிருப்பவர்கள் சிலரின் தன்மை போட்டி , பொறாமையாக இருக்க சிவாந்தியோ இன்னொரு வழியில் கையாண்டார். அது யாதெனில் நேயர்களை அணுகும் முறை. ஒரு ஊடகவியலாளருக்கான தன்மைகள் அத்தனையையும் தூக்கியெறிந்துவிட்டு அரட்டையாக , அதிகம் இரட்டையர்த்தம் தொனிக்கும் கதைகளுமாக ஒரு அருவருப்புத் தன்மையை உண்டுபண்ணத்தக்க விதமாக சிவாந்தியின் அறிவிப்புத்திறன் இருந்தது. அதைவிட தற்போது யூபிசியல் சிவாந்தியின் அறிவிப்பும் , அசிங்கம்மிகுந்த இரட்டை அர்த்தம் தொனிக்கும் பேச்சுகளும் கேட்போரை வெறுப்படையச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. 20.10.02 (ஞாயிறு) மாலை நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் இன்னுமொரு பெண்அறிவிப்பாளருடன் சேர்ந்து நிகழ்ச்சியை வழங்கிக்கொண்டிருந்தார். அனேகம் ஆண்நேயர்கள்தான் வந்தார்கள். கடிக்கேள்வியென்றும் ஒன்றைக் கேட்டார். கடிக்கேள்விக்கான பதில் சிவாந்தியை அடித்துத்துரத்து எனுமளவிற்கு இருந்தது. வந்து கதைத்த அத்தனை பேருடனும் சிவாந்தி கதைத்து அந்த வார்த்தைப் பிரயோகங்களும் , கதையும் உண்மையியேலே எங்களுக்கு ஊடகங்களே தேவையா எனுமளவிற்கு இருந்தது. அந்த அளவுக்கு கேவலாமாகவும் , கீழ்த்தரமாகவும் , சகிப்பின் எல்லையைக் கொன்று விட்டிருந்தது. இது யூபிசியானாலும் சரி ஈரீபீசியானாலும் சரி ஒரேதரத்தில்தான் இருக்கிறது. இவ்விரண்டு ஊடகத்திலும் அறிவிப்பாளராகவிருக்கும் முக்கால்வாசிப்பேரும் ஊடகத்திற்கு உதவாத ஊடகவியலாளர்களாகவே இருக்கிறார்கள். நேயர்களைக் கவரவேண்டும் என்பதற்காக இப்படிக் கீழ்த்தரமான அறிவிப்பாளர்களாக இருக்க வேண்டுமா ?இன்று எமக்காக , எமது மக்களுக்காக இந்த ஊடகங்கள் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கிறது. இங்கு அதிகரித்துள்ள தற்கொலைகள் , மனநோயாளர்கள் அதிகரிப்பு , மனமணமுறிவுகள் , வன்முறையாளர்கள் உருவாக்கம் , கோஸ்டி மோதல்கள் என எமது சமூகம் ஒரு ஆரோக்கியமற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த அவலநிலையை அகற்ற , இந்த நிலைதொடராது இருக்க ஊடகங்களே குரல் கொடுங்கள்!!! எமது இளைய சமூகத்தை எமது அடையாளங்களுடன் மீட்க உதவுங்கள். எங்களது தாயகம் , அதற்காக எங்களது தேசம் கொடுத்துள்ள விலைகளை உங்கள் கவனத்தில் எடுங்கள். தென்னிந்திய சினிமாவுக்காக வக்காளத்து வாங்குவதை நிறுத்துங்கள். எங்களுக்கான தமிழருக்கான ஊடகமாக மாறுங்கள். வியாபார ஊடகங்களாக , எங்களது தேசியவிடுதலைப் போராட்டத்தை விற்பவர்களாக யாருக்கோவெல்லாம் யால்ரா அடிப்பவர்களாக இருப்பதிலிருந்து வெளிவாருங்கள். எங்களுக்கான ஊடகங்களாகுங்கள்!! குறிப்பிட்ட சிலருக்காக , சிலரது புகழுக்காக ஊடகங்களைப் பயன் படுத்தாதீர்கள். ஊடகம் என்பது மாபெரும் சக்தி. அந்த சக்தியை எமக்காகப்பயன்படுத்துங்கள்.தற்போது ஐரோப்பாவில் இயங்கும் ஊடகங்களில் ஐபீசி இந்த சக்தியைப் பெறக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கிறது. ஐபீசி வாயளவில் தேசியவானொலி என்று சொல்வதைவிட தேசியவானொலி என்பதனை உண்மையாக நிலைப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட சிலருக்கான ஊடகமாக இல்லாமல் உலகத் தமிழருக்கான ஊடகமாக வேண்டும். அதுவே எமது தேசத்துக்கான பெரும் கடமையைப் பலர் செய்வதற்கும் உதவும்.முகமன்களும் , வெறும்வாய்வீரமும் ஒருபோதும் ஊடகங்களை அதன் தனித்துவத்துடன் இயங்க விடாது. புரியவேண்டியவர்களுக்குப் புரியவேண்டும். புரியுமா ?

புரியவேண்டும். எங்களில் ஒருபழக்கம் தவறுகளைக் காணுமிடத்தில் அமைதியாய் போவது அல்லது எமக்கெதற்கு வம்பு என ஒதுங்குவது அல்லது அக்கறையீனம். இப்படி ஒதுங்கிய பலரது அனுபவங்களின் வாக்கு மூலங்களே இன்றைய ஈட்டியாய் பாய்கிறது. பலரது குமுறல்களை ஈட்டியாக வடித்துள்ளேன். இது யார்மீதானதுமான போட்டியோ , பொறாமையோ அல்ல. ஊடகங்கள் திருந்த வேண்டும். ஊடகங்கள் ஊடகங்களா மாறவேண்டும் எனும் நல்நோக்கோடுதான் எழுநா ஊடாக வருகிறது

ஒரு விடுதலைப் போராட்டத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்வதில் மக்கள் தொடர்பு சாதனங்கள் வகிக்கும் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. - தேசியத்தலைவர் வே.பிரபாகரன

ராம்ராஜ் ஜெயக்குமார் தலைமையில். ரீபீசி என்றால் புலிகள் புலிகள் என்றால் ரீபீசி என்று இருந்ததும். பிரச்சாரம் செய்ததும் ஒருகாலம். பின்னர் ரீபீசிக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்பதை தமிழ்ச்செல்வன் அவர்கள் அறிக்கையொன்றின் மூலம் தெரியப்படுத்திய பின்னர். அடங்கிப்போன ரீபீசி. ஆடி , அடங்கி , ஒடுங்கி அஸ்ராவிற்குப் பலலட்சம் பவுண்ஸ்களை தாரைவார்த்ததும் மறக்க முடியாது. இப்போது ஈருயிர் ஓருடலாக இருந்த ராம்ராஜ் , ஜெயக்குமார் எப்படிப்பிரிந்தார்கள் யூபீசியாகவும் , ஈரீபீசியாகவும் ?புலிகளுக்குத்தான் ஆதரவாகவும் அதனை ராம்ராஜ் எதிர்த்ததால் பிரிந்து போனதாகவும் ஜெயக்குமாரும் , ஜெயக்குமார் தமக்குத் துரோகம் செய்து விட்டதால்தான் தாம் பிரிந்து விட்டதாகவும் ராம்ராஜ்ஜ}ம் சொல்லிக்கொண்டு இரண்டு பிரிவாக இரண்டு ஊடகம் ஆரம்பமாகியிருக்கிறது. ஆனால்ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதாக இருவரும் ஏமாளிகளாகிவிட்டார்கள் என்பது நிதர்சனம்.தமிழீழத்தை நேசிப்பதுபோலவும் , தமிழின விடுதலையை நேசிப்பதுபோலவும் சொல்லிக்கொண்டு தமிழர்களை விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். இவரது போலியைப் பலர் கிழித்தும் இன்னும் திமிர் தீராது ஆடுகிறார்.இவரது யூபீசியில் தற்போது புதியதொரு அறிவிப்பாளர் புகுந்துள்ளார். சிவாந்தி என்கின்ற அறிவிப்பாளர். சிவாந்தியை ஐபீசி வளர்த்துவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அந்து நன்றியையும் மறந்து இன்று ராம்ராஜ்ஜின் விசுவாசியாகியுள்ளார். ஐபீசியில் இருந்தபோது ஐபீசியின் தரத்தை அழித்துக் கொண்டிருப்பவர்கள் சிலரின் தன்மை போட்டி , பொறாமையாக இருக்க சிவாந்தியோ இன்னொரு வழியில் கையாண்டார். அது யாதெனில் நேயர்களை அணுகும் முறை. ஒரு ஊடகவியலாளருக்கான தன்மைகள் அத்தனையையும் தூக்கியெறிந்துவிட்டு அரட்டையாக , அதிகம் இரட்டையர்த்தம் தொனிக்கும் கதைகளுமாக ஒரு அருவருப்புத் தன்மையை உண்டுபண்ணத்தக்க விதமாக சிவாந்;தியின் அறிவிப்புத்திறன் இருந்தது. அதைவிட தற்போது யூபிசியல் சிவாந்தியின் அறிவிப்பும் , அசிங்கம்மிகுந்த இரட்டை அர்த்தம் தொனிக்கும் பேச்சுகளும் கேட்போரை வெறுப்படையச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. 20.10.02 (ஞாயிறு) மாலை நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் இன்னுமொரு பெண்அறிவிப்பாளருடன் சேர்ந்து நிகழ்ச்சியை வழங்கிக்கொண்டிருந்தார். அனேகம் ஆண்நேயர்கள்தான் வந்தார்கள். கடிக்கேள்வியென்றும் ஒன்றைக்கேட்டார். கடிக்கேள்விக்கானபதில் சிவாந்தியை அடித்துத்துரத்து எனுமளவிற்கு இருந்தது. வந்து கதைத்த அத்தனைபேருடனும் சிவாந்தி கதைத்து அந்த வார்த்தைப் பிரயோகங்களும் , கதையும் உண்மையியேலே எங்களுக்கு ஊடகங்களே தேவையா எனுமளவிற்கு இருந்தது. அந்த அளவுக்கு கேவலாமாகவும் , கீழ்த்தரமாகவும் , சகிப்பின் எல்லையைக் கொன்றுவிட்டிருந்தது.இது யூபிசியானாலும் சரி ஈரீபீசியானாலும் சரி ஒரேதரத்தில்தான் இருக்கிறது. இவ்விரண்டு ஊடகத்திலும் அறிவிப்பாளராகவிருக்கும் முக்கால்வாசிப்பேரும் ஊடகத்திற்கு உதவாத ஊடகவியலாளர்களாகவே இருக்கிறார்கள். நேயர்களைக் கவரவேண்டும் என்பதற்காக இப்படிக்கீழ்த்தரமான அறிவிப்பாளர்களாக இருக்க வேண்டுமா ?இன்று எமக்காக , எமது மக்களுக்காக இந்த ஊடகங்கள் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கிறது. இங்கு அதிகரித்துள்ள தற்கொலைகள் , மனநோயாளர்கள் அதிகரிப்பு , மனமணமுறிவுகள் , வன்முறையாளர்கள் உருவாக்கம் , கோஸ்டி மோதல்கள் என எமது சமூகம் ஒரு ஆரோக்கியமற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த அவலநிலையை அகற்ற , இந்த நிலைதொடராது இருக்க ஊடகங்களே குரல் கொடுங்கள் !!!எமது இளைய சமூகத்தை எமது அடையாளங்களுடன் மீட்க உதவுங்கள். எங்களது தாயகம் , அதற்காக எங்களது தேசம் கொடுத்துள்ள விலைகளை உங்கள் கவனத்தில் எடுங்கள். தென்னிந்திய சினிமாவுக்காக வக்காளத்து வாங்குவதை நிறுத்துங்கள். எங்களுக்கான தமிழருக்கான ஊடகமாக மாறுங்கள். வியாபார ஊடகங்களாக , எங்களது தேசியவிடுதலைப் போராட்டத்தை விற்பவர்களாக யாருக்கோவெல்லாம் யால்ரா அடிப்பவர்களாக இருப்பதிலிருந்து வெளிவாருங்கள். எங்களுக்கான ஊடகங்களாகுங்கள்!! குறிப்பிட்ட சிலருக்காக , சிலரது புகழுக்காக ஊடகங்களைப் பயன்படுத்தாதீர்கள். ஊடகம் என்பது மாபெரும் சக்தி. அந்த சக்தியை எமக்காகப்பயன்படுத்துங்கள்.தற்போது ஐரோப்பாவில் இயங்கும் ஊடகங்களில் ஐபீசி இந்த சக்தியைப் பெறக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கிறது. ஐபீசி வாயளவில் தேசியவானொலி என்று சொல்வதைவிட தேசியவானொலி என்பதனை உண்மையாக நிலைப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட சிலருக்கான ஊடகமாக இல்லாமல் உலகத்தமிழருக்கான ஊடகமாக வேண்டும். அதுவே எமது தேசத்துக்கான பெரும் கடமையைப் பலர் செய்வதற்கும் உதவும்.முகமன்களும் , வெறும்வாய்வீரமும் ஒருபோதும் ஊடகங்களை அதன் தனித்துவத்துடன் இயங்க விடாது. புரியவேண்டியவர்களுக்குப் புரியவேண்டும். புரியுமா ? புரியவேண்டும்.எங்களில் ஒருபழக்கம் தவறுகளைக்காணுமிடத்தில் அமைதியாய் போவது அல்லது எமக்கெதற்கு வம்பு என ஒதுங்குவது அல்லது அக்கறையீனம். இப்படி ஒதுங்கிய பலரது அனுபவங்களின் வாக்கு மூலங்களே இன்றைய ஈட்டியாய் பாய்கிறது. பலரது குமுறல்களை ஈட்டியாக வடித்துள்ளேன். இது யார்மீதானதுமான போட்டியோ , பொறாமையோ அல்ல. ஊடகங்கள் திருந்த வேண்டும். ஊடகங்கள் ஊடகங்களா மாறவேண்டும் எனும் நல்நோக்கோடுதான் எழுநா ஊடாக வருகிறது
ஒரு விடுதலைப் போராட்டத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்வதில் மக்கள் தொடர்பு சாதனங்கள் வகிக்கும் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தேசியத்தலைவர் வே.பிரபாகரன்

ஊடகங்களின் நாயகர்கள் யார்? தாயகனின் பதில்


எழுநாவில் ஈட்டிப்பகுதியில் வெளியான ஊடகங்களின் நாயகர்கள் யார் என்ற
கட்டுரை தொடர்பாக பல வாதப் பிரதிவாதங்கள் எழுந்ததை நீங்கள் அறிவீர்கள். இறுதியில் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் மெய், பொய் நிலையினை எழுநா அறிந்து கொள்வதற்கு வாய்ப்பில்லாத சூழலில் அதனை வெளியிட்டது தவறு என்னும் கருத்தில் உள்ள நியாயத்தன்மையை ஏற்றுக்கொண்டு அக்கட்டுரையை எழுநா நீக்கியிருந்தது. இந்நிலையில்
குறித்த அக்கட்டுரைக்கான மறுப்புக்களுக்கு, தனது பதிலினை அவ் ஊடகத்திற்கு
எழுதுவதற்கான உரிமையினை கட்டுரையாளர் கொண்டுள்ளார் என்பதனாலும் அதனை வெளியிடுவதற்கான கடமையை அவ் ஊடகம் கொண்டுள்ளது என்பதனாலும் கட்டுரையாளரது பதில் இங்கே தரப்படுகின்றது. விடுதலை என்ற பொது நோக்கில் நாமெல்லோரும் இணைந்து நிற்போம்.


எழுநா நண்பர்களுக்கும் மற்றும் எனது கட்டுரைக்கான கருத்துக்களை எழுதிய அனைவருக்கும் வணக்கம்.நண்பர்களே ஊடகங்கள் பற்றிய கட்டுரையை எழுதியதன் நோக்கம் யாரையும் தூற்றவோ அல்லது துதிபாடவோ அல்லது யார்மீதான காழ்ப்புணர்விலோ எழுதவில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ளுங்கள். இங்கு நடக்கின்ற சீர்கேடுகளைத்தான் திருத்தச் சொல்லி எழுதியுள்ளேன். அதுவும் ஏன் ஐபீசியை எழுதியுள்ளீர் எனக்கேட்டுள்ள நண்பர்களே கவனியுங்கள். ஐபீசி தமிழர்களின் தேசிய வானொலி அந்த வானொலி தனது தனித்தன்மையை இழக்கக்கூடாது. அது என்றும் வாழவேண்டும். உலகத்தமிழரின் குரலாக இயங்க வேண்டும் எனும் நல்ல நோக்கிலேயே எழுதப்பட்டது. இந்தக்கட்டுரையை வெளிவந்த பின்னர் ஐபீசியைக்கவனித்துப் பாருங்கள். அக்ணி அக்கினி என்று சரியாக உச்சரிக்கப்படுகிறது. அணைத்துளகம் அனைத்துலகமாக உச்சரிக்கப்படுகிறது. ஐபீசியை கஸ்ரப்பட்டு வளர்த்துவிட்டவர் திரு.தாசீசியஸ் அவர்கள். அவருடன் இணைந்து சில அறிவிப்பாளர்களும் இரவு , பகல் , தங்கள் சொந்த வாழ்க்கையை , குடும்பம் , குழந்தை என்ற வட்டத்தையே விட்டு அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர்கள் அவர்களின் அந்த உழைப்புத்தான் இன்று ஐபீசியை இந்தளவுக்கு வளர்த்துள்ளது. அப்படி வளர்க்கப்பட்ட ஊடகத்தை சிலரது சுயநலம் சீரழிக்கக்கூடாது என்றே விரும்புகிறோம்.தனித்து ஐபீசியை மட்டும் நான் சொல்லவில்லை. அனைத்து ஊடகங்களையுமே சொன்னேன். மற்ற 3 ஊடகங்களையும் போல் ஐபீசியும் இருக்கக்கூடாது. பத்தோடு பதினொன்றாக ஐபீசியும் இருக்கக்கூடாது. அது நல்ல , சிறந்த ஊடகமாக வரவேண்டும் என்பதே என் விருப்பமும் , எல்லாத் தமிழரின் விருப்பமும்.தனித்தனியாக சொல்லிக் களைத்துத்தான் தனித்தனிப்பெயராக சுட்டிக்காட்ட வேண்டிய வேதனைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இக்கட்டுரையை வாசித்த 17 சமூக அக்கறையுள்ளவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு சொன்னார்கள். நாங்களெல்லாம் சொல்லிக்களைத்து விட்டோம். அதனால் அமைதியாய் இருக்கிறோம். உமது எழுத்து இவர்களை மாற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கெல்லாம் இல்லை என்றார்கள்.
ஐபீசி தமிழர்களின் தேசிய வானொலி அந்த வானொலி தனது தனித்தன்மையை இழக்கக்கூடாது. அது என்றும் வாழவேண்டும். உலகத்தமிழரின் குரலாக இயங்க வேண்டும்

உண்மைகளைப புதைத்து போலிகளை வாழவைக்கும் காலத்தில்தானே நீங்களெல்லாம் இருக்கிறீர்கள் ஏற்றுக்கொள்கிறேன். ஒன்றைக் கொடுத்து இன்னொன்றைப் பெறலாமென்ற தத்துவத்தை வாழ்வாக்கியிருக்கும் அன்பர்களே ! தேசம் தேசெமென்று சொல்லி தேசியத்தையே விற்கும் உங்கள் போன்ற போலிகளை ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கள் தேசத்தலைவரும் , அவருடன் இணைந்து போராடும் அந்த மறவர்களையும் உங்களது பக்கம் சேர்த்துப் பேசவராதீர்கள். உங்களுக்கு விசுவாசமாய் எங்கள் சமூகத்துக்கு விசுவாசமாய் பேசுங்கள். அதுதான் சமூகம்மீதான பிரியம். பணத்துக்கு எழுதுவதும் , பணத்துக்கு அறிவிப்பதும் , பணத்துக்கு விமர்சகர்களாவதும் ஒன்றும் பெரியவிடயமல்ல. இவையெல்லாம் சுயநலம்தான்.இறுதியாக எழுநா நண்பர்களுக்கு ! எனது கட்டுரை போய்ச்சேர வேண்டியவர்களுக்கு போய்சேர்ந்து விட்டது. பெரியதொரு சாக்கடையிலிருந்து உரியவர்களே ஓரளவு எழுந்துவர உதவியமைக்கு நன்றிகள். எழுநாவை சூழ்ந்திருக்கும் என்னினிய தோழர்களே..உங்கள் தொண்டு மிக நெடிது.வாழ்வீர்.புதிய தொரு வரலாறு உமக்காகும்.எழுநாவால் எழுச்சியுறும் உலகு. நாளையிங்கு அழுவோரிலை என்னுமோர் அழகுடையஉலகைச் செய்! உயர்.களக்கவிஞர் புதுவைஇரத்தினதுரையின் வாழ்த்தோடு பிறந்தது எழுநா. அது அந்தக்கவிஞனின் மொழிபோல் எழுச்சியுறும்.

நேசமுள்ள லண்டனிலிருந்து தாயகன்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

ஊடறு - ஓர் பார்வை

ரதன்

பொதிக - ªஐகதீசன் ஆசி£¤யராகக் கொண்டு வெளிவந்த. இந்த இதழுக்காக ஒரு தடவ நந்திகேசன் - வாசுகி ஆகியோரப் பேட்டி எடுத்திருந்தேன். பேட்டியின் முடிவில் நந்திகேசனிடம் அவர அப்பா பெயரக் கேட்டேன். பத்தி£¤கயில் பிரசு£¤க்கும் பொழு போடுவதற்காக .... நந்திகேசன் அ ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு எனவே போடவேண்டாம் என்று கூறிவிட்டார். அவர் அமொ¤க்கா திரும்பியபின் என்னுடன் தொலபேசியில் தொடர்புகொண்டு இத உறுதிப்படுத்தினார். அப்படியே தான் பேட்டியும் வெளிவந்த.
பெண்ணியம், பெண்விடுதல பற்றிய பல்வேறு பார்வகள் உண்டு. இவற்றிலும் மேலும் பல பி£¤வுகள் உண்டு. இவ பற்றி சுருக்காமாகக் கூறிவிட்டு நு£லுக்கு செல்வ நல்ல. ஏனெனில் இந்த நு£லயும் அவ்வாறான கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றேன்.
முற்போக்கு:
ஏற்கனவே நடமுறயில் உள்ள அமப்புக்குள்ளேயே சமத்வத்தக் கொண்டுவரமுடியா.
தீவிரவாத பெண்ணியம்:
அனத் சமூகநிலகளிலும், புரட்சிகரமற்றத விரும்பினாலும், பல்வேறுபட்ட ஒடுக்குதல்களயும் முதன்மயாகப் பார்க்கின்ற.
சோஷலிச பெண்ணியம்:
இ பிற வழி ஒடுக்குதல ஆய்வுசெய்வடன், சித்தார்த்தத்டன் இணந் செய்ய முற்படுகிற.
சமூகப் பெண்ணியம்:
சமுதாய சமத்வமின்மயுடன், சுரண்டலயும் இணத்ப் பார்க்கின்ற. முழுமயாக விடுதல பெற்ற ஒரு சமுதாயத்த நோக்கி தீவிரமாகக் குரல் கொடுக்கிற.
பின் நவீனத்வ பெண்ணியம்:
இ கலாச்சாரத்தில் உள்ள மொழி ஒழுக்கு ஆய்வு செய்யப்பட வேண்டும் எனக் கூறுகிற.
இங்கு தலித் பெண்ணியம் என்ற மற்றொரு கூறும் உண்டு. அருகில் உள்ள அமொ¤க்காவின் கறுப்பு இன பெண்ணியவாதிகள், தங்கள வெள்ள இன பெண்ணியவாதிகளில் இருந் பி£¤த்தே பார்த்தனர். இதற்கான பல காரணங்கள நந்திகேசன், வாசுகி தம பேட்டியிலும் கூறி இருந்தனர். வெள்ள இனப் பெண்கள் - வன்புணர்ச்சி எதிர்ப்பு இயக்கம் ஒன்ற நடாத்தியபொழு, கறுப்பு இனப் பெண்கள், கறுப்பின படுகொல எதிர்ப்பு இயக்கத்த நடாத்தினர். இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று இந்த யுவெi-சுலிந சட்டம் கறுப்பு இன ஆண்களுக்கு எதிராகவே செயல்படுத்தப்பட்ட.
அடுத்ததாக, பொருளாதார, சமூக £¦தியில் வௌ;வேறு தளங்களில் இவ் இரு இனங்களும் உள்ளன.
இந்நிலயில் இன்று மேலும் பல புதிய பெண்ணிய போக்குகளும் உள்ளன.
(1) ஓ£¤ன குழுக்கள்
(2) குடும்பம் என்ற அமப்ப உடத்தல்
போன்றன.
ஓ£¤ன குழுக்கள் பற்றிய சில அவதானிப்புக்கள்
(1) இவர்களுக்குள்ளும், ஒருவர் மற்றொருவர ஆக்கிரமிக்கும் தன்ம உண்டு.
(2) பல ஆண் ஓ£¤னச் சேர்க்கயாளர், பெண் வெறுப்பாளர்களாக இருக்கின்றனர்.
ஊடறு
நு£லின் முன்னுரயில் கூறியபோல் முற்றும் முழுதாக பெண்களாலே பதிவு செய்யப்பட்டுள்ள நு£ல் இ.
இந்த நு£ல ஒரு பின் நவீனத்வ பெண்ணிய தொகுப்பாக காணமுடிகிற. வழமயான பெண்ணிய வாதத்திலிருந் விலகி, மொழி, சமூகம், தலித்தியம் என வி£¤ந்செல்கின்ற.
இங்கு கட்டுரகள், கவிதகள், சிறுகதகள், ஓவியம் எனப் பல படப்புக்கள் உள்ளன.
அருந்ததி, வாசுகி, றஞ்சினி ஆகியோர ஓவியங்கள் சிறப்பாக உள்ளன. குறிப்பாக பக்கம் 59ல் உள்ள வாசுகியின் ஓவியம், பக்கங்கள் 15, 99ல் உள்ள அருந்ததியின் ஓவியங்கள், பல சிறுகதகள், கவிதகள் ஆகியவற்ற விட அதிகமாகவே தொ¤விக்கின்றன. இவ்வாறான ஓவியங்கள ஓவியம் தொ¤ந்த ஒருவரக் கொண்டு ஆய்வுசெய்வ நல்ல.
சிறுகதகள்
(1) ஸ்பிரக்-பாலரஞ்சினி - தோட்டத் தொழிலாளர வாழ்வியல் பற்றிய சிறப்பான கத, பொவாகவே இவ்வாறான கதகள், இவ்வாறான தொகுப்பு ஒன்றில் வெளிவருவ அ£¤.
(2) ஒரு முற்போக்குவாதி காதலிக்கின்றான் - இ ரா«ஐஸ்வா¤ பாலசுப்பிரமணியத்தினால் எழுதப்பட்ட. பல தடவகள் அரத்த மாவயே அரத்க் கொண்டிருக்கிறார். பல பதிய விடயங்கள், புதிய பிரச்சனகள் உள்ளன. அவற்ற இவரப்போன்ற எழுத்தாளர்களால்தான் கொண்டுவர முடியும். பிரதீபா தில்லநாதன் போன்றவர்கள படப்புக்கள வாசித்தாலாவ தங்களத் திருத்திக்கொள்வார்களா?
(3) சத்தமில்லா யுத்தங்கள் - சந்திரவதனா செல்வகுமாரன். இக்கதயும் ஒரு பூட்டிவக்கும் முயற்சியே. இபோன்ற கதகள இத்தொகுப்பிலிருந் தவிர்ப்ப நல்லதே.
(4) பாமா - ஒத்த- பாமா இன்று குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களும் ஒருவர்.
இங்கு பாமாவின் கத ஏனய சிறுகத ஆசி£¤யர்களி (இங்கு வெளிவந்ள்ள) டமிருந் பி£¤த்க் காட்டும் அம்சங்கள்....
(1) தாங்கள் முகமிழந், சுயமிழந்தவர்களாக ஆக்கப்படும்பொழு கூட நம்பிக்கயும், மனஉறுதியும் கொண்டு எதிர்நீச்சல் போடும் தன்மயுள்ளவர்களாகக் காட்டுவ.
(2) குறிப்பாக பெண்களிடம் உள்ள பலம். பலவீனம் இரண்டயும் வெளிப்படுத்ம். பாமா, பலவீனத்தப் பலமாக மாற்றவேண்டும் என்கிறார். இக்கதயில் வரும் லு£ர் பாட்டி போல் பலர் இன்னமும் வாழ்ந்கொண்டிருக்கின்றனர். பாமாவின் சுருக்கு, சந்ததி போன்ற நு£ல்களில் இவ்வாறான பலரக் காணலாம்.
நீ எக்காக அழுகுறே, இப்படிச் செஞ்சாத்தான் பயல்களுக்கு புத்தி வரும்? லு£ர் பாட்டியின் அழுத்தமான சொற்கள்..... மீண்டும், மீண்டும் ஒலிக்கின்றன.
கவிதகள்
மிகவும் பலவீனமான நிலயில் உள்ள படப்புக்கள் என்றே கூறலாம். (மாலதி மத்£¤, ஆழியான் ஆகியோர கவிதகள் தவிர்ந்த)
சாமதியின் கவித
பக்கம் 36-37
பாமதிக்கு முழுமயான சுதந்திரம் உண்டு. அத அவர் பாமா போல் நம்பிக்கயுடன் முன்னெடுத்ச் செல்லலாம். எத்தன நாளக்கு, இவ்வாறு அழு புலம்பிக்கொண்டிருப்ப. இன்று பெண்கள் அடுத்த கட்டத்க்கு வந்விட்டார்கள். இனிமேலாவ அழு புலம்புவத விட்டு விட்டு எவ்வாறு முன்னெடுத்ச் செல்வ என்று பாமதிகளக் கற்றுக்கொள்வாரா?
பக்கம் 92 - ஆழியான் கவித
நீயும் நானும்
வரயறகள கடக்க வேண்டும் - நான்
உன் விவேகத்தோடும்
நீ என் வீ£¤யத்தோடும்
கடக்க வேண்டும்
எனினும்
என் கருவறய
நிறப்ப உன் குறியல்ல
என்று பு£¤தலோடு
வா
ஒன்றாய் கட்டுவோம்
நீ என் விவேகத்தோடும்
நான் உன் வீ£¤யத்தோடும்..... என்று
ஆழியான் அழப்பு விடுவ குறிப்பிடத்தக்க.
பாலரஞ்சினி
என் சுதந்திரம்
என் முடிவுகள்
என் ஆசகள்
என் கயில்
இப்போம்
எப்போம்
என்று கூறும் தன்னம்பிக்க
கலாச்சாரம்
அந்நியம் ஆக்குவோம்
அந்நியத்த ஆள்வோம்
என்கிறார் கோசல்யா.
இவ பெண்கள அடுத்த கட்டத்க்கு இட்டுச் செல்லும் முயற்சிகள்.
கட்டுரகள்
இந்த நு£லின் மிகப்பொ¤ய வெற்றி கட்டுரகளே.
(1) பெண்கள் சில வெளியீடுகள் - சில பகிர்தல்கள் றஞ்சியின் கட்டுர பல பெண்ணியப் படப்பாளிகளின் பல்வேறு தளங்களக் காட்டி நிற்கின்றன.
(2) அந்த எ£¤ந்த இதயம் - ஆப்கான் போராளியின் புலம் பெயர் கவிதகள். ஓர் சிறந்த கட்டுர - ஆப்பான் அகதியின் அவலந்தான் சிறப்பாகப் பதிவாகியுள்ளன.
(3) யுத்தம் எதற்காக - அருந்ததி ராயின் கட்டுர. ழுரவ டழழம ல் முன்பும் வாசித்ள்ளேன். பெண்ணியத்தவிட்டு விலகிச் சென்றாள் படப்பு. எனினும் ஒரு சிறந்த பெண் விமர்சகராகக் காட்டிச் செல்கிற.
(4) Pழசழெபசயிhல இன்பமும், அபாயமும் இவ்விரண்டு மொழிபெயர்ப்புக் கட்டுரகளும் பாலியல் £¦தியான பெண்ணிய பாகுபாடுகள சிறப்பாகக் கூறுகின்றன.
(5) பாரம்பா¤யமற்ற தொழில்களில் பெண்கள் இக்கட்டுர மேலோட்டமாக உள்ள. பல பி£¤வுகள மட்டும் காட்டிச் செல்கிற. அதன் கூறுகள் ஆராயப்படவில்ல.
(6) அடுத் புனித விழா - நிரூபாவின் கட்டுர குறிப்பிடத்தக்க. இ போன்ற புனித விழாக்கள் தவிர்க்கப்பட வேண்டும். அ மட்டுமல்ல. இவ சட்டா¦தியாக தடுக்கப்பட வேண்டும். மாயா என்னும் திரப்படம். இதன் உச்சக் கட்ட அவலங்களச் சொல்லி நிற்கிற!. ஒரு தடவ இக்கட்டுரய வாசிப்படன், இச் சடங்க அடியோடு நிறுத்த ஆவண செய்யுங்கள்.
(7) அடுத்ததாக இலக்கியம் ஃ மொழி பற்றிய இரண்டு கட்டுரகள். தலித்தியமும், தமிழ் இலக்கியமும், மொழியும் ஆண் வழிச் சமூக அமப்பும் மிகவும் முக்கியமான மற்றொரு கட்டுர. மொழியில் உருவாக்கத்தில் பெண்கள் பற்றிய சிறப்பான பார்வ ஒன்று இ.
கற்பு - போன்ற சொற்கள் சமூகத்திலிருந் மட்டுமல்லாமல் அகராதியில் இருந்ம் நீக்கப்பட வேண்டும்.
(8) இறுதியாக - விஐ¤யின் நு£ல் விமர்சனக் கட்டுர குறுக்கு வெட்டு - சிவகாமி எழுதியுள்ள இந்த நாவல ஆநவசழ ஃ ஆயசமாயஅ டுiடிசயசல ல் இரவல் வாங்கி இரு தடவக்கு மேல் வாசித்ள்ளேன். குடும்பம் பற்றிய பல கேள்விகள எழுப்பியுள்ள.
சிவகாமி குடும்பம் என்ற அமப்பு பற்றி இவ்வாறு குரல் கொடுக்கிறார்.
“குடும்பத்தப் பாகாக்க வேண்டும் என்று நினப்பவர்கள், குடும்பத்க்கு மாற்று என்ற கேள்விய எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். பொ¤யா£¤ன் உபமானம் இதற்கும் சான்று. ”நடுவீட்டில் மலமிருந்தால் டத்தெறி என்றால் அந்த இடத்தில் என்ன வப்ப என்று கேட்கிறீர்கள்” என்கிறார்.
துயஅiஉய போன்ற இடங்களில் பெண்ணும், பிள்ளகளும் குடும்பமாகக் கருதப்படுகிறார்கள். இங்கு பிள்ளயக் கொடுத்விட்டு ஆண்கள் பிள்ள வளர்த்ததிலிருந் தப்பி விடுகிறார்கள்.
சமூகம் அல்ல அரசு பிள்ளய வளர்க்க வேண்டும் என்று கருத்ம் உண்டு. ஆனால் விஐ¤ சிவகாமியின் நு£ல பல்வேறு தளங்களிலிருந் சிறப்பாகப் பார்த்ள்ளார். நு£லின் பலவீனங்களயும் அவர் குறிப்பிடத் தவறவில்ல.
குடும்பத்க்கு வெளியே உள்ள ஆண், பெண் உறவுகள சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் சிவகாமி.
நிச்சயமாக ஒரு தடவ அனவரும் படிக்கவேண்டிய நாவலி.
குடும்பம் என்ற அமப்பு உடக்கப்படும் பொழு ஆணத் தப்பிச் செல்ல அனுமதிக்கக்கூடா.
ஊடறு
(1) மறு உற்பத்தியில் பெண்களுக்கு சுதந்திரமளிக்கப்பட வேண்டும். அ பெண்களின் உ£¤ம.
(2) தொழில் £¦தியான வேறுபாடுகள் கலக்கப்படவேண்டும்.
(3) மொழி கலாச்சார £¦தியாக அவலங்கள் மாற்றங்கள் வேண்டும்.
(4) சமூகத்க்குள் ஆணும், பெண்ணும் சமமான அங்கமாக கருதப்பட வேண்டும்.
என்ற கருத்க்கள நில நிறுத்கிற. இறுதியாக றுழஅயn முயசனழம என்ற கவியின் ஓர் கவித
இருளின் படய அழித்விட்டு
வானயும், நிலவயும் நட்சத்திரங்களயும் தேடு
வெளிச்சம் உனக்குள் உள்ள
வெளிச்சம் உனக்கும் உள்ள
நாள சூ£¤யன் நீயே.
{இக்கட்டுர ழேஎநஅடிநச 16, 2002, ளுஉயசடிழசழரபா ஊiஎiஉ ஊவச. அரங்கில் நடபெற்ற ஊடறு விமர்சன அரங்கில் ரதனால் வாசிக்கப்பட்ட.}

raathan@pathcom.com

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

உளவுத்துறையும் நானும்

-அ.முத்துலிங்கம்

இஸ்லாமாபாத்தை என்னால் மறக்க முடியாது. பணி நிமித்தமாக பாகிஸ்தானின் தலை நகரத்துக்கு என்னை மாற்றியிருந்தார்கள். காலடி வைத்துப் பதினைந்து நிமிடங்களுக்குள்ளாக நான் ஏமாற்றப்படடேன்.

விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் பல டாக்ஸி டிரைவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். சல்வார் கமிஸ் அணிந்த உயரமான பட்டான் சாரதி ஒருவர் என்னை வெற்றி கொண்டார். அவருடைய வண்டியிலே ஏறியதும் எந்த ஹோட்டல் என்று கேட்டார். நான் பயண முகவர் தந்த பேர்ல் கொன்றினென்ரல் என்ற பெயரைச் சொன்னேன். அவர் ரேடியோவில் ஓர் உருதுப் பாடலை உரக்க வைத்தபடி புறப்பட்டார்.
எந்த நாட்டுக்குப் போனாலும் முதல் ஓரு அதிர்ச்சி நடப்பது வழக்கம். இங்கே நான் பார்த்த அதிர்ச்சி மூன்று சக்கர ஓட்டோக்களில் ஓடியது. அவற்றின் உருவத்தில் அல்ல. வேகத்திலும் அல்ல. காட்சியில். எனக்கு எதிரே வந்த ஓட்டோக்களிலும் என்னைத் தாண்டிப் போன ஓட்டோக்களிலும் பின் படுதாவில் சிறீதேவியின் சிரித்த முகப்படம் nபிரதாகத் தொங்கியது. ‘அட எனக்கு முன்பாக சிறீதேவி இங்Nகு வந்து எல்லா ஓட்டோக்களையும் வளைத்து வாங்கிப் போட்டுவிட்டாரோ என்றுதான் என்னை எண்ண வைத்தது. ஆக பாகிஸ்தான் வந்த உடனேயே எனக்குப் பரிச்சயமான இந்த முகம் ரோட்டுக்கள் எல்லாவற்றையும் ஆக்கிரமித்திருப்பதைப் பார்த்துச் சிறிது சந்தோசம் ஏற்படவே செய்தது.
என் சந்தோசம் சாரதிக்குத் தெரிந்துவிட்டது. எந்தப் பேர்ல் கொன்டினென்ரல் என்று கேட்டார் இந்தக் கேள்வியே பாதிதூரம் வந்த பிறகுதான் கேட்டார். நான் ராவல் பிண்டி என்று சொன்னேன். அவர் எரிச்சலுடன் ‘நாங்கள் இஸ்லாமாபாத்துக்கு வந்துவிட்டோம். இதை முதலிலேயே சொல்லியிருக்கலாம்’ என்றபடி வண்டியைத் திருப்பினார். பயணமுடிவில் நான் இரண்டு மடங்கு கட்டணம் அழவேண்டியிருந்தது.
பிறகு விசாரித்து இரண்டு ஹோட்டல்கள் இல்லை என்பதைக் கண்டு பிடித்தேன். நான் சுலபமாக ஏமாறக்கூடிய ஆள் என்பதை அந்தச் சாரதி எப்படியோ அறிந்து வைத்திருந்தார். சிரித்தபடியே சிறீதேவி இவ்வளவு துரோகம் செய்வார் என்று நானும் எதிர்பார்க்கவில்லை.
புராணங்களில் சொல்லப்பட்டு எட்டு நாகங்களில் ஒன்று தட்சகன் இந்த நாக அரசனின் வழித்தோன்றல்கள் ஸ்தாபித்த நகரம்தான் ‘தட்சிலா’ (வுயஒடைய) என்பது பாரம்பரியக் கதை. இது ராவல்பிண்டியில் இருந்து 30 கிமீ தூரத்தில் உள்ளது. 2500 வருடங்களுக்கு முன்னர் இங்கே உலகப் புகழ்பெற்ற கல்வி மையம் செழிப்பாக வளர்ந்தது. உலகத்தின் பல்வேறு பாகங்களிலுமிருந்து கல்வி மான்கள் இங்கே கூடினார்கள். புத்தர் இங்கே வந்துபோன அடையாளங்கள். அங்குலிமாலா தன் தாயைக் கொல்லப்போனபோது புத்தர் வந்து தடுத்து ஆட்கொண்டது இங்கேதான் என்பார்கள். தட்சிலாவுக்கு யேசுவும் வந்திருந்தார் ஹொல்கர் கேர்ஸ்டென் என்பவர் என்பவர் தன் புத்தகத்தில் அழுத்தமாக எழுதுகிறார்.

கி.மு. 326 இல் அலெக்சாந்தர் தட்சிலா அரசனான ஒம்பிஃஸின் விருந்தாளியாக மூன்று நாட்கள் தங்கியிருந்திருக்கிறார்.
தத்துவ ஞானி கௌடிலியர் இங்கேதான் அலெக்சாந்தருக்குப் பெரிய பிரசங்கம் செய்தார். பேரரசனுக்கு எரிச்சல் உண்டானது. ஞானியின் வாய் ஓயாதபடி பேசவே எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் அவருடைய தலையைக் கொய்யுங்கள் என்று சேவகர்களுக்கக் கட்டளை இட்டாராம்.
கௌடிலியர் தன் கால்களின் துரிதத்தினால் தன் தலையைக் காப்பாற்றினார்; என்று பின் வந்த வராலற்று ஆசிரியர்கள் இதைப்பற்றி எழுதினார்கள்.
இந்த விபரங்களை சரிதிரக்காரர்களிடம் விட்டுவிட்டு என்னுடைய சரிதிரத்துக்கு வருவோம். நான் சூரியக் Nகுhயிலையும் அங்Nகுயிருந்த பிரபலமான இரட்டைத்தலைக் கழுகு உருவத்தையும் பார்த்படி நின்றேன். எனக்குச்சற்றுத் தூரத்தில் இருந்த 2000 வருட வயதான சுவரில் ஒருவர் தன்னுடைய 40 வயதுக் காலகளைப் பதித்தபடி குந்தியிருந்தார். மிகப்பபெரிய கொட்டாவி ஒன்றை உருவாக்க நினைத்துப் பாதியிலேயே அது சரியாகப் போகாததால் இன்னொரு முயற்சி செய்யும் யோசனையில் இருந்தார். என்னைக் கண்டதும் பின்னங்கால்களை 2000 வருடச் சுவரில் இருந்து இறக்கி நிலத்தில் வைத்து நிமிர்ந்து பார்த்தார். முரட்டுச் சால்வை போர்தியிருக்கும் ஆறடி உயரம். பச்சைக் கண்கள். என்னிடம் ஏதோ சதிக்குக் கூப்பிடுவதுபோல கிட்ட வந்து தன் உள்ளங்கையில் மறைத்துவைத்த ஒரு நாணயத்தை மெல்லத் திறந்து காட்டினார். நெளிந்த வட்ட நாணயம். மிகப் பழசானது. அலெக்சாந்தர் காலத்தில் இருந்து பரம்பரை பரம்பரையாக இதைக் காத்து வருவதாகவும் வறுமை காரணமாக விற்கவேண்டி இருப்பதாகவும் கூறினார்.
நாணயத்தை வாங்கிப் பார்த்தேன். அலெக்சாந்தர் தலைபோட்ட யானைத்தோல் கவசம் அயிந்த பிரபல நாயணயம். Nபுரம் நடந்தது. இருபது டொலருக்க வாங்கிவிட்டேன். இதன் விலை வெளியே நூறு மடங்கு இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஒர் நண்பர் தன்னிடம் அதுபோல் இருப்பதாகக் கூறினார். இன்னொருத்தர் தன்னிடம் இரண்டு நாணயங்கள் இருப்பதாகச் சொன்னார். கடைசியில் பார்தால் இந்த நாணயம் இல்லாதவரே இரண்டுபேர்தான் என்பது தெரிய வந்தது.
நாணயம் விற்க வந்தவரிடம் நாணயம் எதிர்பார்த்தது என்குற்றம் என்று மனைவி உற்சாகத்துடன் சுட்டிக் காட்டினாள். இந்த வருடம் நல்ல வருடம். என் நண்பர்களில் ஒருவராவது கடத்தப்படவில்லை. ஒருத்தராவது குண்டுவெடிப்பில் இறக்கவில்லை. ஒருத்தராவது சிறையில் அடைக்கப்படவி;ல்லை. லாகூரில் பார்க்கவேண்டியது எல்லாவற்றையும் பார்த்தாகிவிட்டது. இனனும் ஒருசில காட்சிகளே எஞ்சியிருந்தன. இந்தக் கடைசிக் கட்டத்துக்கு ஒரு வழிகாட்டியை வைத்தால் வேலை சுலபமாகிவிடும் என்று மனைவி அபிப்பிராயப்பட்டாள்.
முத்து மசூதிக்குக்கிட்ட இரண்டு காட்டு மயில்கள் சந்தடியைப் பொருட்படுத்தாமல் எதையோ கொத்திக் கொண்டிருந்தன. ஒரு பெட்டிக் கடையில் சிலர்’நான்’வாங்கி மொகலாய மன்னர்கள் கண்டுபிடித்த பந்து இறைச்சிக் குழும்பில் தோய்த்து சாப்பிட்டுகு; கொண்டிருந்தார்கள். அந்த பஞ்சாபி வழிகாட்டி குஞ்சம் வைத்த தலைப்பா கட்டியிருந்தார். அவர் பஸ்நிலையத்தில் சகாயவிலைக்கடையில் வாங்கிய இருபதுரூபா கறுப்புக் கண்ணாடியை மாட்டியபடி இரண்டு நாள் வயதான பறவை எச்சமோ அணில் எச்சமோ வினை எச்சமோ வெள்ளையாக ஏதோ ஒன்றை அவருடைய தொளிலே தகுதிக்கு ஏற்றவாறு தரித்திருந்தார்.
அவருடைய கட்டணம் எவ்வளவு என்பதைக் கராராகப் பேசி முடிவு செய்தோம். தன் தகப்பனைப்போல் அவுரங்கசீப் கட்டிடக் கலையில் ஆர்வம் காட்வில்லை. அபூர்வமாக அவர்கட்டிய அலாம்கீர் வாசலை ஏதொ தான் கட்டி முடித்ததுபோல வழிகாட்டி பெருமையாக காட்டினார். அதன்பிறகு சாஜஹான் கட்டிய சீஸ் மஹாலைப் பார்த்தோம். முழுக்க முழுக்க கண்ணாடிகள் பதித்துக் கட்டிய மாளிகை. அதன் உட்புறத்தில வழிகாட்டி நெருப்புக் கொழுந்தைப் பற்றவைத்து வீசிக் காட்டியபோது எங்கும் தீக்கொளுந்து மின்னல்போலப் பரவி ஒளியடித்தது.
இறுதியாக ‘நவ்லாக்’ என்ற மண்டபம். வளைந்த சலவைக்கல் விமானம் முழுக்க உள் வண்ண வேலைப்பாடுகள் நிறைந்திருந்தன. அதைப் பார்த்து அசந்துபோய் சில நிமிடங்கள் பேச்சு வராமல் நின்றோம். ‘நவ்லாக்’ என்றால் ஒன்பது லட்சம். எதற்காக ஒன்பது லட்சம் என்று பெயர் வைத்தார்கள் என்று கேட்டேன். ஒன்பது லட்சம் உள்வேலைப்பாடுகள் கொண்டதாக இருகு;கலாம் என்பது என் அபிப்பிராயம். எங்கள் வழிகாட்டி சொன்ன பதில் ஆச்சரியத்தை; தந்தது.
தாஜ்மஹாலை உலகத்துக்குத் தந்த சாஜஹானுக்குக் கட்டிடங்கள் கட்டுவதே வேலை. அவரிடம் உயரந்த கணக்காளர்கள் இருந்தார்கள். வேலை நடக்கும்போதே ஒவ்வொரு செலவுக்கும் நுணுக்கமாகக் கணக்கு எழுதிவைத்துவிடுவார்கள். இந்த மண்டபம் முடிந்தபோது சாஜஹான் செலவு எவ்வளவு என்று கேட்டிருக்கிறார். கணக்காளர்கள் கூட்டிபோது மிகச்சரியாக ஒன்பது லட்சம் காட்டியதாம். அப்படியே அதன் பெரைச் சூட்டிவிட்டார்கள்.
எங்கள் சுற்றுலா ஒருவாறாக முடிவை நெருங்கியது. முழங்கால் தெரிய உடை உடுத்திய வெள்ளைக்காரப் பெண்மணி ஒருத்தி தனியாக , கையிலே ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு சுவர்களை ஆராய்ந்தபடியே நின்றார். அவரை சிறுவர்கள் சூழ்ந்து கொண்டார்கள். கைகளை பக்கவாட்டில் நீட்டிய ரஸ்ய எழுத்துக்கள்போல ஒருவரை ஒருவர் தொட்டுக்கொண்டு அவர்கள் நின்றார்கள்.
வழிகாட்டி திடீரென்று அவசரம் காட்டினார். எங்களைச் சீக்கிரம் முடித்துவிட்டு அந்தப் பெண்ணின் வாடிக்கையைப் பிடிப்பதற்காக விடைபெற்றுக்கொண்டு அவளை நோக்கி ஓடினார்.
நாங்கள் வீட்டிற்கு வந்தபிறகுதான் வழிகாட்டி மீதி ஒன்பது ரூபாய்க்குப் பதில் நாலு ரூபாய் கொடுத்தது தெரியவந்தது. ஒன்பது லட்சத்துக்கு ஒழுங்காகக் கணக்கு வைத்தபேரரசன் கதையைச் சொன்னவர் ஒன்பது ரூபாய்க் கணக்கில் தவறியது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. கஷ்டமாகவும் இருந்தது.
‘என்னடா எல்லாரும் எப்பபார்த்தாலும் சுலபமாக ஏமாற்றி விடுகிறார்களே’ என்று அலுத்துக் கொண்டேன். அந்தச் சமயம் பார்த்து பாகிஸ்தானின் உளவுத்துறை என்னிடம் சிக்கியது. அவர்கள் என்னிடம் ஏமாறும் சந்தர்ப்பமும் வாய்த்தது.
என்னுடைய இஸ்லாமாபாத் வாழ்க்கையில் ஒருமுறை இந்தியத் தூததரகத்தில் நடந்த ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தேன். அங்Nகு இந்தியர்களுடன் பழகக் கூடாது என்று நாங்கள் அறிவுறுத்தப் பட்டிருந்தோம். இருந்தும் ஒரு பலமான உந்துதலால் இந்த விருந்துக்குப் போவதென்று நானும் மனைவியும் முடிவு செய்தோம்.
நாங்கள் இங்Nகு வசித்த காலங்களில் என் மனைவி மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டாள். கூந்தலில் பூவைப்பதும் நெற்றியில் பொட்டு வைப்பதும் ஆபத்தான காரியங்கள். உங்களை இந்தியர் என்று நினைத்துத் தொடரத் தொடங்கிவிடுவார்கள். அது தவிர சேலை உடுத்தும்போது இடைதெரியும் அபாயம் இருந்தது. சல்வார்கமிஸ் உடை சகல அங்கங்களையும் மறைக்க வல்லது. ஆகவே எல்லா அங்கங்கங்களையும் சேமமாக எடுத்துக் கொண்டு எங்கேயும் பயமில்லாமல் போகலாம் வரலாம்.
விருந்துக்குப் போய்விட்டு வரும்போது எங்கள் காரைத்தொடரந்து நீண்ட நேரமாக ஒரு கார் வந்தது. உளவுத்துறையில் முன்னனுபவம் இல்லை எனக்கு. நான் அதை வித்தியாசமாக எடுத்துக் கொள்வில்லை. ஆனால் அடுத்தநாள் காலை வீட்டுக் காவல்காரர்களும் கார் சாரதியும் உளவுத்துறையினரால் தாங்கள் விசாரிக்கப்பட்டதாக அறிவித்தார்கள்.

அதன்பிறகு நாங்கள் வெளியே புறப்பட்டபோதெல்லாம் தொடரப்படடோம். முதலில் பயம் வந்தது. பிறகு ஒரு ஜேம்ஸ்பொண்ட் படம் பார்ப்பது போன்ற திரில்லுடன் இதை அனுபவிக்கும் ஆசை துளிர்விட்டது. ஆனால் நாலாவது நாளே நனைந்த கோழியில் வேலை இல்லை என்று அவர்கள் விட்டுவிட்டார்கள். அதற்குப் பிறகு அவர்கள் வேறு கோழியைப் பார்க்கப் போயிருக்கலாம்.
இந்த நாலு நாட்களும் என் வாழ்க்கையிலே மறக்க முடியாத சந்தோசமான நாட்கள். நான் எங்கு போனாலும் ஒரு கார் என்னைத் தொடர்ந்தது. அடிக்கடி திரும்பிப் பார்த்து அவர்கள் என்னைத் தொடர்கிறார்கள் என்று உறுதிசெய்து கொண்டு பயணம் செய்தேன். அவர்கள் என்னைத் தவற விட்டுவிடக்கூடாது என்பதற்காக வளைவுகளில் நின்றும் இன்றும் சில நேரங்களில் சிலோ செய்தும் உதவினேன். சிலவேளைகளில் அவர்கள் சிரத்தை காட்டாமல் தவறான திருப்பங்களில் எடுக்கும்போது இவர்கள் தங்கள் தொழிலைத் தீவிரத்துடன் செய்யவில்லை என்ற முறைப்பாட்டை மேலதிகாரிகளுக்குத் தெரிவிப்போமோ என்று யோசித்ததுகூட உண்டு.
ஓர் உலகளாவிய உளவாளி எப்படி இருப்பான் என்று யோசித்து அதற்குத் தக்க மாதிரி உடை அணியவும் பேசவும் பழகிக் கொண்டேன். டெலிபோனில் கதைக்கும்போது என் அலுவலகத்தினருக்கும் நண்பர்களுக்கம் புரியாத சில சங்கேத வார்த்தைகளை நானாகவே சேர்த்துக் கொண்டேன். என்பாதைகளையும் கிளம்பும் நேரங்களையும் அடிக்கடி மாற்றவும் எனக்கு முன்பின் தெரியாத மனிதர்களுடன் மூலைகளிலும் முடுக்குளிலும் ரகஸ்யமான வாய் அசைவுகளுடனும் பேசவும் கற்றுக் கொண்டேன்.
இவை ஒன்றும் பெரிய பலனைத் தரவில்;லை.
எவ்வளவு தான் உலகத்தர உளவாளியாக இருந்தாலும் நான் வீட்டிலே சாதாரண மனுசன்தானே. ஒரு வெள்ளிக்கிழமை காலை - இது அங்கே விடுமுறைதினம் - என் மனைவி ஜும்மா சந்தி;குப் போகவேண்டும் என்றள். இது இஸ்லாமாபாத்தில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் கூடும் பிரமாண்டமான சந்தை. பொருட்கள் வாங்க அங்கே சனங்கள் நெருக்கியடித்துக் கொண்டு வருவார்கள். ஓர் உலகப்புகழ் உளவாளி செல்லக்கூடிய சந்தை அல்லதான். ஆனாலும் இதை மனைவிகளுக்கு புரியவைப்பது எப்படி?
சரி என்றேன். சில துப்புக்கள் கிடைத்தாலும் கிடைக்கலாம். இந்த இடம் எனக்கு அவ்வளவு பழக்கமில்லாதது. கண்களை ஏமாற்றும் வளைவான தெருக்களும் ஒரு வழிப்பாதைகளும் நிறைந்தது. நான் ஒரே மூசசில் சந்தையை அடைந்துவிட்டேன். அங்கே என் மனைவி ஒரு ‘புக்காரா’ கம்பளத்தை இரண்டு மணிநேரம் பேரம்பேசி வாங்கி முடித்துவிட்டாள்.
ஆனால் திரும்பும்போது வழி மறந்து விட்டது. ஒருவழிப்பாதைகள் என்னைத் தொடங்கிய இடத்துக்கே மீண்டும் கொண்டுபோய்ச் சேர்த்தன. அப்பொழுதுதான் நான் என்னைத் தொடரந்துவந்தவர்களை அணுகி வழிதவறவிட்டுவிட்டதைச் சொன்னேன். அவர் நல்ல மனிதர். தான் வழிகாட்டுவதாகச் சொல்லி முன்னே சென்றார். விலாசம் கொடுக்காமலே என்வீட்டு வாசலுக்கு அலுங்காமல் கொண்டுபோய் சேர்த்தார்.
இப்படி என்னை வேவு பார்க்க அனுப்பப் பட்டவர்கள் முன்னே செல்ல நான் பின்னே சென்றேன். உலகத்தின் உளவுத்துறை சரித்திரத்தில் இது ஒரு பெரிய சாதனையாக அமைந்தது.

24.7.2003

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

வழுவிப் போகின்ற நம் பண்பாடுகள்

- சஞ்சீவி சிவகுமார் -

ஓர் இனத்தினை ஆதாரப்படுத்துகின்ற காரணிகளில் மொழிஇ
பண்பாடுஇ கலைஇ கலாசாரப் பாரம்பரிய தனித்துவங்கள்
முக்கியமானவையாகும். அவை நிகழ்வுகளின் குறியீடுகளாக நின்று
நாகரீகத்தின் செழுமையைத் துலக்கமாய்க் காட்டுகின்றன.
தமிழரின் நாகரீகம் செழுமை மிக்கது: வலிமையானது. ஆயினும்
பண்பாட்டுக்காரணிகளைப் பக்குவப்படுத்தாமையும் அந்நிய
கலாசாரங்களையும் ஆர்;வலப்படுத்த வேண்டுமென்ற பரந்த நோக்கு
அல்லது அத்தகைய நோக்குடையவர்களாகத் தம்மை இனங்காட்டிக்
கொண்ட தன்மைஇ பிற நாகரீக ஈர்ப்பு என்பன காரணமாகவும் கால
ஓட்டத்தில் தமிழரின் நாகரீகமும் பண்பாடும் பல மாறுதல்களைப்
பெற்றுக் கொண்டன. குடியேற்றவாதத்தின் தாக்கத்தால் ஆங்கில
மொழி சர்வதேச மொழியாக ஏற்றம் பெற்றதுப்போல ஆங்கில
நாகரீகப்பாணிகளை பெரும்பான்மைக் கூறாகக் கொண்ட பல்தேச
கூட்டு நாகரீகம் என்று கூறக்கூடிய பொது நாகரீகப்பாங்கு உலகளாவி
வளர்ந்துக்காணப்படுவது தவிர்க்க முடியாதது. ஆயினும்
அடையாளங்களாகக் காணப்படுகின்ற ஒரு சில பண்பாடுகளையாவது
காப்பாற்ற வேண்டிய வரலாற்றுக்கடப்பாடு நம் ஒவ்வொருவருக்கும்
உண்டு.

தமிழரின் பண்பாடு சிதைவுபட்டுப் போனதற்கு நாம் ஒரு
வேற்றுக்காரணியையும் ஒப்புவிக்கலாம். இது காட்டமான
காரணியாகவும் கூடப்படுகின்றது. மரபு வழி வந்த சமூகச்சட்டங்கள்
விரிந்து கட்டிக்கொண்டு சாதீயம் பேசியதும் ஆணாதிக்க
வட்டத்துக்குள் விடுபட முடியாது நின்றமையுமான பிற்போக்கு
குணாம்சமே அது. சமய மேலாதிக்கத்தின் மீதும் பண்பாடுகளின்
மீதும் தமிழ் சமூகத்தின் ஒரு கூறு மக்கள் வெறுப்புற அது வழி
வகுத்தது. மரபுஇ இசைஇ நடனம் இ ஓவியம் முதலான கலைகள் உயர்
ஜாதியினர்க்கு உரித்தான கலைகள் என்ற உக்கிர நிலைப்பாடு
காரணமாக ஐரோப்பிய கலைப்பண்பாட்டு வடிவங்களின் மீதான
தாக்கமும் ஈடுபாடும் தமிழர்களிடையே ஆழமாகப் பரவியது.
இவ்வாறு தாழ்சாதியினரென்று ஒதுக்கப்பட்ட சமூகத்தினர்
கல்வியில் உயர்ந்து சமூக நிருமானத்தில் முக்கியம் பெறுகையில்
ஐரோப்பிய கலைமுறைமைகளின் வளர்ச்சி தமிழர்களிடம்
மேலோங்கியதுடன் தமிழர் பண்பாடுகளை இம்மக்கள் சார்ந்தது
அல்லது சாதீயம் பேசுவதென விலக்கியதும் நாஸ்திகத்தில் உறுதி
கொண்டதுமான நிகழ்வுகள் இடம் பிடித்ததை நாம் கண்டே ஆக
வேண்டும். உண்மையில் சமய அடிப்படைத்தனமும்
பிற்போக்குவாதமும் பண்பாட்டில் இருந்து வேறானவை. பண்பாடுகள்
நம் தனித்துவ இருப்புக்கும் நிலவுகைக்குமான அடையாளச்சின்னங்கள்
என்பதை நாம் ஆழ்ந்துணர வேண்டியது அவசியமாகும்.
இந்த வகையில் மாவிலை தோரண அலங்கரிப்பும் தமிழரின் நீண்ட
காலப்பண்பாடாகும். இப்போதெல்லாம் இது நிறமூட்டிய
பொலித்தீனுக்கு மாறி நம்மை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றது.
அலங்காரம் பண்பாட்டுக்கு மட்டுமன்றி அழகுக்குத்தான் என்ற
வாதமும் புதியன புகுதல் வழுவல்ல என்ற சமாதானமும் கூட இதற்கு
கூறப்படலாம். ஆனால் குருத்தோலையின் இளம் பச்சை நிறமும்
மனோரம்மிய அழகுடையது. குளிர்ச்சியான புறச்சூழலைத் தரும்
என்பதே இங்கு எனது கருத்து நிலை. ஆனால் நான் சொல்ல வந்ததுவோ
இக்கட்டுரையின் பிடிவாதமோ குருத்தோலை பொலித்தீன் என்ற
இந்த மாறுபாட்டிற்கு முரண்படுவது அல்ல. மாறாக பண்பாடு என்று
கருதிக்கொண்டு அல்லது சொல்லிக்கொண்டு குருத்தோலை தோரணம்
பின்னுபவர்கள் அதன் குறியீட்டை உணராது வழுவுவதே உளது
ஆதங்கமாகும்.

குருத்தோலையில் செய்யப்படும் பின்னல்முறை அங்கு நிகழ்வது மரண
வீடா அல்லது திருமண வீடா என்பதைக் குறியீடாகக் காட்டும்.
வெளி ஊரில் இருந்து வருபவர்களும் இரந்துண்போரும் ஒரே தெருவில்
இரு நிகழ்வுகள் நடந்தாலும் சரியான வீட்டை இனங்கண்டு கொள்ள
இப்பண்பாட்டு அலங்காரம் வழிவகுக்கிறது. ஆனால் இந்த
வேறுபாட்டை கூட கருதாது மனம் போன போக்கில் குருத்துக்கள்
பின்னப்படுவது பண்பாட்டை மறுக்கும் செயலாகும். இதை விட
பொலித்தீன் அலங்காரம் உத்தமமே.
அடுத்து மங்கல விளக்கேற்றுதல் சகல நிகழ்வுகளுக்கும் முன்னாகச்
செய்யப்படும் ஒரு நிகழ்வாகும். இது மேல் நோக்கியதாகச்
சுடர்களை ஏற்றுவதன் மூலம் நிகழ்வு முன்னோக்கியதாக அமைதல்
வேண்டும் என்ற உணர்வெழுச்சியைக் குறியீடாகக் கொண்டு

செய்யப்படுகின்றது. ஆனாலும் பல்வேறு நிகழ்வுகளில் ஒப்பனைக்கு
அதிதிகளைக் கௌரவப்படுத்தும் ஒரு சம்பிரதாயமாக மட்டும் மங்கல
விளக்கேற்றுதல் நடந்தேறி வருகின்றது. பல தட்டுக்களை கொண்ட
விளக்குகளாயின் முதலில் விளக்கேற்றுபவர் கீழ்
நிலைத்தட்டுக்களையே ஏற்றுதல் வேண்டும். இதன் மூலம்
மேல்நோக்கியதாக சுடர்கள் ஏற்றப்படுவது சாத்தியமாகும். ஆனால்
இந்த வரண்முறைக்கு மறுதலையாகவே பல்வேறு நிகழ்வுகளில் மங்கல
விளக்குகள் ஏற்றப்படுவதை அவதானிக்கலாம். இது எந்த பௌதீக
விளைவுகளையும் தராது என்பது யதார்த்த சிந்தனைக்கு சரி
என்றாலும் சம்பிரதாயம் எனபதற்காக பின்பற்றும் மரபினை
தவறுகளோடு செய்கிறோம் என்பது உறுத்தும் நிகழ்வே.
புpறந்த தின வைபவங்களில் ஒளிரும் மெழுகுதிரியை ஊதி அணைத்து
கேக் வெட்டுகிறோம். இப்படி தீபத்தை அணைத்து மங்கல நிகழ்வை
ஆரம்பிக்கும் மரபு தமிழர்களிடம் உண்டா? என்பது இங்கு பாரம்
மிக்க வினாவாகவே எழுகிறது. இதற்கு மாறாக தீபத்தை ஏற்றி அந்த
மங்கல ஒளியில் கேக் வெட்டலாமே என்னும் கருத்தும் சிலரிடம்
உண்டு.

பேணத்தகுந்த பண்டை மரபு முறைகள் குறித்தும் எதிர் காலத்தில்
அவற்றை நிலை நிறுத்துவது பற்றியும் பல்துறைகளிலும் சேகரிப்பு
ஊக்கம் முளைத்துள்ளது. இது பண்பாட்டு பேணலுக்கு பொருந்துவதாகும்.
இந்த கருத்து நிலைகளிலிருந்து பண்பாட்டை நோக்கும் போது
பண்பாடுகள் குறித்து மாறுபட்ட இரண்டு கருத்துருவாக்கங்கள்
உருவாகலாம். அதாவது பண்டை தொட்டு பேணப்படும் மரபுரிமைகள்தான்
பண்பாடா? அல்லது பண்படுத்துவதன் மூலம் காலங்காலமாக
மாற்றப்பட்டு நிலைநிறுத்தப்படும் சமூக நிலைப்பாடுகள்தான்
பண்பாடா? என்பனவே இவைகளாகும்.
பண்பாடுகள குறித்து நிலவுகின்ற பலத்தரப்பட்ட
வரைவிலக்கணங்களுத்கும் கருத்துக்களுக்கும் மத்தியில் சில
வேளைகளில் பண்பாட்டையும் நாகரீகத்தையும் கலாசாரத்தையும் ஒரே
விடயமாகப் பொதுமைப்படுத்தி கருதுவோரும் உளர். ஆழமாகப்
பார்க்கும்போது பண்பாடு அகம் சார்ந்த வெளிப்பாடு (உதாரணம்
அன்னதானம் செய்தலஇ; கனம் பண்ணுதல்) ஆகவும் நாகரீகம் புறம்
சார்ந்த வெளிப்பாடு (உதாரணம் ஆடைஇ; அணிகலம்) ஆகவும்
கலாசாரம் என்பது குறித்த சமூகத்தின் கலைகளும் ஆசாரங்களும்
பற்றி கருதுவதாகவும் அமையலாம். ஆயினும் இவை மூன்றும் ஒன்றுடன்
ஒன்று நெருங்கிய தொடர்பு கொண்டு திகழ்வதையும் காண முடியும்.
உதாரணமாகத் திருமணத்தின் பின்னர் தமிழ்ப்பெண்கள் கணவனை
நினைவுறுத்துவதாகக் குங்குமம் வைத்தல் என்ற மரபு அகமும் புறமும்
சார்ந்தது. ஆதலால் பண்பாடாகவும் நாகரீகமாகவும்
கொள்ளக்கூடியது. இவ்வாறு நிறையவே எடுத்துக்காட்டலாம்.
தாலிஇ குங்குமம் முதலான விடயங்களை ஆணாதிக்க மேலான்மையின்
சின்னமாகப் புறக்கணிப்பவர்களை பெண் நிலைச் சிந்தனையின்
எழுச்சியுடன் காண முடிகின்றது. உண்மையில் அனேகமாகப் பண்பாட்டு
விழுமியக்கோட்பாடுகள் இ ஆதிக்கத்திலிருந்த சிறுபான்மையினரான
உயர் ஜாதி மக்களாலும் ஆண்நிலை வக்கிர சிந்தனையாளர்களாலும்
பெரும்பான்மையான மீதி மக்களின் மீது திணிக்கப்பட்டது எனும்
குற்றச்சாட்டையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகவுள்ளது.
இந்நிலையில் பேராசிரியர்; மத்திய+ ஆர்னல்ட் கருதுவது போல
மென்மேலும் திருந்தி வரும் திருத்த நிலையே பண்பாடு என்று
கொண்டால் சாதியம் இ பெண்ணியம் மற்றும் சமயக்கருத்துக்களை
நிறுத்துப்பார்த்தல் முதலான கருத்து நலன்களில் திருத்தி
நிலைப்பெற்ற மாற்றப்( சமூக நலன் குறித்த முன்னேற்றம்)
போக்குக்கு தமிழர் பண்பாடும் இன்று வழி திறந்துள்ளதைக்
காணலாம். இந்த திருந்திய அறிவு நிலையில் (iவெநடடநஉவரயட
னநஎநடழிஅநவெ) கூர்மையான தம் சாதிய எதிர்ப்பைக்காட்ட
மங்கல பொருட்களுக்கு பதிலாக ஈர்க்குத்துடைப்பம் இபாதணி முதலான
பொருட்களை வைத்து விழாவை ஆரம்பித்த நிகழ்வு ஒன்றும்
அண்மையில் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்தது. இந்த
பண்பாட்டு முரண்படுகை பார்ப்பணியர் மனதிலும் பார்ப்பணியர்
மேலாண்மையை ஆதரிப்போரிடையிலும் மங்கல பண்பாட்டு பொருட்கள்
உயர்சாதியினர்க்கே உரிய குறியீட்டுக்கூறுகள் என்ற முனைப்பை
ஏற்படுத்துமே தவிர வேறு எதையும் ஏற்படுத்தாது என்றே எனக்கு
தோன்றுகிறது.

பண்பாடு பற்றிய ஸ்பென்ஸரின் கொள்கையின்படி வேறுபட்ட பல
நிலைப் பண்பாடுகள ஒருவழிப்போக்கான வளர்ச்சியின் பல
கட்டங்களே என்பதையும் ஒவ்வொறு காலகட்டத்தின் பண்பாட்டு
நிலைஇ பழைமை வரலாறு என்பவற்றின் விளைவு எனவும் அறிய முடியும்.

இங்குத்தான் பண்பாட்டு வளர்ச்சிகள் வேறுஇ வழுவல்கள் வேறு
என்பதை நாம் உணர வேண்டியுள்ளது. இறுக்கமான
சமூகக்கட்டுமானங்களும் சமூகப்பொருளாதார மாற்றங்களுமே பண்பாட்டு
மீறல்களுக்கு இட்டுச்செல்கின்றன.
உள்நாட்டு யுத்தங்கள் காரணமாகப் பொருளாதார வீழ்ச்சி
ஏற்படும்போது பயங்கரவாதம் தோற்றமாகின்றது. பெண்ணிலைவாதம்
ஆணாதிக்கத்தை உடைத்தபோது லெஸ்பியம் அடையாளம்
இடப்பட்டது.(மரபணு ரீதியில் 4-10 சதவீதக்; குடித்தொகையினர்
இயற்கையிலேயே பிறள்பாலுணர்வு உள்ளவர்களாக இருப்பதும்
கண்டறியப்பட்டுள்ளது. இது மதிக்கப்பட வேண்டும் என்பதையும் உணர
வேண்டும்). இவ்வாறான கால வழுவல்களையும் பண்பாட்டு
வழுவல்களுக்குள் ஆராயலாம்.

சில கட்டுமானங்களுக்குள் நின்று அதன் புறநிலைக் குறித்தும்
கருதிக்கொண்டு ஆராயாதவரை பண்பாடு பற்றிய ஆய்வுகள் மாயமான்
போல் வழுவி வழுவிப்போவது தவிர்க்க முடியாததாகி விடும்.
பண்பாடு கொள்கின்ற தேவை கருதிய மாற்றங்களை
ஏற்றுக்கொள்வதுடன் அதனை நிலைநிறுத்தி பேண வேண்டியது
தலையாயதாகும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.