Pulampal

Pulampal

Thursday, August 03, 2006

உளவுத்துறையும் நானும்

-அ.முத்துலிங்கம்

இஸ்லாமாபாத்தை என்னால் மறக்க முடியாது. பணி நிமித்தமாக பாகிஸ்தானின் தலை நகரத்துக்கு என்னை மாற்றியிருந்தார்கள். காலடி வைத்துப் பதினைந்து நிமிடங்களுக்குள்ளாக நான் ஏமாற்றப்படடேன்.

விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் பல டாக்ஸி டிரைவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். சல்வார் கமிஸ் அணிந்த உயரமான பட்டான் சாரதி ஒருவர் என்னை வெற்றி கொண்டார். அவருடைய வண்டியிலே ஏறியதும் எந்த ஹோட்டல் என்று கேட்டார். நான் பயண முகவர் தந்த பேர்ல் கொன்றினென்ரல் என்ற பெயரைச் சொன்னேன். அவர் ரேடியோவில் ஓர் உருதுப் பாடலை உரக்க வைத்தபடி புறப்பட்டார்.
எந்த நாட்டுக்குப் போனாலும் முதல் ஓரு அதிர்ச்சி நடப்பது வழக்கம். இங்கே நான் பார்த்த அதிர்ச்சி மூன்று சக்கர ஓட்டோக்களில் ஓடியது. அவற்றின் உருவத்தில் அல்ல. வேகத்திலும் அல்ல. காட்சியில். எனக்கு எதிரே வந்த ஓட்டோக்களிலும் என்னைத் தாண்டிப் போன ஓட்டோக்களிலும் பின் படுதாவில் சிறீதேவியின் சிரித்த முகப்படம் nபிரதாகத் தொங்கியது. ‘அட எனக்கு முன்பாக சிறீதேவி இங்Nகு வந்து எல்லா ஓட்டோக்களையும் வளைத்து வாங்கிப் போட்டுவிட்டாரோ என்றுதான் என்னை எண்ண வைத்தது. ஆக பாகிஸ்தான் வந்த உடனேயே எனக்குப் பரிச்சயமான இந்த முகம் ரோட்டுக்கள் எல்லாவற்றையும் ஆக்கிரமித்திருப்பதைப் பார்த்துச் சிறிது சந்தோசம் ஏற்படவே செய்தது.
என் சந்தோசம் சாரதிக்குத் தெரிந்துவிட்டது. எந்தப் பேர்ல் கொன்டினென்ரல் என்று கேட்டார் இந்தக் கேள்வியே பாதிதூரம் வந்த பிறகுதான் கேட்டார். நான் ராவல் பிண்டி என்று சொன்னேன். அவர் எரிச்சலுடன் ‘நாங்கள் இஸ்லாமாபாத்துக்கு வந்துவிட்டோம். இதை முதலிலேயே சொல்லியிருக்கலாம்’ என்றபடி வண்டியைத் திருப்பினார். பயணமுடிவில் நான் இரண்டு மடங்கு கட்டணம் அழவேண்டியிருந்தது.
பிறகு விசாரித்து இரண்டு ஹோட்டல்கள் இல்லை என்பதைக் கண்டு பிடித்தேன். நான் சுலபமாக ஏமாறக்கூடிய ஆள் என்பதை அந்தச் சாரதி எப்படியோ அறிந்து வைத்திருந்தார். சிரித்தபடியே சிறீதேவி இவ்வளவு துரோகம் செய்வார் என்று நானும் எதிர்பார்க்கவில்லை.
புராணங்களில் சொல்லப்பட்டு எட்டு நாகங்களில் ஒன்று தட்சகன் இந்த நாக அரசனின் வழித்தோன்றல்கள் ஸ்தாபித்த நகரம்தான் ‘தட்சிலா’ (வுயஒடைய) என்பது பாரம்பரியக் கதை. இது ராவல்பிண்டியில் இருந்து 30 கிமீ தூரத்தில் உள்ளது. 2500 வருடங்களுக்கு முன்னர் இங்கே உலகப் புகழ்பெற்ற கல்வி மையம் செழிப்பாக வளர்ந்தது. உலகத்தின் பல்வேறு பாகங்களிலுமிருந்து கல்வி மான்கள் இங்கே கூடினார்கள். புத்தர் இங்கே வந்துபோன அடையாளங்கள். அங்குலிமாலா தன் தாயைக் கொல்லப்போனபோது புத்தர் வந்து தடுத்து ஆட்கொண்டது இங்கேதான் என்பார்கள். தட்சிலாவுக்கு யேசுவும் வந்திருந்தார் ஹொல்கர் கேர்ஸ்டென் என்பவர் என்பவர் தன் புத்தகத்தில் அழுத்தமாக எழுதுகிறார்.

கி.மு. 326 இல் அலெக்சாந்தர் தட்சிலா அரசனான ஒம்பிஃஸின் விருந்தாளியாக மூன்று நாட்கள் தங்கியிருந்திருக்கிறார்.
தத்துவ ஞானி கௌடிலியர் இங்கேதான் அலெக்சாந்தருக்குப் பெரிய பிரசங்கம் செய்தார். பேரரசனுக்கு எரிச்சல் உண்டானது. ஞானியின் வாய் ஓயாதபடி பேசவே எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் அவருடைய தலையைக் கொய்யுங்கள் என்று சேவகர்களுக்கக் கட்டளை இட்டாராம்.
கௌடிலியர் தன் கால்களின் துரிதத்தினால் தன் தலையைக் காப்பாற்றினார்; என்று பின் வந்த வராலற்று ஆசிரியர்கள் இதைப்பற்றி எழுதினார்கள்.
இந்த விபரங்களை சரிதிரக்காரர்களிடம் விட்டுவிட்டு என்னுடைய சரிதிரத்துக்கு வருவோம். நான் சூரியக் Nகுhயிலையும் அங்Nகுயிருந்த பிரபலமான இரட்டைத்தலைக் கழுகு உருவத்தையும் பார்த்படி நின்றேன். எனக்குச்சற்றுத் தூரத்தில் இருந்த 2000 வருட வயதான சுவரில் ஒருவர் தன்னுடைய 40 வயதுக் காலகளைப் பதித்தபடி குந்தியிருந்தார். மிகப்பபெரிய கொட்டாவி ஒன்றை உருவாக்க நினைத்துப் பாதியிலேயே அது சரியாகப் போகாததால் இன்னொரு முயற்சி செய்யும் யோசனையில் இருந்தார். என்னைக் கண்டதும் பின்னங்கால்களை 2000 வருடச் சுவரில் இருந்து இறக்கி நிலத்தில் வைத்து நிமிர்ந்து பார்த்தார். முரட்டுச் சால்வை போர்தியிருக்கும் ஆறடி உயரம். பச்சைக் கண்கள். என்னிடம் ஏதோ சதிக்குக் கூப்பிடுவதுபோல கிட்ட வந்து தன் உள்ளங்கையில் மறைத்துவைத்த ஒரு நாணயத்தை மெல்லத் திறந்து காட்டினார். நெளிந்த வட்ட நாணயம். மிகப் பழசானது. அலெக்சாந்தர் காலத்தில் இருந்து பரம்பரை பரம்பரையாக இதைக் காத்து வருவதாகவும் வறுமை காரணமாக விற்கவேண்டி இருப்பதாகவும் கூறினார்.
நாணயத்தை வாங்கிப் பார்த்தேன். அலெக்சாந்தர் தலைபோட்ட யானைத்தோல் கவசம் அயிந்த பிரபல நாயணயம். Nபுரம் நடந்தது. இருபது டொலருக்க வாங்கிவிட்டேன். இதன் விலை வெளியே நூறு மடங்கு இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஒர் நண்பர் தன்னிடம் அதுபோல் இருப்பதாகக் கூறினார். இன்னொருத்தர் தன்னிடம் இரண்டு நாணயங்கள் இருப்பதாகச் சொன்னார். கடைசியில் பார்தால் இந்த நாணயம் இல்லாதவரே இரண்டுபேர்தான் என்பது தெரிய வந்தது.
நாணயம் விற்க வந்தவரிடம் நாணயம் எதிர்பார்த்தது என்குற்றம் என்று மனைவி உற்சாகத்துடன் சுட்டிக் காட்டினாள். இந்த வருடம் நல்ல வருடம். என் நண்பர்களில் ஒருவராவது கடத்தப்படவில்லை. ஒருத்தராவது குண்டுவெடிப்பில் இறக்கவில்லை. ஒருத்தராவது சிறையில் அடைக்கப்படவி;ல்லை. லாகூரில் பார்க்கவேண்டியது எல்லாவற்றையும் பார்த்தாகிவிட்டது. இனனும் ஒருசில காட்சிகளே எஞ்சியிருந்தன. இந்தக் கடைசிக் கட்டத்துக்கு ஒரு வழிகாட்டியை வைத்தால் வேலை சுலபமாகிவிடும் என்று மனைவி அபிப்பிராயப்பட்டாள்.
முத்து மசூதிக்குக்கிட்ட இரண்டு காட்டு மயில்கள் சந்தடியைப் பொருட்படுத்தாமல் எதையோ கொத்திக் கொண்டிருந்தன. ஒரு பெட்டிக் கடையில் சிலர்’நான்’வாங்கி மொகலாய மன்னர்கள் கண்டுபிடித்த பந்து இறைச்சிக் குழும்பில் தோய்த்து சாப்பிட்டுகு; கொண்டிருந்தார்கள். அந்த பஞ்சாபி வழிகாட்டி குஞ்சம் வைத்த தலைப்பா கட்டியிருந்தார். அவர் பஸ்நிலையத்தில் சகாயவிலைக்கடையில் வாங்கிய இருபதுரூபா கறுப்புக் கண்ணாடியை மாட்டியபடி இரண்டு நாள் வயதான பறவை எச்சமோ அணில் எச்சமோ வினை எச்சமோ வெள்ளையாக ஏதோ ஒன்றை அவருடைய தொளிலே தகுதிக்கு ஏற்றவாறு தரித்திருந்தார்.
அவருடைய கட்டணம் எவ்வளவு என்பதைக் கராராகப் பேசி முடிவு செய்தோம். தன் தகப்பனைப்போல் அவுரங்கசீப் கட்டிடக் கலையில் ஆர்வம் காட்வில்லை. அபூர்வமாக அவர்கட்டிய அலாம்கீர் வாசலை ஏதொ தான் கட்டி முடித்ததுபோல வழிகாட்டி பெருமையாக காட்டினார். அதன்பிறகு சாஜஹான் கட்டிய சீஸ் மஹாலைப் பார்த்தோம். முழுக்க முழுக்க கண்ணாடிகள் பதித்துக் கட்டிய மாளிகை. அதன் உட்புறத்தில வழிகாட்டி நெருப்புக் கொழுந்தைப் பற்றவைத்து வீசிக் காட்டியபோது எங்கும் தீக்கொளுந்து மின்னல்போலப் பரவி ஒளியடித்தது.
இறுதியாக ‘நவ்லாக்’ என்ற மண்டபம். வளைந்த சலவைக்கல் விமானம் முழுக்க உள் வண்ண வேலைப்பாடுகள் நிறைந்திருந்தன. அதைப் பார்த்து அசந்துபோய் சில நிமிடங்கள் பேச்சு வராமல் நின்றோம். ‘நவ்லாக்’ என்றால் ஒன்பது லட்சம். எதற்காக ஒன்பது லட்சம் என்று பெயர் வைத்தார்கள் என்று கேட்டேன். ஒன்பது லட்சம் உள்வேலைப்பாடுகள் கொண்டதாக இருகு;கலாம் என்பது என் அபிப்பிராயம். எங்கள் வழிகாட்டி சொன்ன பதில் ஆச்சரியத்தை; தந்தது.
தாஜ்மஹாலை உலகத்துக்குத் தந்த சாஜஹானுக்குக் கட்டிடங்கள் கட்டுவதே வேலை. அவரிடம் உயரந்த கணக்காளர்கள் இருந்தார்கள். வேலை நடக்கும்போதே ஒவ்வொரு செலவுக்கும் நுணுக்கமாகக் கணக்கு எழுதிவைத்துவிடுவார்கள். இந்த மண்டபம் முடிந்தபோது சாஜஹான் செலவு எவ்வளவு என்று கேட்டிருக்கிறார். கணக்காளர்கள் கூட்டிபோது மிகச்சரியாக ஒன்பது லட்சம் காட்டியதாம். அப்படியே அதன் பெரைச் சூட்டிவிட்டார்கள்.
எங்கள் சுற்றுலா ஒருவாறாக முடிவை நெருங்கியது. முழங்கால் தெரிய உடை உடுத்திய வெள்ளைக்காரப் பெண்மணி ஒருத்தி தனியாக , கையிலே ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு சுவர்களை ஆராய்ந்தபடியே நின்றார். அவரை சிறுவர்கள் சூழ்ந்து கொண்டார்கள். கைகளை பக்கவாட்டில் நீட்டிய ரஸ்ய எழுத்துக்கள்போல ஒருவரை ஒருவர் தொட்டுக்கொண்டு அவர்கள் நின்றார்கள்.
வழிகாட்டி திடீரென்று அவசரம் காட்டினார். எங்களைச் சீக்கிரம் முடித்துவிட்டு அந்தப் பெண்ணின் வாடிக்கையைப் பிடிப்பதற்காக விடைபெற்றுக்கொண்டு அவளை நோக்கி ஓடினார்.
நாங்கள் வீட்டிற்கு வந்தபிறகுதான் வழிகாட்டி மீதி ஒன்பது ரூபாய்க்குப் பதில் நாலு ரூபாய் கொடுத்தது தெரியவந்தது. ஒன்பது லட்சத்துக்கு ஒழுங்காகக் கணக்கு வைத்தபேரரசன் கதையைச் சொன்னவர் ஒன்பது ரூபாய்க் கணக்கில் தவறியது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. கஷ்டமாகவும் இருந்தது.
‘என்னடா எல்லாரும் எப்பபார்த்தாலும் சுலபமாக ஏமாற்றி விடுகிறார்களே’ என்று அலுத்துக் கொண்டேன். அந்தச் சமயம் பார்த்து பாகிஸ்தானின் உளவுத்துறை என்னிடம் சிக்கியது. அவர்கள் என்னிடம் ஏமாறும் சந்தர்ப்பமும் வாய்த்தது.
என்னுடைய இஸ்லாமாபாத் வாழ்க்கையில் ஒருமுறை இந்தியத் தூததரகத்தில் நடந்த ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தேன். அங்Nகு இந்தியர்களுடன் பழகக் கூடாது என்று நாங்கள் அறிவுறுத்தப் பட்டிருந்தோம். இருந்தும் ஒரு பலமான உந்துதலால் இந்த விருந்துக்குப் போவதென்று நானும் மனைவியும் முடிவு செய்தோம்.
நாங்கள் இங்Nகு வசித்த காலங்களில் என் மனைவி மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டாள். கூந்தலில் பூவைப்பதும் நெற்றியில் பொட்டு வைப்பதும் ஆபத்தான காரியங்கள். உங்களை இந்தியர் என்று நினைத்துத் தொடரத் தொடங்கிவிடுவார்கள். அது தவிர சேலை உடுத்தும்போது இடைதெரியும் அபாயம் இருந்தது. சல்வார்கமிஸ் உடை சகல அங்கங்களையும் மறைக்க வல்லது. ஆகவே எல்லா அங்கங்கங்களையும் சேமமாக எடுத்துக் கொண்டு எங்கேயும் பயமில்லாமல் போகலாம் வரலாம்.
விருந்துக்குப் போய்விட்டு வரும்போது எங்கள் காரைத்தொடரந்து நீண்ட நேரமாக ஒரு கார் வந்தது. உளவுத்துறையில் முன்னனுபவம் இல்லை எனக்கு. நான் அதை வித்தியாசமாக எடுத்துக் கொள்வில்லை. ஆனால் அடுத்தநாள் காலை வீட்டுக் காவல்காரர்களும் கார் சாரதியும் உளவுத்துறையினரால் தாங்கள் விசாரிக்கப்பட்டதாக அறிவித்தார்கள்.

அதன்பிறகு நாங்கள் வெளியே புறப்பட்டபோதெல்லாம் தொடரப்படடோம். முதலில் பயம் வந்தது. பிறகு ஒரு ஜேம்ஸ்பொண்ட் படம் பார்ப்பது போன்ற திரில்லுடன் இதை அனுபவிக்கும் ஆசை துளிர்விட்டது. ஆனால் நாலாவது நாளே நனைந்த கோழியில் வேலை இல்லை என்று அவர்கள் விட்டுவிட்டார்கள். அதற்குப் பிறகு அவர்கள் வேறு கோழியைப் பார்க்கப் போயிருக்கலாம்.
இந்த நாலு நாட்களும் என் வாழ்க்கையிலே மறக்க முடியாத சந்தோசமான நாட்கள். நான் எங்கு போனாலும் ஒரு கார் என்னைத் தொடர்ந்தது. அடிக்கடி திரும்பிப் பார்த்து அவர்கள் என்னைத் தொடர்கிறார்கள் என்று உறுதிசெய்து கொண்டு பயணம் செய்தேன். அவர்கள் என்னைத் தவற விட்டுவிடக்கூடாது என்பதற்காக வளைவுகளில் நின்றும் இன்றும் சில நேரங்களில் சிலோ செய்தும் உதவினேன். சிலவேளைகளில் அவர்கள் சிரத்தை காட்டாமல் தவறான திருப்பங்களில் எடுக்கும்போது இவர்கள் தங்கள் தொழிலைத் தீவிரத்துடன் செய்யவில்லை என்ற முறைப்பாட்டை மேலதிகாரிகளுக்குத் தெரிவிப்போமோ என்று யோசித்ததுகூட உண்டு.
ஓர் உலகளாவிய உளவாளி எப்படி இருப்பான் என்று யோசித்து அதற்குத் தக்க மாதிரி உடை அணியவும் பேசவும் பழகிக் கொண்டேன். டெலிபோனில் கதைக்கும்போது என் அலுவலகத்தினருக்கும் நண்பர்களுக்கம் புரியாத சில சங்கேத வார்த்தைகளை நானாகவே சேர்த்துக் கொண்டேன். என்பாதைகளையும் கிளம்பும் நேரங்களையும் அடிக்கடி மாற்றவும் எனக்கு முன்பின் தெரியாத மனிதர்களுடன் மூலைகளிலும் முடுக்குளிலும் ரகஸ்யமான வாய் அசைவுகளுடனும் பேசவும் கற்றுக் கொண்டேன்.
இவை ஒன்றும் பெரிய பலனைத் தரவில்;லை.
எவ்வளவு தான் உலகத்தர உளவாளியாக இருந்தாலும் நான் வீட்டிலே சாதாரண மனுசன்தானே. ஒரு வெள்ளிக்கிழமை காலை - இது அங்கே விடுமுறைதினம் - என் மனைவி ஜும்மா சந்தி;குப் போகவேண்டும் என்றள். இது இஸ்லாமாபாத்தில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் கூடும் பிரமாண்டமான சந்தை. பொருட்கள் வாங்க அங்கே சனங்கள் நெருக்கியடித்துக் கொண்டு வருவார்கள். ஓர் உலகப்புகழ் உளவாளி செல்லக்கூடிய சந்தை அல்லதான். ஆனாலும் இதை மனைவிகளுக்கு புரியவைப்பது எப்படி?
சரி என்றேன். சில துப்புக்கள் கிடைத்தாலும் கிடைக்கலாம். இந்த இடம் எனக்கு அவ்வளவு பழக்கமில்லாதது. கண்களை ஏமாற்றும் வளைவான தெருக்களும் ஒரு வழிப்பாதைகளும் நிறைந்தது. நான் ஒரே மூசசில் சந்தையை அடைந்துவிட்டேன். அங்கே என் மனைவி ஒரு ‘புக்காரா’ கம்பளத்தை இரண்டு மணிநேரம் பேரம்பேசி வாங்கி முடித்துவிட்டாள்.
ஆனால் திரும்பும்போது வழி மறந்து விட்டது. ஒருவழிப்பாதைகள் என்னைத் தொடங்கிய இடத்துக்கே மீண்டும் கொண்டுபோய்ச் சேர்த்தன. அப்பொழுதுதான் நான் என்னைத் தொடரந்துவந்தவர்களை அணுகி வழிதவறவிட்டுவிட்டதைச் சொன்னேன். அவர் நல்ல மனிதர். தான் வழிகாட்டுவதாகச் சொல்லி முன்னே சென்றார். விலாசம் கொடுக்காமலே என்வீட்டு வாசலுக்கு அலுங்காமல் கொண்டுபோய் சேர்த்தார்.
இப்படி என்னை வேவு பார்க்க அனுப்பப் பட்டவர்கள் முன்னே செல்ல நான் பின்னே சென்றேன். உலகத்தின் உளவுத்துறை சரித்திரத்தில் இது ஒரு பெரிய சாதனையாக அமைந்தது.

24.7.2003

0 Comments:

Post a Comment

<< Home

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.