கருத்துக்களும் கண்டனங்களும் - எழுநா
31.10.02
எழுநாவில் வெளியாகி இருந்த ஊடகங்களின் நாயகர்கள் யார் என்ற பகுதி தொடர்பாகவே அண்மைய நாட்களில் எழுநாவிற்கு கடிதங்கள் வந்திருந்தன. வந்திருந்த அத்தனை கடிதங்களும் கண்டனக்கடிதங்களாக இருந்தமையை தெரிவிக்கவேண்டியுள்ளது.
தனிப்பட்ட தங்களது காழ்ப்புணர்ச்சிகளை தீர்ப்பதற்கு எழுநாவை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என உரிமையோடு தங்கள் கருத்துக்களை பலரும் எழுதிருந்தார்கள
உறவுகளுக்கு வணக்கம். நடந்து முடிந்த மானுடத்தின் தமிழக் கூடல் 2002 குறித்து எழுத வேண்டும் என்று நினைத்திருந்த போது அது தவிர்ந்த இன்னுமொரு சர்ச்சைக்குரிய விடயம் குறித்து எழுத வேண்டி யேற்பட்டுள்ளது. எழுநாவில் வெளியாகி இருந்த ஊடகங்களின் நாயகர்கள் யார் என்ற பகுதி தொடர்பாகவே அண்மைய நாட்களில் எழுநாவிற்கு கடிதங்கள் வந்திருந்தன. வந்திருந்த அத்தனை கடிதங்களும் கண்டனக் கடிதங்களாக இருந்தமையை தெரிவிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக ஒரு கடிதத்தில் தனிப்பட்ட வகையில் ஒலிபரப்பாளர்கள் இலக்காக்கக்கப் பட்டுள்ளதன் மூலம் தனது தனிப்பட்ட இயலாமையை அல்லது
ஆதங்கத்தை வெளிப்படுத்த கட்டுரையாளர் முனைகிறாரா என்ற சந்தேகம் தவிர்க்க முடியாதபடி எழுகிறது. ஏனெனில் புலம் பெயர்ந்ததே சுயநலத்தின் உச்சம். அவ்வாறான நிலையில் கூட
இவ்வாறு பணியாற்றுதல் என்பது சாதகமாக உள்வாங்கப்பட வேண்டுமே தவிர, புலம்பெயர்ந்த ஒருவரே ஒவ்வொரு ஒலிபரப்பாளரிலும் தான் கொண்டுள்ள கருத்தை விடுதலையைக் காரணம் காட்டி மற்றவர்கள் மீது திணிப்பதற்கு நீங்கள் இடமளிக்கக் கூடாது. என தெரிவிக்கப் பட்டுள்ளது. இன்னும் தனிப்பட்ட தங்களது காழ்ப்புணர்ச்சிகளை தீர்ப்பதற்கு எழுநாவை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என உரிமையோடு தங்கள் கருத்துக்களை எழுதிருந்தார்கள். இதே வேளை பரபரப்பிற்காக இவ்வாறான விடயங்களை வெளியிடுதலை தவிர்க்க வேண்டும் எனவும் சிலர் கூறியிருந்தார்கள். ஆயினும் அக்கட்டுரை வெறும் பரபரப்பிற்காக
வெளியிடப் படவில்லை என்பதனை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கின்றோம். இந்நிலையில் அக்கட்டுரையில் குறிப்பிட்ட விடயங்களின் மெய் பொய் நிலைகளை தாயகத்திலிருக்கும்
எழுநா அறிந்து கொள்ள வாய்ப்பில்லாத சூழலில் இக்கட்டுரையினை வெளியிட்டிருக்கக் கூடாது எனவும் கடிதங்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அக்கருத்தினில் இருக்கும் நியாயத்தன்மையை எழுநா ஏற்றுக் கொள்கின்றது. ஆயினும் அக் கட்டுரையினை ஒரு முடிந்த
முடிவுக் கருத்தாக எழுநா வெளியிடவில்லை. அவ்வாறான ஒரு கருத்து முன் வைக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்த மறுப்புக்களையும் மாற்றுக் கருத்தினையும் நாம் எதிர்பார்த்தோம். குறிப்பாக குறித்த ஒரு வானொலி குறித்து தாயகனின் கருத்துக்களை மறுதலித்து அனேகரின் கருத்துக்கள் வந்தடைந்தன. ஐ.பி.சி வானொலி எவ்வளவோ கஷ்டத்துக்கு மத்தியில் சேவையாற்றுகிறது. அவ்வானொலி ஒன்றுதான் உலகில் உள்ள தமிழ் வானொலிகளில் உருப்படியாக செய்கிறது. அதனையும் தாக்கி எழுதியிருக்கிறீர்கள் என ஒரு வாசக நண்பர் எழுதியிருந்தார். அத்துடன் இப்பத்தியை எழுதியவரின் உண்மையான பெயரினை அறியத் தந்து அக்கட்டுரையினை வெளியிட்டிருக்கலாம் எனவும் சிலர் தெரிவித்திருந்தார்கள். இக் கருத்தினை அக் கட்டுரையினை எழுதியவரின் சிந்தனைக்கே விட்டு விடுகின்றோம். கருத்துக்களை, கண்டனங்களை எழுதியவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து
அக்கட்டுரையினை எழுநா நீக்கியிருக்கின்றது. உங்கள் கருத்துக்கள் கண்டனங்களாக இருந்த போதும் உடனுக்குடன் எம்மை வந்தடையும் போது, நீங்கள் எம்மோடு இணைந்திருக்கின்றீர்கள்
என்பதறிந்து எழுநா மகிழ்வடைகின்றது. மீண்டும் சந்திப்போம்.
நி.கெனடி
உங்கள் கருத்துக்கள்.
இ.கரன்
அவுஸ்திரேலியா
உங்களுடைய தளத்தில் 'ஊடகங்களின் நாயகர்கள் யார்?" என்கிற கட்டுரை வாசித்தேன். உங்களுடைய தளம் இப்பொழுது வளர்ந்து வரும் தளம். ஏன் இப்படி பிற ஊடகங்களை தாக்கி கட்டுரையினை வெளியிடுகிறீர்கள். வெளியிட்டீர்கள் எழுதியவரின் பெயரை
ஏன் வெளியிடவில்லை? ஐ.பி.சி வானொலி எவ்வளவோ கஷ்டத்துக்கு மத்தியில் சேவையாற்றுகிறது. அவ்வானொலி ஒன்றுதான் உலகில் உள்ள தமிழ் வானொலிகளில் உருப்படியாக
செய்கிறது. அதனையும் தாக்கி எழுதியிருக்கிறீர்கள். தயவு செய்து இப்படியான கட்டுரைகளை வெளியிடுவதாயின் ஒரு தடவைக்கு இரு தடவை சிந்தித்து அல்லது எழுதியவரின் உண்மையான பெயரினை போட்டு வெளியிடுங்கள்.உங்களுடைய தளத்தினை சிறந்த தளமாக கொண்டு வர முயற்சி செய்யுங்கள். அதனை விட்டுவிட்டு பரபரப்புக்காக இப்படியான கட்டுரைகளை வெளியிட்டால் பின்னர் தளத்தினை மக்கள் வெறுக்கவே செய்வார்கள்.

0 Comments:
Post a Comment
<< Home