Pulampal

Pulampal

Thursday, August 10, 2006

பெண்ணியவாதிகள் சொன்னவை சொல்லாதவை

- வெங்கட் சாமிநாதன்

சமீபத்தில் "அணங்கு' என்னும் ஒரு பெண்ணிய இலக்கிய அமைப்பு நடத்திய கருத்தரங்கம் சென்றிருந்தேன். கொஞ்சம் சிரமத்துடன்தான் சென்றேன். எளிதாக அடைய முடியாத ஓர் இடத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். குற்றம் சொல்வதற்கில்லை. கிடைத்த இடத்தில்தான் ஏற்பாடு செய்ய முடியும்.

பெண்ணியம், கட்டாயம் வரலாற்று நியாயங்களையும் சமூக நியாயங்களையும் தன்னுள் கொண்டுள்ளதுதான். சமூகம், ஆண் மேலாதிக்கம் கொண்ட சமுகம்தான். இப்பெண்ணிய விழிப்புணர்வும், எதிர்ப்பும் எழுவது இயல்புதான். இவ்வெதிர்ப்புணர்வின் வெளிப்பாடுகள் சில, ஆரம்ப உற்சாக மிகுதியினாலும் உணர்ச்சி மேலீட்டினாலும் திடுக்கிட வைக்கும் அளவுக்கு நிதானமிழந்து எல்லைகளை மீறுவதாகத் தோன்றும். 'உள்ளாடைகளை எரிப்போம்' என்ற கோஷம் பெண்ணிய வீராப்பின் அடையாள மாயிற்று ஒரு கட்டத்தில், பல இடங்களில். தன் இயல்பான பெண்மையே, ஆண் மேலாதிக்கம் கட்டமைத்துள்ள சதிகாரச் சட்டத்தின் விளைவு என்று சொன்னால் அதை என்னவென்று சொல்வது? பூக்கள் அழகாகவும் மிருதுவாகவும் வண்ணக் கவர்ச்சியோடும் இருப்பது என்ன சதித்திட்டத்தின் விளைவு? இப்படியான கோணலான விகார வாதங்கள் வைக்கப்பட்டன. பெண் தன் பெண்மையைக் குற்ற உணர்வோடு பார்த்தால், ஆண், ஒரு சமாதானத் தீர்வாக தன் ஆண்மையை இழந்துவிடத் தீர்மானித்தால், அதைத் தடம் மாறிவிட்ட இயக்கம் என்றுதான் சொல்லவேண்டும். அலைமோதýல், உயர எழும் அலை அடங்கி சம நிலை அடைய வேண்டும். எந்தக் கூட்டு இயக்கத்திலும் அவரவரது மன விகாரங்கள், இயக்கத்தின் லேபிளைத் தன் மீது ஒட்டிக்கொண்டு தன் விகாரத்திற்கு நியாயம் தேடிக்கொள்ளும். கூட்டத்தின் எல்லை மீறல், எப்போதும் பாஸிஸ குணங்களை மேற்கொள்ளும்.

அம்மையார் ஒருவரின் மன விகாரம், எல்லை மீறிய போது, அந்த அம்மையார் புலம்பிக் கொண்டிருந்தாராம். "எந்தப் பெண்ணிய எழுத்தாளர் எனக்கு உதவியாகக் குரல் கொடுத்தார்? நான் தனித்து விடப்பட்டேன்?' என்று. ஒரு தனிப்பட்ட அம்மையாரின் மன விகாரம் எப்படி பெண்ணியப் பொதுக்குரலாகும்? அடுத்து இன்னும் ஒரு பெண் கவிஞரின் கவிதைகள் கடுமையாக, என் கருத்தில், நியாயமற்று விமர்சிக்கப்பட்ட போது அந்தப் பெண்கவிஞருக்குத் தன் கவிதைகளில் இருந்த நம்பிக்கையை விட தன் பெண்ணிய கட்சி லேபிளிலும், தன் கோபக் கனýலும், வசைகளிலும் அதிக நம்பிக்கை கொண்டவராகக் காணப்பட்டார். விமர்சகர், பாவம், ஆடிப்போய்விட்டார். பெண் பாவம் பொல்லாது என்ற சமூகப் பார்வை உண்டே! பெண்ணியம் என்ன கருத்துக்கொண்டி ருந்தாலும் இது சாதகமான சமூகப் பார்வை ஆயிற்றே. ஆனாலும், ஒரு கொடூரமான ஆணாதிக்க அராஜக சிந்தனை இங்கு அரசியýலும் எழுத்தாளர் சமூகத்திலும் நிலவுகிறது. யங்ள்ற்ங்க் ண்ய்ற்ங்ழ்ங்ள்ற்ள் என்பார்கள். தன் பதவி, தன் புகழ், தன் நலன், தன் உரிமை எனத் தான் கற்பித்துக்கொண்டுள்ளது ஆபத்தில் உள்ளது என்றாலோ, அவற்றை இழக்கும் விளிம்பிற்குத் துரத்தப்பட்டாலோ, ஆணாதிக்க மனம் ஒரு மிருகத்தனமான கோரத்தை ஸ்வீகரித்துக்கொள்கிறது.

பெண் கவிஞர்கள் சிலர், இன்றைய சமூக மதிப்புகளின் மொழி வெளிப்பாட்டு எல்லைகளை மீறத் தொடங்கியுள்ளார்கள். அது சரியா, தவறா என்பது கருத்துப் பரிமாற்றத்திற்குத் தளம் அமைத்து விவாதிக்கப்பட வேண்டியது. அதை விட்டு, 'இவர்கள் என் எதிரில் வரட்டும். காலை வெட்டு கிறேன்; கையை வெட்டுகிறேன்' என்று சொல்வதற்கோ, "இவர்களை எல்லாம் மௌண்ட் ரோடில் வைத்துக் கொளுத்த வேண்டும்' என்று சீறுவதற்கோ கவிதையே எழுதாது கவிப்பேரரசு களாக ஆனவர்களுக்கோ, ஓடிப்போய் கல்யாணம் கட்டிக்கலாமா, தாýகட்டி பிள்ளை பெற்றுக் கொள்ளலாமா என்று வீட்டுக்கு வீடு சந்துபொந்துகள் எல்லாம் சிறுவர்கள் தெரிந்தோ தெரியாமலோ குதூகýத்துக் கொம்மாளமிடக் காரணமாக இருந்தவர்களுக்கோ இத்தகைய பாஸிஸக் குரல் எழுப்ப அருகதை இல்லை. பெண் கவிஞர்களாவது, தன் வாழ்நிலையின் வதைபடýல் உணர்ச்சி கொப்பளிக்க, நிதானமிழந்தவர்கள் என்றுதான் அதிகம் குற்றம் சாட்டலாம். ஆனால் வெட்டவும் எரிக்கவும் கிளம்புகிறவர்கள் குரல், கவிஞர் குரல் அல்ல. அவர்கள் பணத்தாசையில், பேர் ஆசையில் கட்டளைக்குப் பாட்டெழுதிய அவலம் அடைந்தவர்கள். அடைந்தவர்கள் அல்ல, ஆசையுடன் அவல நிலையில் வீழ்ந்து, அச்சகதியில் புரளும் சந்தோஷம் கொள்பவர்கள்.

பெண் கவிஞர்களின் மொழி எல்லை, சமூக மதிப்பு மீறல்களைக் குறைசொல்ல, தண்டனை கொடுக்க இவர்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது.

தகுதி இருப்பதாக இவர்கள் எண்ணிக் கொண்டால் இவர்கள் தம் பலவீனத்தைத்தான் தம்பட்டமடித்துக்கொள்கிறார்கள். அத்தோடு தம் மிருகத்தன வெளிப் பாட்டையும்தான் காட்டிக் கொள்கிறார்கள்.

ஆக, நான் அணங்கு கருத்தரங்கு சென்றது, பெண் கவிஞர்கள் பலரும் பெண்ணியவாதிகளும் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வந்த எழுத்தாள பிரமுகர்களும், இம் மொழி வெளிப்பாடு பற்றி என்ன நியாயங்கள் சொல்கிறார்கள்? அவர்கள் கருத்துநிலை என்ன என்று அறியத்தான். சற்று தாமதமாகச் சென்றேன். இடம் கண்டுபிடிக்கும் தடுமாற்றத்தில் இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் தான் நான் சென்னையைப் பரிச்சயப்படுத்திக் கொள்கிறேன்.

கருத்தரங்கில் நிறைந்திருந்தது, ஆண்கள் கூட்டம். நான் கேட்கப் பேசியவர்கள் எல்லோரும் ஆண்கள். ஆணாதிக்கத்தின் கொடூரங்கள் பற்றி விளாசித் தள்ளினார்கள். இவ்வாறு பெண்களின் பரிதவிப்பிற்ச்ôகக் கண்ணீர் விட்டவர்களில் சிலர், அவரவர் வீட்டில் கோலோச்சும் பெண்ணரசிகளின் கட்டுப்பாட்டில் அடங்கி ஒடுங்கி வாய்பொத்தி இருப்பவர்கள். ஆக இதுவும் ஒரு பொய்யான அரசியல் கோஷ மேடையாக்கப்பட்டுவிட்டது என்றுதான் தோன்றிற்று. ஏழைகளுக்காகக் கண்ணீர் விடும், ஆயிரங்கோடி சொத்துள்ள தலைவர்களை நாம் தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில் காண்பதில்லையா? அதே சமயம் தன் முரட்டுக் கணவனின் காட்டுக் கத்தலைக் கண்டு பயந்து வாயடைத்துப் போகும் பெண்ணியவாதிகளையும் கண்டிருக்கிறேன். புடவைக் கடைக்குப் போகக் கூட கணவனின் அனுமதி பெற்றே போவார்கள். இவ்வள வுக்கும், கணவனை விட திறமையும் புத்திக் கூர்மையும் மிகுந்தவர், பெண்ணியவாதி. ஒரு சமயம், 'செருப்புப் பிஞ்சிடும், ஆமாம் தெரியுமா?' என்ற கூச்சல் கேட்டு (அந்நிய மொழியினர் கூடியிருந்த கூட்டத்தில்) திரும்பிப் பார்த்தால் அந்தக் கணவர் கண்சிவக்க, பெண்ணியவாதி அடங்கி மௌனம் காத்தார்.

""நான் பெண்ணியவாதி அல்ல'' என்று தனக்கே ஆன தீர்மானத்துடன் பலமுறை சொல்ýயிருக்கிறார், தன் பேட்டிகளில் அவருடைய ""மந்திரி சபையில் உள்ள ஒரே ஆண்'' என்னும் பெயர் பெற்றவர் இந்திரா காந்தி. பெண்ணியம் எனப் பேசாது தன் ஆளுமையின் வீரத்தையும் பலத்தையும் நிரூபித்தவர். எனக்கு ஒரு நிகழ்ச்சி சொல்லப்பட்டது, பத்திரிகை நிருபர்களால். விமான விபத்தில் சஞ்சய் காந்தி உயிரிழந்த போது, துக்கம் விசாரிக்கச் சென்றவர்களில் தமிழக அரசியல் தலைவரும் ஒருவர். இந்திரா காந்திமுன் தொண்டை அடைக்க, குரல் விக்கித்துப்போக, அழுகை தொனிக்க, ஏதோ சொல்ல, இந்திரா காந்தி "ரட்ஹற்'ள் ற்ட்ண்ள்? ஸ்ரீர்ய்ற்ழ்ர்ப் ஹ்ர்ன்ழ்ள்ங்ப்ச் " என்று கடிந்து கொண்டாராம். இந்த இடத்தில் இந்த சமாச்சாரம் பýக்காது என்று அந்த அரசியல் தலைவர் தெரிந்து அமைதியானாராம். இவர் கண்ணீர் புகழ் பெற்றவர். அலங்கார நடையில் இரங்கல் செய்தி தருபவர்.

ஆக, ஆண்மை, பெண்மை என ஏதும்- வரம்புகளை குணங்களுக்கு, நம் வெளிப்பாடுகளுக்கு செயல்களுக்குக் கட்டிவிடமுடியாது. வீரத்துடன் மனதிடத்துடன் அஞ்சாமையுடன், பெண்மையும் உடன் வாழ முடியும். வீராவேசப் பேச்சுகளுமாக கண்ணீருமாக, ஆண்மையும் பவனிவரும்.

ஆபாசம், எல்லை மீறல், என்ப தெல்லாம் கூட இப்படி வரம்புகளுக்குட் படாதவைதான். காலம், சமூக மதிப்புகள் என வரம்புகள் உள்ளன.

வெள்ளிவீதியார், ஒளவையார் என இரண்டு பேரிடம் பேச்சாளர்கள் அடிக்கடி தஞ்சம் அடைந்தனர். இதில் எல்லாம் ஏதும் அர்த்தம் இல்லை. இன்று 2004 இல் எந்த 13 வயதுச் சிறுமியாவது ஆண்டாளைப் போல் கவிதை எழுதினால், எந்தத் தமிழ்த் தந்தை, பெரியாழ்வாராக ஆகி, ஆசீர்வதித்து மகிழ்வார் எனத் தெரியாது. அவ்வளவு தூரம் போகவேண்டாம். 16 ஆம் நூற்றாண்டு கிருஷ்ண தேவராயர், தன் இரண்டு ராணிகளுடன் தான் கட்டிய கோவிýல், தெய்வத்தை வணங்கி நிற்கும் சிற்பம் உண்டு. ஒரு சாம்ராஜியத்தின் சக்கரவர்த்தி இடுப்பில், முழங்காலுக்கு மேல் தொங்கும் ஆடையுடன் கைகூப்பி நிற்கிறார். இரண்டு ராணிகளுக்கும் அதே கதைதான். திரண்டு பொங்கி எழும் மார்புகள். சக்கரவர்த்திக்கோ, அவரது ராணிகளுக்கோ, ஏதும் மறுப்பு இருக்க வில்லை. அரசவையின் மற்றோருக்கும் மக்களுக்கும் ஏதும் மறுப்பு இருக்க வில்லை. இது சகஜமாக ஏற்றுக்கொள்ளப் பட்டது. சங்க காலத்திýருந்து, சுமார் ஆயிரம் ஆண்டுகாலம் இத்தகைய சுதந்திரமான வெளிப்பாட்டிற்குத் தடை ஏதும் இருந்ததில்லை. ஒரு சினிமா நடிகைக்குக் கோயில் எழுப்பியதாகப் படித்தேன். அதில் அந்த நடிகை எத்தகைய தோற்றம் தந்திருப்பார்? ஆண்டாள் மாதிரி அவர் பேசவும் மாட்டார். அவரது சிலை, கிருஷ்ண தேவராயரின் பட்ட மகிஷி போன்ற தோற்றமும் கொண்டிருந்திராது.

பழைய விவகாரம் போகட்டும். அறுபதுகளில் ஓர் சமயம், ஹிந்தியின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான கிருஷ்ணா úஸôப்தி, ஒரு சர்ச்சைக்குரிய கதையை (யாரோ(ன்)கே யார்) எழுதியிருந்தார். அதில் ஆபாசம் என்று கருதப்பட்ட வார்த்தைப் பிரயோகங்கள் நிறைய இருந்தன. பிராபல்யம் பெறும் ஆசையில் எழுதப்பட்டதல்ல என்பதும், கிருஷ்ணா úஸôப்தி, தரமான எழுத்தாளர் என்பதும் சர்ச்சைக்கே இடமில்லாது ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயங்கள். தமிழ் எழுத்தாளர் மாதிரி அவ்வளவு மோசமில்லை. கிருஷ்ணா úஸôப்தியை தம்மிடையே வைத்துக் கொண்டே அவர் முன்னிலையிலேயே ஒரு கருத்தரங்கம் நடந்தது. இரு தரப்பிலும் வாதங்கள் நடந்தன. பண்பாடற்றவை என்றும், சகஜமாக மக்களிடையே படித்தவர்களிடையே கூட புழங்கும் வார்த்தைகள்தான் என்றும் வாதமிடப்பட்டாலும் ஒரு வேடிக்கையான விஷயம், அவர்களில் யாரும், எழுத்தாளர் கிருஷ்ணா úஸôப்தியையும் சேர்த்து ''அந்த மாதிரியான வார்த்தைகள்'' என்றுதான் குறிப்பிட்டார்களே அல்லாது ''அந்த மாதிரி வார்த்தைகள்'' என்ன என்பதை யாரும் உச்சரிக்க வில்லை. உச்சரிப்பது அவர்களுக்கே அவ்வார்த்தைகளை எழுதிய கிருஷ்ணா úஸôப்திக்கே கூட நாகரிக மற்றதாக-பண்பாடற்றதாகத்தான் பட்டிருக்கிறது.

இங்கே கூட சம்பந்தப்பட்ட கவிஞர்கள் யோனி என்ற, புழக்கத்தில் இல்லாத, தமிழ் அல்லாத வார்த்தையைத்தான் வýந்து எழுதியிருக்கிறார்களே தவிர அதற்கான தமிழ் வார்த்தையை, ஒரு தரப்பட்ட சமூகத்தில் மாத்திரமே புழக்கத்தில் உள்ள வசையான, ஆனால், எல்லாத் தமிழரும் அறிந்த வார்த்தையைப் பயன்ப டுத்தவில்லை. தெரிந்தே பலத்த யோசனையின் பிறகே என்பதில் எனக்குச் சந்தேக மில்லை. தம் வாழ்நாளில் ஒரு முறை கூட அந்தக் கவிஞர்கள் அத்தமிழ் வார்த்தையை உச்சரித்திருக்க மாட்டார்கள் என்பது எனது சர்வ நிச்சய மான யூகம். அவர்கள் இக்கூற்றை மறுத்தால் நான் ஏதும் சொல்வதற்கு இல்லை.

ஆக, படிப்போரை, ஆண்களை, சமூகத்தை இவ்வாறு எழுதித் திடுக்கிட்டு ஆடவைத்து விடவேண்டும் என்று நினைத்துச் செய்த காரியத்தில் அவ்வாறு திடுக்கிட வைக்கும் வார்த்தையைப் பயன்படுத்துவதில் அவர்களுக்கே தயக்கம் நிறைய இருந்திருக்கிறது. திடுக்கிட வைப்பது சொல்லப்பட்ட கருத்துதானே. இதுகாறும் திடுக்கிட வைத்த கருத்துகளைச் சொல்ý ஸ்தம்பிக்க வைத்த இக்கவிதாயினிகள், அந்த வார்த்தைகள் இல்லாமலேயே சொல்ý விட முடிகிறபோது, இப்போது ஏன் அந்த வார்த்தைகளை உபயோகப்படுத்தியே ஆக வேண்டும் என்று வீம்பு பிடித்து, பின் தயங்கித் தடுமாறி, யோசித்து, யாரும் புழங்காத சம்ஸ்கிருத வார்த்தையில் தஞ்சம் புகுந்து ஏதோ கத்தி சுழற்றி விட்டதாகப் பூரித்துப் போகவேண்டும்?

ஸ்ருதி என்னும் பத்திரிகையில் அநேகம் வருடங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சி. அரியக்குடி ராமானுஜ அய்யங்காருடன் பேட்டியோ அல்லது, அவருடனான சம்பாஷணையை நினைவுறுத்தியோ எழுதப்பட்டிருந்தது. ஆண்டாளின் திருப்பாவையை ஸ்வரப்படுத்த எடுத்துக்கொண்டவர், பல பாடல் களைத் தொடவில்லையாம் 'அதெல்லாம் வேண்டாம்னா? என்னென்னெல்லாமோ எழுதியிருக்கு. கஷ்டமா இருக்கு' என்றார், அரியக்குடி. ஆண்டாளுக்கும் பெரியாழ்வாருக்கும் இல்லாத தயக்கம், அவருக்கு. இடையில் 13 நூற்றாண்டு காலம் கழிந்துள்ளதே. அப்போது அவரிடம் ஒரு கேள்வி: "ஜெயதேவரின் அஷ்டபதிக்கு செய்திருக்கிறீரே ஸ்வாமீ' அதிலேயும்கூட அப்படி என்னென்னவெல்லாமோ எழுதியிருக்குமே?' என்று. அது சரி. ஆனா அதெல்லாம் ஸமஸ்கிருதத்திலேன்னா இருக்கு. ரொம்பப் பேருக்கு அது என்னன்னே புரியாது இல்லையா? அதனால் பாதகமில்லை. திருப்பாவை தமிழ்லேன்னா, இருக்கு?' என்றாராம், அரியக்குடி.

அரியக்குடி மாதிரி ஒரு பழங்கால ஆசாரசீலருக்கு இருந்த பண்பாட்டுத் தயக்கங்கள், நமது இன்றைய பெண்ணிய வீராங்கனைகளான கவிதாயினிகளுக்கும் இருந்துள்ளது விநோதம் தானே! அவர் புரட்சி செய்யத் தயங்கியவர். இவர்கள் புரட்சி பண்ணப் புறப்பட்டவர்கள். இருவருக்கும் ஒரே மாதிரி சிந்தனை! செயல்பாடு!!

ஆக, நான் எந்த விளக்கங்கள் கிடைக்கும் என்ற ஆர்வத் தோடு சென்றேனோ, அந்த விளக்கங்களுக்குக் கருத்தரங்கில் இடமிருக்கவில்லை.

ஆனால் ஒரு நாவன்மையும் தங்கு தடையற்ற சொல் பிரவாகமும், மூச்சிரைக் காத ஆரோக்கியமும் கொண்ட அஜிதா என்ற பேச்சாளர், தம் அரசியல் களப்பங்கை ஆற்றி னார். பெண்களின் வதைபடும் வாழ்க்கையைவிட அவர் பேச்சில் முக்கிய இடம் பெற்றது பார்ப் பனியரும் மனுஸ்மிருதியும். வரலாற்றுத் தொகுப்பாக ஆதி காலத்தைத் தொட்ட அவர், இஸ்லாம், கிறித்துவம், பார்ப்பனியம், மனுஸ்மிருதி என்று ஆரம்பித்து அடுத்த நிமிடம், அடுத்த வாக்கியத்தில் இஸ்லாத்தையும் கிறித்துவத்தையும் அங்கேயே விட்டு விட்டு பின்னிரண்டையும் கடைசிவரை அவர் சாடிய சாடல், திராவிட இயக்கங்கள் அத்தனைக்கும் மகிழ்ச்சி தரும். மிக வன்மையான அயராத பேச்சாளர், எதைத் தாக்கவேண்டும் என்று தீர்மானித்துக்கொள்கிறாரோ அதற்கேற்றவாறே, தன் வாதங்களைச் சýத்தெடுத்துக்கொள்வார். வக்கீல். நிறைய வாதத்திறமை. தனக்குச் சாதகமான டர்ண்ய்ற்ள் - ஐ மாத்திரம் பொறுக்கி எடுத்து அதை ஊதிப் பெருக்கி பூதாகாரமாகச் சித்திரிப்பதில் வல்லவர்.

மனுஸ்மிருதி கல்வெட்டாகிப் போன, பழஞ் சுவடியாகிப் போன ஆவணம். யாரும், ஈயத்தைக் காய்ச்சிக் கொட்டுவது கிடையாது தண்டனையாக. மலம் கரைத்து ஒரு தýத் வாயில் ஊற்றியதாக பத்திரிகைச் செய்தி உண்டு. எந்தப் பார்ப்பனர் இதைச் செய்தது? இல்லையெனில் செய்தது யார் என்று அஜிதா விசாரித்துச் சொன்னால் நலமாக இருக்கும். ஆனால், கடவுள் கட்டளை, என்று முல்லாக்கள் சொல்ý தம் விருப்பத்திற்கும் ஆண் மேலாதிக்கத்தின் அடக்குமுறைக்கு மான கருவியாகப் பயன்படுத்தும் ஷரியத் இன்னும் உயிருள்ள -உயிரூட்டப்படும் சட்ட விதி. திருடினவன் கை வெட்டப்படும். கற்பழிக்கப்பட்டவள், வழி தவறியவள் நடுத்தெருவில் நிற்க வைக்கப்பட்டு ஊர்க்காரர்கள் வேடிக்கை பார்க்கக் கற்கள் எறிந்து கொல்லப்படுவாள். கற்பழிக்கப்பட்ட பெண், தான் குற்றமற்றவள் என்று நிரூபிக்க நான்கு சாட்சிகள் தேவை, ஆண்களுக்கு அது தேவை இல்லை. மூன்று முறை 'தலாக் தலாக்' என்று சொன்னாலே போதும். ûஸயத் ஹாபுதீன் பயமுறுத்தினால், ராஜீவ் காந்தி அரசியல் சட்டத்தையே திருத்தி உதவுவார். அஜிதா வேண்டி னால் நைஜீரியாவிýருந்து பாகிஸ்தான் வரை முஸ்ýம் அரசு நாடுகளின் நடப்புச் செய்திகளை நான் தரமுடியும். அஜிதா பத்திரிகை படிப்பவரென்றால், சுற்றி நடப்பவற்றைக் கவனிப்பவரென் றால் தமிழ்நாட்டில் அரசோச்சுவது பார்ப்பனீயம் அல்ல. அவர்கள் அல்லாத-மேல் ஜாதிக்காரர்களும் அல்லாத, இடைநிலைப்பட்ட சாதியினரிýருந்து கடைநிலையில் உள்ளவர் வரை உள்ள நூற்றுக் கணக்கான சாதியினர் அத்தனை பேரும் இன்றுவரையும் இனி என்றும் தவறாது கடைப்பிடிக்கும் அந்தந்தச் சாதீயம் தான், அதன் வன்முறைதான், அந்தந்தச் சாதீய ஆண்களாலும், அவர்களுக்கு மேல்படியிýருக்கும் சாதியின் ஆண்களாலும் வதைபடும் பெண்களிடம் கேளுங்கள். அவர்கள் கொடுமைக்காளாவது எந்தச் சாதீயம், எந்த ஆணாதிக்க மேலாண்மை என்று. இன்று வரை கடந்த 20 ஆண்டுகளாகப் பெருகிவரும் தýத் எழுத்துகள் (படைப்பிலக்கியங்களைச் சொல் கிறேன். தýத் சித்தாந்திகளின் கொள்கைப் பிரகடனங்களைச் சொல்ல வில்லை.) என்ன சாட்சியம் கூறு கின்றன, தெரியுமா? அவை உண்மை யின் பதிவுகள். இதய வýயின் உடல் வýயின் பதிவுகள். திராவிட இயக்க எழுத்துகள் போல கதை சொல்ல வந்த கொள்கைப் பிரகடனங்கள் அல்ல. கடைசியாக ஒன்று சொல்லத் தோன்றுகிறது. சிறு வயதிýருந்து அரசியல் கட்சிக் கூட்டங்களை நான் பார்த்துக் கேட்டு வருகிறேன். திராவிட இயக்கப் பேச்சாளர்கள் (இதில் தலைவர், தொண்டர் வித்தியாசங்கள் கிடையாது) பெண்களை ஆபாசமாகக் கிண்டலாக, பாýயல் உபமானங்களோடு ஆபாச அங்க வர்ணனைகளோடு, கூட்டத்தினரைக் களிப்பூட்ட தம் பேச்சுக்களில் மசாலாவாக தம் ஆபாச வர்ணனைகளைப் பரவலாகத் தெளித்து திராவிட இயக்கப் பேச்சுகளை 'அ' முத்திரை குத்தப்பட்ட சினிமாவாக ஆக்கியது யார்? இது தொடக்கம். இது திராவிட இயக்கப் பேச்சாளர்களின் கைங்கர்யம் . இன்று இது எல்லாக் கட்சிகளையும் பிடித்துள்ள நோய். தமிழ்நாட்டின் பண்பாட்டுச் சீரழிவிற்கு யார் முழுமுதற்காரணம் என்று நினைக்கிறீர்கள்? தனக்கு எதிர்க்கட்சியில் உள்ள பெண்களை எவ்வளவு கேவலமாக ஆபாசமாக வர்ணிப்பார்கள் தெரியுமா? இதற்குத் திராவிட இயக்கத் தலைமைகள்தான் வழிகாட்டி. அன்று காங்கிரஸில் இருந்த அனந்தநாயகி, இவர்களது ஆபாக மேடைப் பேச்சுகளால் எவ்வளவு கேவலப்படுத்தப் பட்டார்! இன்று இவர்கள் ஆபாச வர்ணனைக்கு ஆளாவது, ஜெயலýதா. பெண்கள் எதிரணியினர் என்றாலே இவர்களுக்கு உற்சாகம் அலைமோதும். விழுப்புரம் மாநாடு பற்றிக் கேட்டதுண்டா, அஜிதா அவர்களே! அல்லது இப்போது நடக்கும் தேர்தல் கூட்டங்களை? இளங்கோவன் பேச்சுகளைத்தான் கேளுங் களேன். அவரும் சளைத்தவரில்லை.


பெண்ணியம் இதற்கு என்ன சொல்கிறது? இல்லாத இடத்தில் இருட்டில் தேடிக்கொண்டே இருக்கலாம். 70 வருடங்களாகப் பேசியாயிற்று. இன்னமும் பேசிக்கொண்டே இருக்கலாம். எதிரணியில் பெண்கள் இல்லாமலா போய் விடுவார்கள்.

சமூகமே ஆபாசமாக நிறைந்திருக்கிறது. பெண்களை இரையாக்கிக் களிப்பதில் என்ன உற்சாகம் இந்த சக்திகளுக்கு! செய்வதையெல்லாம் செய்து விட்டு வசனம் பேசலாம். ""மாற்றான் வீட்டுத் தோட்டத்து மல்ýகை'' என்றும் ""நாங்கள் கற்றது கடமை கண்ணியம் கட்டுப்பாடு'' என்றும்.

பெண்களை, தனக்குச் சமதையே இல்லாத, தன் திளைப்பிற்கும் சுகத்திற்குமேயான கருவிபோல, ஆபாசமாகப் பேசிக் களிப்பது, அரசியல் தலைமைகள் மட்டுமல்ல. வியாபாரமே குறியான சினிமாக்களும்தான். அதற்குக் கலை என்று பெயரும் கொடுத்து, பணத்தையும் பிராபல்யத்தையும் தந்துவிட்டால், இதற்குப் பெண்களும் தயார்தான். தானும் ஒரு ஸ்டார் ஆகி, தானும் அதிகாரம் செலுத்தும் நிலை வரை இப்பெண்கள் சினிமாவில், தானே வýந்தோ அல்லது நிர்பந்தத்திற்கு ஆட்பட்டோ, படும் அவல வாழ்க்கை சொல்லத் தரமன்று. இவர்களை ஆட்டுவிப்பவர்களிடம் இவ்வாட்டங்களைக் கண்டு களித்துக் கள்ளுண்ட மயக்கத்தில் மிதக்கும் சினிமா ரசிகர்களிடமும் காணப் படுவது ஆணாதிக் கத்தின் இரு பரிமாணங்கள் தாம்.

இவையெல்லாம் பற்றிய கவலை அணங்கு கருத்தரங்கில் காணப் படவில்லை.

கடைசியாக ஒன்றைப் பற்றிச் சுருக்க மாகவாவது சொல்லா விட்டால் நியாயம் செய்ததாகாது. அன்றைய இரு அமர்வுகளுக்கு இடையில் பிரீதம் சக்கரவர்த்தி, தனிநபராக நிகழ்த்திய கண்ணாடி நாடகம் இதுவும் "புகழ்பெற்ற' நவீன நாடகச் சமாச்சாரமோ என்று பயந்திருந்தேன். நல்ல வேளையாக இல்லை. தனியொரு நடிகராக சுமார் 45 நிமிடநேரம். அலட்டாமல், குரல் உயர்த்தாமல், பெண்கள் நிலையையும் ஒரு தலைமுறைக்கு இடையில் பெண்கள் பெற்றுள்ள விழிப்புணர்வையும் அமைதியாக, அதே சமயம் நிறைந்த அழுத்தத்துடன் வெளிப்படுத்தினார். யாருடைய கவனமும் வேறு எங்கும் அலைபாயவில்லை. வேண்டுவது ஒரு காý மேடை. ஒரு நடிகர். அங்கு நாடகம் பிறந்துவிடும் என்பதை அன்று பிரீதம் நிரூபித்தார். அவரதுதான் அன்று வெளிப்பட்ட பெண்ணியக் குரல். மற்றவையெல்லாம் விஷயத்தைத் தொடாத அவரவர்க்குப் பிடித்த கோஷங்கள். வாழ்த்தவேண்டும் என்று தோன்றிற்று. பிரீதமை வாழ்த்தினேன்.

http://tamil.sify.com/amudhasurabi/may04/fullstory.php?id=13469564

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

பெண்களின் புனிதம் உடைக்கப்பட வேண்டும்!

- மேகலா -

தமிழிலக்கிய உலகில் கருத்தரங்குகளுக்கு முக்கிய இடமொன்று உண்டு. தனிமனித விமர்சனம், அர்த்தமற்ற வாக்குவாதம், சுவாரஸ்யமற்ற ஆழமில்லாத பேச்சு.... இவற்றை தவிர்த்துப் பார்த்தால் நிறைய கருத்தரங்குகள், அர்த்தம் பொதிந்ததாக இருப்பது தெரியும். அப்படி ஒரு ஆரோக்யமான கருத்தரங்கை மாலதிமைத்ரியும், க்ருஷாங்கினியும் இணைந்து, "அணங்கு' இலக்கிய அமைப்பின் சார்பாக சமீபத்தில் சென்னையில் நடத்தினார்கள். "இலக்கிய மரபும் பெண்ணும்' என்ற அந்தக் கருத்தரங்கை இரண்டு அமர்வுகளாகப் பிரித்திருந்தார்கள்.

முதல் அமர்வுக்குத் தலைமை தாங்கினார் எழுத்தாளர் பிரபஞ்சன். "உலக பெண் படைப்பின் குரல்' என்ற தலைப்பில் பேச வந்த சா.தேவதாஸ், வர்ஜினியா வுல்ஃபின் கவிதையோடு ஆரம்பித்தார்.

""பெண் என்ற வகையில் எனக்குத் தேசமில்லை;
பெண் என்ற வகையில் எனக்குத் தேசம்
தேவையில்லை; பெண் என்ற வகையில்
இந்த உலகமே எனது தேசமாகும்.''

""பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த "அமாண்ட்ýன் அரோரி லூஸி டூபின்', "ஜார்ஜ் ஸôண்ட்' என்கிற ஆண் பெயரில்தான் எழுதினார். அவரது நாவல்கள் அமெரிக்காவில் விவ-காரம் மிக்கவையாக, அபாயகரமானவை-யாக, தேசத்துரோக-மானவையாகக் கருதப்பட்டன. அவரது சவ அடக்கத்தின்போது அஞ்சý உரை நிகழ்த்த வேண்டிய டூமாஸ் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. ஹ்யூகோ கலந்து கொள்ளாமல் சிறுகுறிப்பை மட்டும் அனுப்பியிருந்தார். அதேபோல் இங்கிலாந்தைச் சார்ந்த "இவான்ஸ் மரி-யேன்'கூட "ஜார்ஜ் எýயட்' என்ற ஆண் பெயரில்தான் எழுதினார்.'' சா.தேவதாஸ் உலக பெண் படைப்பாளிகளான சில்வியா பிளாத், ஆன்செக்ஸ்டன், விர்ஜினியா வுல்ஃப், ஜெர்மேன் கிரீர், ஈவ் என்ஸ்லெர், அட்ரியேன் ரிச்... ஆகியோரின் நிலைபற்றி அழகாகச் சொன்னார். அதில் ஆன் செக்ஸ்டனைப் பற்றி அவர் குறிப்பிட்டது நம்மை அதிர வைத்தது. ""செக்ஸ்டன் ஏழு கவிதைத் தொகுதிகள் எழுதியவர். பைத்தியமாகி தற்கொலை செய்து கொண்டார்.''

"இந்திய பெண் படைப்பில் அகத்தின் மொழி' என்ற தலைப்பில் பேசிய அரங்க மல்ýகா, அம்ருதா ப்ரீதம், மகாஸ்வேதாதேவி, மாதவிக்குட்டி, கமலாதாஸ்... என்று பல படைப்-பாளிகளை ஆய்வுக்குட்படுத்தி-யிருந்தார். ""கமலதாஸ் கவிதைகளை பெண்ணின் அக வெளியை உணர்ந்து கொள்ளும் ஒரு ஆவண-மாக எடுத்துக் கொள்ளலாம்'' என்றவர் தற்போதைய தமிழ்க் கவிஞர்கள் மாலதி மைத்ரி, க்ருஷாங்கினி, சுகிர்தராணி ஆகி-யோரைப் பற்றியும் குறிப்பிட்டார். ""சுருக்கமாக சொல்ல வேண்டு-மென்றால் இதுவரை இருந்த பெண்களின் புனிதம் உடைக்கப்பட வேண்டும். மெüனம் கலைக்கப்-பட வேண்டும். இதுதான் இன்றைய சூழýல் பெண்களின் அகம் சார்ந்த தேவை'' என்றார் அரங்கமல்ýகா.

பர்வீன் சுல்தானா, "தமிழ் சினிமா பெண்மீது நிகழ்த்தும் காட்சி மற்றும் கருத்தியல் வன்முறை' என்ற தலைப்பில் உரையாற்றினார். ""சமூகத்தைப் பொறுத்தவரை தமிழ்சினிமா தவிர்க்க முடியாத ஊடகம். தமிழ் சினிமா பல்வேறு தளங்களில் வன்முறையை நிகழ்த்துகிறது'' என்று ஆரம்பித்து தமிழ் சினிமாவை ஒரு பிடி பிடித்தார். வசனம், வார்த்தை வன்முறை, இரட்டை அர்த்த வசனங்கள்.... எல்லாவற்றிற்கும் அருமையான உதாரணங்களைச் சொன்னார். தாý செண்டிமென்ட் தமிழ் சினிமாவைப் படுத்தும்பாடு, அந்தக் காலத்து நாகராணி, இந்தக் காலத்து நீலாம்பரி (படையப்பா) என பெண் வக்கிரமாக சித்தரிக்கப்படுவது, பாடல்வரிகள் அரசாங்கத்தின் தணிக்கை விதிகளை மீறி வெளிவருவது, பாடல்களில் பெண்கள் வாகனங்களுக்கு ஒப்பிடப்படுவது...... என்று அனல் பறந்தது பேச்சு.... ""தமிழ் சினிமா மூன்று மணி நேரமும் சில ரூபாய்களும் அல்ல'' என்றார் பர்வீன்.

""சங்கப் பாடல்களில் பெண்பாற் கவிகளின் அகம்'' என்ற தலைப்பில் பேசினார் பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன். ""ஆண்பாற் புலவர்களைவிட பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கை குறைவு'' என்றவர் உ.வே.சாமிநாதய்யர் 50 பேர் என்றும், ஒளவை நடராஜன் 41 பேர் என்றும், பேராசிரியர் ந.சஞ்சீவி 36 பேர் என்றும் குறிப்பிட்டிருப்பதைச் சொன்னார். ""சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பாடல்களிýருந்து அக்காலத்துப் பெண்களின் காதல், வீரம், பெரும்பாலும் பொருளாதாரத்தைத் தேடும் உரிமையின்மை, பெண்ணுக்கான இடம் பெரும்பாலும் வீடாக இருந்த, பரத்தையிடம் சென்று வரும் கணவரை முகமலர்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம், காதலன் வேறொரு பெண்ணோடு போய்விடாமýருக்க காதý செய்யும் முயற்சிகள், கைம்மைத் துயரம், உடன்-கட்டை ஏறுதல்.... எனப் பல்வேறு சமூக நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள முடிகிறது'' என்றார் அவர். "கண்ணாடி' என்ற நாடகத்தை நிகழ்த்தினார் ப்ரீதம் சக்கரவர்த்தி. கண்ணாடி முன் நின்று ஒரு பெண் தன்னை அலங்கரித்துக் கொண்டே, சில அந்தரங்-கமான விஷயங்களை கண்ணாடியிடம் சொல்கிறாள். அவள் ஒரு நடிகை. இதுதான் கதை. ப்ரீதம் சக்கரவர்த்தி பிரமாதமாக நடித்தார். ஏற்ற இறக்கங்களுடன், நெகிழ்ச்சியாய், உணர்ச்சி கொப்பளிக்க அவர் பேசிய விதம் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டு விட்டது.

இரண்டாம் அமர்வில், "நவீன பெண் கவிதையியýன் அகம் புறம்' என்ற தலைப்பில் பேச வந்த ந.முருகேச பாண்டியன், ""ஒரு பெண் இப்படி எல்லாம் எழுதலாமா? பெண் இப்படியான வார்த்தைகளைப் பயன்படுத்தலாமா? என்பது ஆரோக்ய-மற்ற போக்கு. திருவாசகத்தில் மாணிக்க வாசகர் கொங்கைகளைப் பற்றியே ஒரு பாடல் எழுதியிருக்கிறார். பட்டினத்தார் ஆபாசமாக எழுதினார். தற்போதைய பெண் கவிஞர்கள் பெண் என்பவள் தெய்வம், தாய், சக்தி என்ற பிம்பங்களை உடைத்து எறிகிறார்கள். இந்தக் கவிதைகளை கவிஞர் பிரம்மராஜன், "சானிடரி நாப்கின் கவிதைகள்' என்று சொல்கிறார். இது அயோக்கியத்தனம். மரபுவழிப்பட்ட கருத்தியலை தள்ளி வச்சுட்டுதான் இந்தக் கவிதைகளை பாக்கணும். இக்கவிதைகளை மாறுபட்ட பார்வை என்றுதான் நான் பார்க்கிறேன். இக்கவிதைகள் 2,000 வருட தமிழ்ச் சமூகத்தில் சில அதிர்வுகளை உண்டாக்கும்'' என்றார். இரண்டாம் அமர்விற்கு தலைமையேற்ற வழக்கறிஞர் அருள்மொழி, ""ஒரு பிரச்சனையின் அழுத்தம் என்பது நமக்குப் புரிந்ததை புரிந்த விதத்தில் சொல்வதுதான். அப்போதுதான் பிரச்சனையின் வý புரியும். அதனால்தான் பெண் கவிஞர்கள் இப்படியெல்லாம் எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டி-ருக்கிறது'' என்றார்.

""ஒரு விபத்து செய்தி பேப்பரில் வந்திருந்தது. "36 பெண்கள் உட்பட 4 பேர் மரணம்' இந்தச் செய்தி எப்படி சரியா இருக்கும்? பஸ்ஸ÷ல ஒரு பொண்ணு தூங்கினா "எப்படி தூங்குறா பாரு! உருப்படுமா?'ன்னு சொல்வாங்க. ஒரு பொண்ணு சாப்பிட்டா, "என்ன தீனி திங்கிறா பாரு! வெüங்குமா?'ன்னு சொல்வாங்க. அது மாதிரிதான் தற்போது பெண் கவிஞர்கள் மீது நடக்குற தாக்கு தலும்'' என்றார் அருள்மொழி.

"பெண்களின் மீதான கலாச்சார கண்காணிப்பும், பெண் படைப்பு மீதான ஒடுக்கு முறையும்' என்ற தலைப்பில் பேசிய பா.செயப்பிரகாசத்தின் உரை விரிவான, ஆழமான உரை. சிற்றிதழ்களில் எழுதுகிற பெண்களை புஷ்பா தங்கதுரையுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடிய சூழ்நிலை இருக்கிறது. இவைகளைத் தகர்ப்பது எப்படி? அதற்காகத்தான் இந்த "அணங்கு' அமைப்பு'' என்று குறிப்பிட்டவர், ""நமக்கான வெளியீட்டகம் தேவை. பெண்களுக்கான இதழ் ஒன்றையும் துவங்க வேண்டும்'' என்றார்.

வழக்கறிஞர் அஜிதா, "பெண்ணுடல் மீதான சமூக வன்முறை' என்ற தலைப்பில் பேசினார். ""பெண்கள் மீதான வன்முறை அதிகமாகிக் கொண்டே போகிறது. 2,000லிஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் வரதட்சணைக் கொடுமைக்கு ஆளான பெண்கள் 7,000 பேர்'' என்றவர் குர்லிஆன், பைபிள், ரிக் வேதம் ஆகியவற்றில் பெண்ணைப் பற்றிய மோசமான பிம்பம் உருவேற்றப் பட்டிருப்பதையும் குறிப்பிட்டார்.

"பெண் படைப்பு மற்றும் உடல் மீதான வெகுசன ஊடகங்களின் கருத்துருவாக்கம்' என்ற தலைப்பில் சுரேஷ் பாலும், (பெண்ணுடல் மீதான விசாரணையும் பாýயல் ஊடாட்டமும்' என்ற தலைப்பில் அமரந்தாவும் பேசினார்கள். காலையிýருந்து மாலை வரை நடந்தது கருத்தரங்கம். கணிசமான பார்வையாளர்கள். தற்போது தமிழில் சில பெண்கவிஞர்கள் பாýயல் பிரச்சனைகளை அதன் அழுத்தத்துடன் எழுதுகிறார்கள். அது சரிதான், என்பதே கருத்தரங்கின் அடிநாதமாக இருந்தது. அது சரியா? தவறா? என்று தீர்மானிக்க இது போன்ற கருத்தரங்குகள் திரும்பத்திரும்ப நடத்தப்பட வேண்டும். அந்தக் கருத்தரங்குகளில் இரு தரப்பினரும் ஆரோக்கியமான, தனிமனித தாக்குதலற்ற விவாதங்களை முன் வைக்க வேண்டும். விடை கிடைக்கும்.

http://tamil.sify.com/pennaenee/fullstory.php?id=13470464

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

மலரினும் மெல்லியது காமம்

- மதுரபாரதி -

காமம் தவறல்ல. பால் கவர்ச்சி என்பது இயற்கையின் செயல் - அற்புதச் செயல். அதன் சக்திதான் எவ்வளவு! 'காதல் முட்டாளை புத்திசாலியாக்குகிறது, புத்திசாலியை முட்டாளாக்குகிறது' என்றார் ஓர் அறிஞர். தினத்தந்தியில் சில கார்ட்டூன்களுக்குக் கீழே எழுதுவார்கள் "இதற்கு வசனம் தேவையில்லை" என்று. இதற்கும் அப்படித்தான். உங்கள் அனுபவமே போதும் புரிந்துகொள்ள.

மலரினும் மெல்லிது காமம், சிலர் அதன் செவ்வி தலைப்படு வார்

(குறள்: 1289; புணர்ச்சிவிதும்பல்)

என்றான் வள்ளுவன். அது மல்யுத்தமல்ல. கஜுராஹோ நிலைகளை எல்லாம் முயற்சி செய்வதல்ல. தெருவில் போவோர் வருவோர் எல்லாம் தன்னைப் பார்த்து மயங்குவதாகக் கற்பித்துக் கொள்ளுவதல்ல. எதெல்லாம் இல்லை என்று சொல்லலாமே அல்லாது, இதுதான் என்று சொல்வது மிகக் கடினம். அதனால்தான் அது 'மலரினும் மெல்லிது'. அதனால்தான் அதன் 'செவ்வி'யை 'சிலர்'தான் அறிவார்கள். எல்லோருக்கும் தெரிந்துவிடாது, வசப்பட்டுவிடாது.

செவ்வி என்றால் என்ன? அழகு, காலம், பருவம், தகுதி, ஏற்ற சமயம், காட்சி, புதுமை, வாசனை என்று இத்தனை பொருள்கள் உள்ளன அந்த செவ்வி என்ற வார்த்தைக்கு. சற்றே யோசித்துப் பார்த்தால் காதலுக்கு எல்லாமே பொருந்தும்! இதில் ஏதாவது சரிப்படாவிட்டாலும், அவ்விருவரிடையே நிகழ்வது விலங்குப் புணர்ச்சியாகவும், விலைப் புணர்ச்சியாகவும், வன்புணர்ச்சியாகவும், பொருந்தாப் புணர்ச்சியாகவும் முடிந்துவிடுமே அன்றி இருதரப்பிலும் அனுபவித்து, ஒவ்வொரு மயிர்க்காலிலும் உணர்ந்து, இருவரும் மற்றவரின் முழுத் துய்ப்புக்கு முயன்று, ஈடுகொடுத்து, மற்றவருக்கு ஆட்பட்டு, ஆட்படுத்திய 'செவ்வி' கொண்ட இன்ப நுகர்வாக இருக்காது.

செவ்வி என்றால் அழகு. காமத்தின் செவ்வியென்பது காமம் கொண்டவரின் அழகின்பாற்பட்டது. எவ்வளவுதான் மறுத்தாலும், உடல் காமத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது. அப்படியானால் எல்லாப் பெண்களும் ஐஸ்வரியா ராயாகவும் எல்லா ஆண்களும் மாதவனாகவும் இருக்கவேண்டுமா? அதுதான் இல்லை. ஒருவர் மற்றவரிடம் தன்னைக் கவரும் அம்சங்கள் இருப்பதைக் காணவேண்டும். மகாபாரதத்தில் 'யட்சப் பிரச்னம்' கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு பொய்கைக்குச் சென்று குடிநீர் கொண்டு வர பஞ்சபாண்டவர்கள் ஒவ்வொருவராகப்
போகின்றனர். தருமரைத் தவிர மற்ற நால்வரும் போய், ஒருவரும் திரும்பவில்லை. இறுதியாக தருமர் போகிறார். ஒரு யட்சன் அந்தப் பொய்கைக்குக் காவல் இருக்கிறான். தண்ணீர் எடுக்க முயலும் தருமரிடம் அவன் சொல்கிறான்:

"என் கேள்விகளுக்குச் சரியான பதில் சொன்னால் உன் சகோதரர்களை உயிர்ப்பிக்கிறேன். இல்லாவிட்டால் அவர்களைப் போல நீயும் உயிர்விட வேண்டியதுதான்" என்கிறான். தருமரும் "சரி, கேள்" என்கிறார். யட்சன் கேட்ட கேள்விகளுள் ஒன்று "உலகிலேயே மிக அழகானவள் யார்?" என்பது. அதற்கு
தருமனின் விடை "காதலனின் கண்களில் காதலி" என்பது. மெய்தான், எத்தனை உலக அழகிகள் இருந்தால் என்ன, தன் காதலியின் (மணமானவர்கள் மனைவி என்று படிக்கவும்) அழகுக்கு முன்னே அவர்கள் எம்மாத்திரம்! இருவரும் மற்றவரின் ஏதோவொன்றை வியந்து, விரும்பி, மயங்கித் தன்வயமிழக்காவிட்டால் அக்காதல் ஆழமற்றதாகிவிடும். இன்பம் துய்த்த மறுகணமே கொல்லும் 'கறுப்பு விதவை' (Black widow) என்னும் சிலந்தியின் செயலைப் போன்ற, தன்னலத்தையே அடிப்படையாகக் கொண்டதாகிவிடும்.

தகுதி என்ற சொல் மிக முக்கியமானது. சாதாரணமாகப் பொருளாதாரம், ஜாதி, அந்தஸ்து, உத்தியோகம், திறமை, செல்வாக்கு என்றெல்லாம் பொருள் கொண்டுவிடுவர். இவை உயர உயர அவர்கள் இன்னொரு பாலாருக்கு அதிகக் கவர்ச்சியாகத் தோன்றுவர். உதாரணமாக ஒரு சிறந்த ஓவியனை, சிறந்த
நாட்டியத் தாரகையை விதப்பான (admiring) காமக்கண்ணோடு பார்ப்பவர் பலர் இருப்பார். ஆனால் அத்தகைய காமம் நீடிப்பதில்லை. இத்தகைய தகுதிகளை உடையவர்களும் தம்மால் யாரையும் எளிதில் அடைய முடியும் என்று கணக்குப் போடுவர். இது சில இடங்களில் பலித்தாலும், பல இடங்களில் பொய்க்கும்.

எனவே தமிழ்ச் சான்றோர் கருத்துப்படி ஒரு பெண்ணைக் காமத்தோடு தீண்டத் தகுதி உடையவன் அவளை மணந்தவன் ஒருவனே. இந்த வரையறை ஆண்களுக்கும் பொருந்தும் என்று கொண்டுவந்தவன் மகாகவி பாரதி,

கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அ·து பொதுவில் வைப்போம்

(பெண்கள் விடுதலைக் கும்மி)

என்று கூறியதன் மூலம். இப்போது பரவலாக ஒருவரை ஒருவர் அலுவலகத்திலும் இதர சூழ்நிலைகளிலும் தீண்டுதல் சகஜமாகிவிட்டது. இதைத் தவறு என்று சொல்லும் கட்டுப்பெட்டி அல்ல நான். ஆனால் காமத்தின் செவ்வி துய்க்கக் கணவன் - மனைவி உறவு என்னும் தகுதி இல்லையென்றால் அது இறுதியில் நன்மையில்
முடியாது. தகாத உறவுகளுக்கான பெரிய விலையை மனிதகுலம் செலுத்தத் தொடங்கிவிட்டது என்று சொல்வதோடு நின்று, மிச்சத்தை உங்கள் உய்த்துணர்வுக்கு விடுகிறேன்.

செவ்வி என்பதற்கு பருவம், காலம், ஏற்ற சமயம் என்ற பொருள்களும் உள்ளன. இவற்றைப் புரிந்துகொள்வது கடினமல்ல என்பதால் நான் இங்கு விவரிக்கவில்லை. காட்சி என்றும் ஒரு பொருள் உள்ளது. இதை வெறும் கண்ணால் பார்ப்பது என்பதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. 'தரிசனம்' என்று கொள்ளவேண்டும். இந்தக்
காதல் தன்னுள்ளே தோற்றுவிக்கும் காட்சி என்ன, தன் வாழ்வை இது எப்படி அடியோடு புரட்டிப் போட்டுவிடும், அதன் உச்சத்தில் தான் முன்பு எப்போதும் உணராத உயரத்தைத் தொடுவோம் -- இவைதான் தரிசனம். இந்தக் கேள்விகளில் கிடைக்கும் விடை எதுவேனும் மனிதனை விலங்கு நிலைக்கு இறக்குவதானால் அவன் காமத்தின் செவ்வி தலைப்பட்ட சிலருள் இல்லை.

செவ்வி என்றால் புதுமை. அவசரமாக ஓடிப்போய் ஒவ்வொரு முறையும் புதிதாய் ஒவ்வொருவரோடு உடலுறவு கொள்வது (one night stand) என்பதாக எண்ணிவிட வேண்டாம். நாம் யாரைக் காதலிக்கிறோமோ அவரே ஒவ்வொரு நாளும் புதியவராக, புதுப்புதுச்சுவை தருகிறவராக இருக்கிறாரா? இது அந்த ஆணிடமோ, பெண்ணிடமோ இருக்கும் உள்ளார்ந்த குணமாக அல்லாது, நமது அன்பு மிகுதியாலே அவரிடம் 'காணும்' புதுமையாகக் கூட இருக்கலாம்.

'செட்னா' என்று href=" http://www.gps.caltech.edu/~mbrown/sedna/ " புதுக்கோளைக் கண்டறிந்திருக்கின்றனர். பத்தாவது கோள் என்று சொல்கின்றனர். சரி, இவர்கள் கண்டுபிடிக்கும் வரை அந்தக் கோள் இல்லாமலா போயிருந்தது? இல்லையே! ஆனால் தெரிந்துகொண்டவுடன் 'அட, இவ்வளவு நாளா அது இருந்திருக்குது, நமக்குத் தெரியாமல் போயிடுச்சே' என்று தோன்றுவதில்லையா! அதுபோலத்தான் காதலியின் முயக்கமும். ஒவ்வொருமுறையும் அவளுடைய புதிய பரிமாணத்தை, சுவையைக் கண்டதும் நாம் நம்முடைய அறியாமையைத் தான் வைதுகொள்ள வேண்டியதாயிருக்கிறது. அதைத்தான் வள்ளுவர் கூறினார்:

அறிதொறும் அறியாமை கண்டற்றால் காமம்
செறிதொறும் சேயிழை மாட்டு

(குறள்: 110; புணர்ச்சி மகிழ்தல்)

[ஒன்றைப் புதிதாகக் கற்கின்ற ஒவ்வொரு முறையும் நம்முடைய அறிவுக்குறைவு வெளிப்படுவதுபோல, அழகிய நகைகளை அணிந்த இவளிடம் ஒவ்வொரு கூடலிலும் புதிதாய் ஒன்றைக் காண்பதும் நிகழ்கிறது].

ஆக, காமசுகம் என்பதில் செவ்வி என்பதற்கு இணையான அழகு, காட்சி, புதுமை ஆகியவை எவ்வளவு முக்கியம் என்பதையும், அது எப்படிச் சிலருக்கே வாய்க்கும் என்பதையும் கொஞ்சம் நுணுகிப் பார்த்தோம்.

மீண்டும் ஆரம்பத்தில் பார்த்த குறள் சொன்னபடி 'மலரினும் மெல்லி'தாகிய காமத்தின் 'செவ்வி தலைப்படும்' சிலரில் நீங்களும் ஒருவரா? யோசித்து விடை கூறுங்கள். அவசரமில்லை.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

பெண் மொழி

நருங்கின உறவினர் குறித்த துயரச் செய்தியைக் கேட்டதும், பால் குடித்துக்கொண்டிருந்த தன் கைக் குழந்தையை வாரியெடுத்துக் கொண்டு புறப்பட்டாள், அந்தப் பெண். பேருந்தில் ஏக நெரிசல். அது நிறுத்தத்தில் சில நிமிடங்களே நிற்கும் என்பதால் இறங்க வேண்டிய இடம் வந்ததும் அவசர அவசரமாகக் க¦ழிறங்கினாள். தன்னை மறந்து உறவினர் வ¦ட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்துகொண்டிருந்த அவளை சாலையோரமாக நின்றுகொண்டிருந்த விடலைப் பையன்கள் வெறித்துப் பார்த்தார்கள். சிலர் பச்சையாக உறவுக்கு அழைத்தார்கள். சில ஆண்கள் ஓரக் கண்ணால் பார்த்து விட்டு கண்டும் காணாதது போலிருந்தார்கள். சிலர் தலையில் அடித்துக்கொண்டார்கள். ஒரே ஒரு கிழவி மட்டும், "ஏய், மூடிக்கிட்டுப் போ!" என்றாள். குனிந்து பார்த்தாள் அந்தப் பெண். குழந்தை பால் குடித்துக்கொண்டிருந்ததால் அவள் ரவிக்கை திறந்து கிடந்தது. அப்போதுதான் நினைவு வந்தவளாவாக "ஐயோ! என் குழந்தை!" என்று அலறிக்கொண்டு பஸ்ஸை நோக்கி ஓடினாள் அவள்.

பெண்களின் மார்பகங்களைப் பார்க்கும் போது ஆண்களுக்குக் கட்டில் ஞாபகம் வருகிறது. பெண்களுக்கோ குழந்தை ஞாபகம் வருகிறது என்று சொல்ல முற்படும் இந்தக் கதையை எப்போதோ படித்திருக்கிறேன். ஆனால் அது இப்போது அடிக்கடி ஞாபகம் வருகிறது.

ஓராண்டுக்கு மேலாகப் பெண் மொழி என்பதைப் பிரப்சினையாக வரித்துக்கொண்டு தமிழ்நாட்டில் உள்ள இதழ்கள் கட்சி கட்டிக்கொண்டு சாமியாடிக் கொண்டிருக்கின்றன. ஒரு பெண் கவிஞர் முலைகள் என்று தன் கவிதைத் தொகுப்புக்கு பெயர் சூட்டி வெளியிட்டார். அப்போது ஆரம்பித்தது இந்த சர்ச்சை. உறுப்புக்களைப் பற்றியும் உடல் உறவைக் குறித்தும் பெண்கள் எழுதுவதை விமர்சிக்கும் ஆண் எழுத்தாளர்களைப் பற்றி இன்னொரு பெண் கவிஞர் வெளியிட்ட கருத்துக்கள் இந்தச் சர்ச்சையை கொழுந்துவிட்டு எரியச் செய்திருக்கிறது. உடல்மொழி/ பெண்மொழி என்று இந்த சர்ச்சை இந்தியா டுடே, தினமணி, குங்குமம், கணையாழி, அமுதசுரபி, குமுதம் குடும்பத்தை சேர்ந்த த¦ராநதி, தலித் முரசு, மனுஷி என நோக்கிலும், தரத்திலும், வேறுபட்டு நிற்கும் பல பத்திரிகைகளில் இந்த சர்ச்சை இடம் பெற்று வருகிறது.

காலங்காலமாக ஆண்கள் பெண்களது அங்கங்களைப் பற்றி எழுதி வந்திருக்கிறார்கள். நாங்கள் எழுதுவதில் என்ன தவறு என்று பெண்நிலைவாதிகள் வாதிடுகிறார்கள். இது மதவாத வலதுசாரிகள் வற்புறுத்துகிற கட்டுப்பெட்டித்தனத்திற்கு எதிரானது என்ற எண்ணத்தில் இடதுசாரிகள் இந்தக் குரல்களை ஆதரித்து மேடைகளில் பேசி வருகிறார்கள். இப்படியெல்லாம் எழுதக் கூடாது என்று சொல்வது ஒருவகைத் தணிக்கை, கருத்து சுதந்திரத்திற்கு எதிரான மனோபாவம் என்று கருதுகிறவர்கள் இந்தப் போக்கை அதிகாரத்திற்கு எதிரான ஒரு குரலாகப் பார்க்கிறார்கள். இதனால் பெண்நிலைவாதிகள், இடதுசாரிகள், முற்போக்காளர்கள் (திமீனீவீஸீவீsts, லிமீயீtவீsts, லிவீதீமீக்ஷீணீறீs) இவர்கள் இந்த விஷயத்தில் ஒரு அணியில் நிற்கிறார்கள்.

பெண்கள் தங்கள் உடலுறுப்புக்களைப் பற்றி எழுதுவது தமிழுக்குப் புதிதல்ல. எரிக்கா ஜங் ஆங்கிலத்தில் இது போன்று எழுதுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆண்டாள் எழுதியிருக்கிறாள். பெண்கள் தங்கள் உடலைப் பார்க்கும் பார்வைக்கும் ஆண்கள் பெண்களின் உடலைப் பார்க்கும் பார்வைக்கும் வேறுபாடு உண்டு என்பதால் இதைக் குறித்து இத்தனை உணர்ச்சித் த¦விரமான சர்ச்சை தேவை இல்லை.

இந்தப் பிரச்சினைக்கு வேறு சில பரிமாணங்கள் இருக்கின்றன என்பதை சக பெண் படைப்பாளிகள், சிந்தனையாளர்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். பெண்ணை உடல் ர¦தியாக மட்டுமே பார்ப்பது, அவளது அங்க லாவண்யங்களைக் கொண்டே அவளை அளவிடுவது என்ற கருத்தியல் தமிழ் சமூகத்தில் ஆழ வேரோடிக் கிடக்கிறது. உத்தியோகம் புருஷ லட்சணம், பெண்ணுக்கு அழகு உடல் என்ற பார்வை இங்கு அங்க¦கரிக்கப்பட்டதாக இருந்திருக்கிறது. இதன் காரணமாக பெண்ணுக்குக் கல்வி மறுக்கப்பப்பட்டதும், கல்வி இரண்டாம் பட்சமாக்கப்பட்டதும் உண்டு. சிறு வயதிலிருந்தே பெண் தனது தோற்றத்தில் கவனம் செலுத்துமாறு பெற்றோர்களாலேயே வற்புறுத்தப்பட்டதும் உண்டு. அழகு குறைவான பெண்ணை, அவள் படிப்பில் கெட்டிக்காரியாக இருந்தாலும், குறைத்து மதிப்பிட்டதுண்டு. இது போன்ற பெண்ணின் உடலை முன்னிறுத்திய கருத்தாக்கம் ஏற்படுத்திய சமூகக் கேடுகள் ஏராளம். வரதட்சிணை, சிசுக் கொலை, விபசாரம், பலதார மணம், ஆணாதிக்கம் போன்ற பல த¦மைகள் இந்தக் கருத்தாக்கத்தில் வேர் கொண்டு நிற்கின்றன.

இந்த நிலையை மாற்றுவதற்கு கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாகப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. பெண் என்பவளும் ஆணைப் போன்றவள்தான். அவளுக்கும் அறிவுண்டு, மனமுண்டு, சிந்தனைத் திறன் உண்டு என்ற கருத்தை நிலைநிறுத்தத் தேவைப்பட்ட முயற்சிகள் கொஞ்ச நஞ்சமல்ல. மகாகவி பாரதி தொடங்கி ஆக்கபூர்வமான இலக்கியங்கள் பெண்களை உடல் ர¦தியாக மட்டும் அணுகும் மனோபாவத்தை மாற்ற முயன்று வருகின்றன. பெரியார் போன்ற சமூக சிந்தனையாளர்கள் இந்த லட்சியத்தை நோக்கித் தமிழர்களை இட்டுச் செல்லத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார்கள்.

இந்த இடைவிடாத முயற்சிகள் வ¦ண் போய்விடவில்லை. ந¦ண்ட போராட்டத்திற்குப் பிறகு சம¦பகாலமாகத்தான் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் தங்கள் அறிவாற்றல், கல்வி போன்ற தகுதிகளின் அடிப்படையில் பதவியும் அதிகாரமும் பெறத் துவங்கி இருப்பதைப் பார்க்கிறோம். பெண்களுக்கு கல்வி மறுக்கும் மனிதர்களை விந்தை மனிதர்களாகப் பார்க்கும் பார்வை ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. இருந்தும் இவையெல்லாம் இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது. ஒரு துவக்கமாகவே இருக்கிறது. இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்பது மட்டுமல்ல, இந்த மனோபாவத்தை பேணிப் பாதுகாத்து செழிக்க செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. இது வெறும் மனோபாவமாக முடிந்து போகாமல் ஒரு கலாசாரமாகத் தழைக்கச் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது.

இப்படிச் சொல்வதற்குக் காரணமுண்டு. இன்று சரியோ, தவறோ, இந்தியா தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என்ற பொருளாதார கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருப்பதன் காரணமாக விரைவாகத் தனியார்மயமாகி வருகிறது. தனியார்மயப் பொருளாதாரம் லாபம் ஈட்டுவதை முதன்மையாகக் கொண்டது. அதன் பொருட்டு கன்ஸ்யூமரிஸ்ட் கலாசாரத்தை அது உயர்த்திப் பிடிக்கும். கன்ஸ்யூமரிஸ்ட் கலாசாரத்தில் பெண்கள் ஒரு நுகர்பொருளாகவே, உடல் சார்ந்தே பார்க்கப்பட்டு வருகிறார்கள்.

தமிழ் வெகுஜன ஊடகங்களும் பெண்களை உடல் ர¦தியாகப் பார்க்கும் மனோபாவத்தைத் த¦விரப்படுத்தி வருகின்றன. கறுப்பாக இருக்கும் பெண் தந்தைக்கு சுமையாகி விட்டதாக தொலைக்காட்சி விளம்பரங்கள் சத்தியம் செய்கின்றன. சாதனை செய்பவனாக அர்ஜுன்தான் இருக்கிறான். ஆர்த்தி அல்ல. அவனுக்குத் தேவையான பாலை பார்த்து வாங்குகிற 'புத்திசாலித்தனம்' மட்டும்தான் அவனது அம்மாவிற்கு. கிரிக்கெட் வர்ணணைக்குக் கூட அழகான பெண்தான் வேண்டும் என்ற நிலையைத் தொலைக்காட்சிகள் உருவாக்கிவிட்டன. கிரிக்கெட் வர்ணனைக்கு 'அழகான' மந்த்ரா பேடிதான் வர வேண்டும், கிரிக்கெட் பற்றி நன்கு அறிந்த முன்னாள் கிரிக்கெட் காப்டன் சுமதி அய்யர்அல்ல. சினிமாவைப் பற்றிப் பேச்சே வேண்டாம். நடிக்கத் தெரிந்த கறுப்பு நிற சாவித்திரிகளும், சரிதாக்களும் காணாமல் போய்விட்டார்கள். ஆன்ம¦கம் என்ற பெயரில் மதவாதம் தலைதூக்குகிற காலம் இது. பெண்களை ஓர் இரண்டாந்தர பிரஜையாகவே எல்லா மதங்களும் கருதி வந்திருக்கின்றன.

பொருளாதாரம், ஊடகங்கள், மதங்கள் இவை ஒரு சமூகத்தின் விழுமியங்களில் (ஸ்ணீறீuமீ sஹ்stமீனீs)ஆழமான தாக்குதல்களை ஏற்படுத்தக் கூடியவை. அதன் மூலம் ஒரு சமூகத்தின் போக்கை மாற்றக் கூடியவை. அவை விரும்பத்தாகாத போக்குகளை உருவாக்குமானால் அவற்றை அரசியல், இலக்கியம், அறிவியல் மனோபாவம் இவற்றின் துணைகொண்டுதான் அதற்கு எதிரான மாற்று விழுமியங்களை உருவாக்க முடியும்.

இப்படி ஒரு மாற்றுக் கலாசாரத்தை உருவாக்க வேண்டிய கடமை இலக்கியத்திற்கு இருப்பதை மறந்து, பெண்களே தங்கள் உடலை முன்னிறுத்தி எழுதத் தலைப்படுவார்களேயானால் அது பெண்ணை உடல் ர¦தியாக அணுகுகிற மனோபாவத்திற்கு ஊக்கம் கொடுப்பதாக ஆகிவிடும். அந்த மனோபாவத்தைப் பெண்களே அங்க¦கரிப்பதாகிவிடும். ஏற்கனவே தாக்குதலுக்கு உள்ளாகி வரும் முற்போக்கான சிந்தனைப் போக்குகள் மேலும் நலிவடையும். இதற்குப் பெண்களே காரணமாக இருந்துவிடலாமா?

விழுமியங்களைக் காப்பது, குடும்பத்தில் ஆகட்டும், சமூகத்தில் ஆகட்டும், பெண்களின் பொறுப்பு என்று காலங்காலமாக போதிக்கப்பட்டு வந்திருக்கிறது. அதே புளித்துப் போன வாதத்தை ந¦ங்களும் சொல்ல வேண்டாம் என்று பெண்கள் ச¦ற வேண்டாம். விழுமியங்களை உருவாக்குவதிலும், பேணுவதிலும், நிலை பெறச் செய்வதிலும் ஆண்களுக்கும் சரி பங்கு உண்டு என்பதை நான் மறுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் இலக்கியம் என்பதுதான் முக்கியம் அதை எழுதியவர் ஆணா பெண்ணா என்பதல்ல என்பதுதான் என்னுடைய பார்வை. உடலை பிரதானப்படுத்தி எழுதும் புஷ்பா தங்கதுரையின் எழுத்துக்கள் எவ்வளவு கண்டிக்கத்தக்கவையோ அதே அளவு கண்டிக்கத்தக்கவைதான் சிற்றிதழ் பெண் கவிஞர்களின் 'ஆபாச' எழுத்துக்களும். இரண்டிற்கும் நோக்ககங்கள் வேறாக இருக்கலாம். ஆனால் விளைவுகள் ஒன்றாகத்தான் இருக்கும்.

நன்றி-பெண்ணேநீ

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.